என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95208"
- முன்பக்க கதவு உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
- அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி, அதனடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்மகன் பிரகாஷ்.
இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளதால் பிரகாஷின் தந்தை ராமகிருஷ்ணன் அவ்வப்போது வந்து வீட்டை பார்த்து சென்று வந்துள்ளார்.
கடைசியாக நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் பின்னர் வீட்டை பூட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் வந்தபோது வீட்டின் கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பூஜையறை உடைக்கப்பட்டு உள்ளே மர பீரோவில் வைத்திருந்த 54 சவரன் தங்க நகைகள், 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 21ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியன கொள்ளையடிக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராமகிரு ஷ்ணன் குத்தாலம் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.
உடனடியாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா, டி.ஸ்.பி வசந்தராஜ் மற்றும் குத்தாலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அதன் அடிப்ப டையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள அவ்வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டதால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 24-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 503 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து 68 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கு விற்கிறது.
தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டு வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.
சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.35,968-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,496 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,800 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80 ஆகவும் உள்ளது.
தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்வு காணப்பட்டதால் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்ததால் கடந்த 20-ந்தேதி பவுன் ரு.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இதற்கிடையே தங்கம் விலை கடந்த 18-ந்தேதி முதல் குறைந்தபடியே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரு.768 குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரு.36 ஆயிரத்து 136-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 517-க்கும் விற்றது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்தபடி உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.67 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரு.67.60-க்கு விற்கிறது.
தங்கம் விலை கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர் சரிவு நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மேலும் விலை குறையும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் நிலையில் கடந்த வாரம் பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.
இதற்கிடையே கடந்த 20-ந்தேதி பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36 ஆயிரத்து 904-க்கு விற்றது.
இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.632 குறைந்தது.
ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 272-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ.4 ஆயிரத்து 534ஆக உள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.69 ஆயிரத்து 500ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.632 குறைந்து இருப்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
தங்கம் விலை சமீபத்தில் பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. சில நாட்களாகவே விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.37,272-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து ரூ.37 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,625 ஆக உள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71-க்கு விற்கிறது.
தங்கம் விலை நேற்று பவுனுக்கு மீண்டும் ரூ. 37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் ரூ.736 அதிகரித்து பவுன் ரூ.37 ஆயிரத்து 168-க்கு விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,008-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 626 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்கிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்துள்ளது.
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.36 ஆயிரத்து 112-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 216-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 527 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.69 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்கிறது.
தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்று பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.464 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 40-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 328-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 541 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்கிறது. தங்கம் விலை இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.752 உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்