search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை"

    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீடடிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. அப்படி வீட்டிலிருந்தே சிறப்பாக பணியாற்றுவது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்கள் அதற்கு அவசிய தேவையானவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும். முதலாவது மடிகணினி மற்றும் எழுதுவதற்கு வசதியான டெஸ்க் வாங்க வேண்டும். அடுத்து முதுகுவலி, கழுத்து வலி வராத அளவிற்கு சொகுசான நாற்காலி, தேவையிருந்தால் ஸ்கேனர், பிரிண்டர் போன்றவற்றையும் வாங்க வேண்டும்.

    அலுவலக பணியாற்றும் போது அதற்காக படுக்கை அறையை தேர்ந்தெடுக்கக் கூடாது. படிக்கும் அறையாக இருந்தால் வேலை சிறப்பாக அமையும். படுக்கை உங்கள் கண்ணில் தெரியும் வகையில் இருந்தால் உங்களுக்கு வேலை ஓடாது. தூக்கத் தான் தோன்றும். எனவே அந்த நிலையை மாற்ற வேண்டும்.

    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    வேலை வாங்கித்தருவ தாக ரூ.4 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    மதுரை:

    மதுரை ஆனையூர் ஆபீசர் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவரிடம் திருமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த பாலாஜி (33), அவரது மனைவி யாகினி, துரை (65), அவரது மனைவி லட்சுமி (60), விராட்டிப்பத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (40) ஆகிய 5 பேரும் ராஜேந்திரனின் மகனுக்கு வருமானவரித்துறையிலும், மருமகளுக்கு வங்கியிலும் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5,75,000 பெற்றுள்ளனர்.

    பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் ராஜேந்திரன் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு கேட்டார். அவர்கள் 5 பேரும் 2 தவணைகளில் ரூ.1,65,000 திருப்பிக் கொடுத்து விட்டு மீதித்தொகை ரூ.4 லட்சத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இது குறித்து ராஜேந்திரன் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, சம்பந்தப்பட்ட பாலாஜி, யாகினி, துரை, லெட்சுமி, நாகேந்திரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கடன் சுமையால் முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்துள்ளது. #SpiceJet #SpiceJethires #JetAirways #JetAirwaysemployees #JetAirwayspilots
    மும்பை:

    கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் முற்றிலுமாக முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனது.

    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டை பிடிக்க  ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய விமானங்கள் வாங்கவும், வெளிநாடுகளில் இருந்து பல விமானங்களை வாடகைக்கு பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமானங்களில் பணியாற்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விரும்பியது. 

    அதன் அடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இன்று தெரிவித்துள்ளார். #SpiceJet #SpiceJethires #JetAirways #JetAirwaysemployees  #JetAirwayspilots
    தேனி அருகே வேலை வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    போடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44) மற்றும் அருண்குமார், செல்லமுத்து மற்றொரு விஜயகுமார், குமரவேல், பாலமுருகன் ஆகியோர் உள்பட 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பெரியகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சாம்சுல்ரகுமான் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் இதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என கூறி 7 பேரிடமும் தலா ரூ.5 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.

    இதனால் 7 பேரும் அவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் பணத்தை திருப்பி தர முடியாது. மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து 7 பேரும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தென்கரை போலீசார் மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது.
    எப்போதும் போல, எல்லோரையும் போல யாரும் இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனும்போது, மாற்றம் பெறாத எதுவும், வித்தியாசமாக இல்லாத எவருடைய வாழ்வும் அத்தனை வரவேற்பைப் பெறாது. வந்து போவதில் என்ன இருக்கப் போகிறது என்று வித்தியாசமாக இருப்பவர்களே செய்தியிலும், சரித்திரத்திலும் இடம்பெறுகின்றனர்.

    எப்போதோ படித்தது. ஆப்பிரிக்காவில் அத்தனை அதிகமாய் நாகரிகம் பரவாத நேரம். பிரபலமான செருப்பு நிறுவனம் தன் காலணிகளை அங்கே சந்தைப்படுத்துவதற்காக ஒரு விற்பனைப் பிரதிநிதியை அனுப்புகிறது. போனவன் திரும்பிவந்து தந்த பதில், “அங்கே யாருமே செருப்பு அணியாதபோது, எப்படி செருப்பு விற்பது?” சில மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு இளைஞன் சென்றிருக்கிறான்.

    சென்றடைந்த சில நாள்களுக்குள் ஆயிரக்கணக்கான செருப்புகளைத் தருவித்துக் கொண்டதோடு, செருப்பு அணிவது எத்தனைப் பாதுகாப்பானது என்பதை அங்குள்ள மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததோடு, சிலருக்கு இலவசமாகவும், சிலருக்குக் குறைந்த விலையிலும் விற்றுச் சந்தைப்படுத்த தொடங்கியதைக் கூறுகிறான். இதுதான் வித்தியாசமாக சிந்திப்பதென்பது.

    புதிதாகச் சிந்திப்பது இப்போதல்ல, அப்போதே இருந்திருக்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றி தோல்விகளைப் பற்றிச் சிந்திக்காமலும், கவலைப்படாமலும் உழைத்துக் கொண்டிருந்தவர் தாம் புதிதாகக் கண்டுபிடித்த மின் குமிழை (பல்ப்) பத்திரிகைச் செய்தியாளர்களிடம் காட்டி எரிவதை அறிமுகப்படுத்த விழைகிறார். தன் உதவியாளரை அழைத்து அதை பத்திரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்த விடுதிக்குக் கொண்டுவரக் கொடுத்திருக்கிறார்.

    உதவியாளர் பாவம், வரும் வழியில் அதைக் கீழே தவறவிட்டு உடைத்து விடுகிறார். வழக்கம் போலத் தோல்வி என்றாலும், துவண்டு போகாத அவர் மறுவாரம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதே நபரிடம் அதைக் கொண்டுவரப் பணித்தபோது அவருடைய நண்பர்கள் “இவன் பொறுப்பற்றவனாயிற்றே, மறுபடியும் உடைத்து விடுவானே” என்றபோது, “ஒருமுறை தவறு செய்தவன்தான் மறுமுறை கவனமாக இருப்பான்” என்று பதிலளித்தார் எடிசன்.

    “இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
    அதனை அவன் கண்விடல்”

    என்பது நிர்வாகக் கலை. எவன் சரியாகச் செய்வான் என்பதை விடவும், எவன் பொறுப்பாகச் செய்வான் எனும்போது தவறு செய்தவன்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று வித்தியாசமாக எடிசன் நினைத்ததுகூட திறமையான நிர்வாகக் கலைதான்.

    பல நிறுவனங்களில் ‘வேலை தெரியாது, செய்ய முடியாது’ என்று சொல்லியே பலர் வேலைகளிலிருந்து நழுவிக் கொள்வார்கள். அதையே காரணமாக வைத்து பெரிய பொறுப்புகளிலிருந்தும் தம்மை பத்திரமாக விடுவித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு “வேலை கள்வர்கள்” என்றுகூட ஒரு பெயருண்டு. அவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வேலை வாங்கிக் கொள்வது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.

    சோம்பேறிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பது பழைய சித்தாந்தம். ஆனால் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் “சோம்பேறிகளிடம்தான் வேலைகளை ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் சீக்கிரமாகச் செய்து முடிக்கும் எளிமையான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்” என்பார். இதுவோர் வித்தியாசமான கோட்பாடு. வெற்றிகரமான விளைவுகளுக்கு உகந்ததாக அவர் கண்டுபிடித்த இக்கோட்பாடு பெரிதும் வரவேற்கத்தக்கது.

    மற்றுமோர் மாற்றுச் சிந்தனை. நியூயார்க் டைம்ஸ் நிருபர் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு காலம் எப்படி மாறியிருக்கிறது என்பதை உணர்த்துவார். முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு உணவூட்டும் அமெரிக்கத் தாய், தன் பிள்ளைகள் சிதறடிக்கும் உணவைக் காட்டி, “இப்படியெல்லாம் உணவை வீணடிக்கிறாயே, இந்த உணவுக்குக்கூட வழியில்லாமல் இந்தியாவிலும், சீனாவிலும் எண்ணற்ற குழந்தைகள் தவிக்கிறார்கள்” என்று கூறியதுபோக, இப்போது, “இப்படி உணவை வீணடிக்கிறாயே. இன்னும் சில நாள்களில் இதுகூட நமக்குக் கிடைக்காமல் செய்ய இந்திய சீன இளைஞர்கள் நமது வாய்ப்புகளை இங்கு வந்து பறிக்கப் போகிறார்கள்” என்று எச்சரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அச்சுறுத்தல் என்பது அறிவுறுத்தலைவிடவும் வலிமையானது.

    காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது. இரண்டு இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் கல்வித் தகுதியிலும் நிறுவனத் தேர்விலும், நேர்காணலிலும் சமமாகவே மதிப்பெண்கள் பெற்றிருக்க யாரைத் தேர்வு செய்வது, யாரைத் தவிர்ப்பது என்று நிர்வாகம் தவித்தபோது இருவரையும் அழைத்து ஒரு கேள்வியைக் கேட்கிறார் நிறுவனத் தலைவர்.

    “இந்த வேலை கிடைக்காவிட்டால் நீ என்ன நினைப்பாய் எப்படி உணர்வாய்” என்றபோது, “என்ன நினைப்பது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்வேன்” என்கிறான் முதல் இளைஞன். அடுத்த இளைஞனுக்கும் அதே கேள்வி. அதற்கு அவன் தந்த பதில், “உங்கள் நிறுவனம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். வேறென்ன நினைப்பது? “இரண்டாவது இளைஞனே தேர்ந்தெடுக்கப்படுகிறான். இது வித்தியாசமான பதில் மட்டுமல்ல, நம்பிக்கை மிகுந்த விவேகமான பதிலும்கூட. இதுதான் சிலரின் வெற்றி ரகசியம். வித்தியாசமாக சிந்தியுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

    ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்
    விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...
    வாழ்க்கை விளையாட்டு விஷயமல்ல. மகிழ்ச்சியாக இருப்பதாய் நினைத்து வேடிக்கையாய் பொழுதுபோக்கி கழித்தவர்கள், பின்னாளில் தனது தவறு களுக்காக தினம் தினம் வருந்திய வரலாறுகள் உண்டு. நீங்கள் மாணவப் பருவத்திலும் சரி, வேலை உலகத்திலும் சரி விளையாட்டுக் குணங்களைக் குறைத்துக் கொண்டு, விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...

    மாணவப் பருவத்தில் நிறைய மதிப்பெண் பெறுவதை லட்சியமாகக் கொண்ட சிலர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதும், இனி எல்லாம் சரியாக அமைந்துவிடும் என்று ஆமை வேக செயல்பாட்டிற்கு சென்றுவிடுவதுண்டு. அதுபோல நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மதிப்புமிக்க ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், இனி ஒரு கவலையும் இல்லை என்று அமைதி அடைந்துவிடுவது உண்டு. இன்னும் சிலர், ஏதாவது ஒரு அரசுப் பணிக்குச் சென்றால் போதும் என்று நெடிய முயற்சி செய்து பணியில் சேர்ந்ததும் தனது வளர்ச்சிக்கு இதுபோதும் என்று முடங்கிவிடுவது உண்டு.

    ஆனால் சிறிது காலத்திலேயே, தாங்கள் இருக்கும் பணி எதிர் காலத்திற்கு பலன் தருமா? என்ற பயம் வந்துவிடும். அப்போது பல தடைகள், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உங்களைச் செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும். மேல் பதவிக்கு போட்டியிட வயது வரம்பு தடையாக மாறி அவதிப்படுபவர்கள் உண்டு. இருக்கிற வேலையை விட்டுவிட்டு, அடுத்த பதவிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் உண்டு. செய்யும்வேலையுடன் கூடுதலாக பயிற்சி செய்ய முடியாமல் திணறு பவர்கள் உண்டு. குடும்பச் சூழல், பொருளாதார சூழல், கடன்கள், தேவைகள், நகர்ப்புற நெருக்கடி, கிராமப்புற நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துகொண்டு வாழ்வையே விரக்தியாக பார்க்க வைக்கும்.

    இதுபோன்ற நெருக்கடிகள் எப்போதும் வரக்கூடாதென்றால், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான செயல்பாடு அவசியம். இடையில் செயல்பாடற்ற நிலையிருந்தால் இதுபோன்ற இக்கட்டான நிலையில் மாட்டிவிடும் வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதை விளக்கும் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம்...

    உலகின் புகழ்மிக்க தொழில்அதிபரும், பணக்காரருமான ராக்பெல்லரிடம், விமானப் பயணத்தின்போது அருகில் இருந்த ஒருவர் கேட்டாராம், “உங்களிடம்தான் போதுமான அளவுக்கு செல்வம் இருக்கிறதே, இன்னும் ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்பது அந்த பயணியின் கேள்வி. அதற்கு ராக்பெல்லர் என்ன சொன்னார் தெரியுமா? “உண்மைதான், நாம் மிக உயரமான இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது விமான இயக்கத்தை நிறுத்திவிட்டால் உயரமான இடத்தில் நிலைத்துவிடுவோமா? என்று பதில் கேள்வி கேட்டவர், “அது போலத்தான் செல்வம் சேர்ந்துவிட்டாலும் உழைப்பை நிறுத்த முடியாது” என்று விளக்கம் அளித்தாராம்.

    இருக்கும் நிலையில் திருப்தி அடைந்து விடக்கூடாது என்பது இதன் பொருளல்ல. எல்லா காலத்திலும் நிலைக்கும்படியான தகுதியும், உழைப்பும் உங்களிடம் இருக்க வேண்டும். அத்தகைய விவேகமும், தலைமைப் பண்பும் இருக்கும் வரை நீங்கள் வீழ்ந்துவிடாமல் இருப்பீர்கள். அது கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், அதைச் செய்து முடிப்பதில் உங்கள் விவேகமும், மேலாண்மைப் பண்பும் எல்லோரும் போற்றும்படியாக இருக்க வேண்டும்.

    உங்களைப் புறக்கணித்து ஒதுக்கும் வகையில் உங்கள் செயல்பாடு எப்போதும் இருந்துவிடக்கூடாது. எப்போதும் உங்களுக்கு எதிரான, எதிர்மறையான விஷயங்கள் விவாதிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. உங்களை சிறுமைப்படுத்தும் மதிப்பிடல்கள் தோன்றக் கூடாது.

    யாரும் உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் அமைய மாணவப் பருவத்திலும், வேலை உலகத்திலும் நீங்கள் செய்ய வேண்டியவை...

    எல்லாவற்றுக்கும் பொறுப்பாளராகுங்கள்: எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியும் என்று நம்புங்கள். அதிகமான வீட்டுப்பாட பயிற்சிகள், புதுமையான பயிற்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் செய்யுங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பணிகளை, உங்கள் மேல் திணிக்கப்பட்டதாக நினைக்காமல், என்னால் செய்ய முடியும் என்பதை என்பதை எல்லோருக்கும் புரிய வையுங்கள். பொறுப்பேற்று செயல்படுங்கள். மேலதிகாரியிடம் நற்பேறு வாங்குவதற்காக பணி செய்யாமல், ஆத்மார்த்தமான பணியால் மன மகிழ்ச்சி கொள்ளுங்கள். அது இன்றில்லா விட்டாலும் ஒருநாள் உங்களை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும்.

    முடிவு எடுக்க தயங்காதீர்கள் : வெற்றியைத் தடுக்கும் முக்கிய எதிரி தயக்கம். “ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதைவிட தவறான முடிவு மேலானது” என்பது வணிக வாக்கு. தொடங்காமல் இருப்பதைவிட தோல்வி பலபடி முன்னேற்றம்தான். எனவே எந்த சூழ்நிலையிலும் தயங்கி நிற்பதுடன் ஒரு முடிவெடுத்து செயல்படுவது வெற்றியை நெருங்கிச் செல்ல பெரிதும் கைகொடுக்கும். இப்போது உங்களுக்கு தடையாய் இருக்கும் சூழலை எதிர்கொள்ள நீங்கள் எடுக்கும் முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் செயல்படுங்கள், பலன் வெற்றியாய் மாற வாய்ப்புகள் அதிகம்.

    நட்புறவுச் செயல்பாடு: எப் போதும் நட்புணர்வுடன் கூடிய செயல்பாடு வெற்றியை எளிமையாக்கும். சிம்மாசனத்தை நிலைப்படுத் தும். நீங்கள் வகுப்பின் தலைமை மாணவராகவோ, பணியில் குழுவின் தலைவராகவோ, அதிகாரி யாகவோ இருக்கலாம். ஆனால் அனைவருடனும் இணக்கமான நட்புறவு கொண்டிருந்தால் மட்டுமே உங்கள் பொறுப்பில் நிலைத்திருக்கவும், மேலும் உயரவும், வெற்றி காணவும் முடியும். வெறும் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தி வெற்றி கண்டவா்கள் இல்லை.

    தன்னிலை அறிதல்: எந்த நிலையிலும் தனது செயல்பாடுகளை பரிசோதித்துப் பார்ப்பவர்கள் பின்னடைவைச் சந்திப்பதில்லை. மாணவப் பருவத்தில் நீங்கள் உங்கள் முந்தைய தேர்வுகளையும், படிக்கும் நேரத்தையும், மதிப்பெண் உயர்வையும் ஒப்பிட்டு உங்கள் செயல்பாட்டை மதிப்பிடுங்கள். அது உங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும். வேலை உலகில், தங்கள் குழுவினர் மத்தியிலும், உயர் அதிகாரி அளவிலும் உங்களின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா? உங்களைப்பற்றிய எதிர் மறையான எண்ணங்கள் இருக்கிறதா? என்பதை சுயமதிப்பீடு செய்யுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தன்மதிப்பீடு செய்து கொள்வது வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

    இத்தகைய விவேகமான செயல்பாடு வாழ்வில் என்றும் சரிவின்றி நிலைத்த வெற்றியைத் தரும்.
    வேலை வாங்கித்தருவதாக கூறி சிவகாசி பெண் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்ததாக விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முருகசெல்வம் (வயது 31), முத்துச்சாமி (32), ரஞ்சித் (33) ஆகியோர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகாசி சாட்சியாபுரம் சாரதா நகரைச் சேர்ந்த பானு மற்றும் அவரது தம்பி மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினர்.

    இதனை நம்பி நாங்கள் உள்பட 7 பேர் தலா ரூ.80 ஆயிரம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்ட பானு விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு இறங்கியதும் நாங்கள் வேலைக்கான விசாவில் வரவில்லை. சுற்றுலா விசாவில் வந்துள்ளோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

    இது குறித்து பானுவிடம் கேட்டபோது, மீண்டும் மலேசியா அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால் எங்களை அனுப்பவில்லை. 7 பேரிடமும் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்தை அவர் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மேலூர் நாவினிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைக்கண் மகள் திருவரம்போற்றி (வயது 38). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுந்தர் (வயது 42) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சுந்தர் கள்ளக்காதலி திருவரம் போற்றியிடம், “உனக்கு பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கித்தருகிறேன். இதற்கு ரூ.4.20 லட்சம் செலவாகும்“ என்று கேட்டுள்ளார்.

    இதற்கு சுந்தரின் தாய் பஞ்சவர்ணம், சகோதரிகள் ரேணுகா, ரேவதி, பேச்சியம்மாள் மற்றும் உறவினர் காட்டுராஜா மனைவி இந்திரா ஆகிய 5 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    சுந்தரின் பேச்சை நம்பிய திருவரம் போற்றி, அவரிடம் ரூ.4.20 லட்சம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். சுந்தர் கொடுத்த வாக்குறுதியின்படி வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து உள்ளார்.

    இது தொடர்பாக திருவரம்போற்றி மேலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    பாகூர் அருகே காலில் அடிபட்டதால் வேலை செய்ய முடியாத விரக்தியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    பாகூரை அடுத்த அரங்கனூர் நிர்ணயப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 47).இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    தனசேகருக்கு வேலை செய்யும் போது காலில் அடிபட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

    இந்த நிலையில் நேற்று தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்று மன வருத்தத்தில் இருந்த தனசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பாரதி பாகூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
    வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், புதுமைப் பெண்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டப்படுகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் செய்தித்தாள் படிப்பது, தேனீர் அருந்துவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே பாதியில் முடிந்து விடுகிறது. அவர்கள் கடிகாரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். அப்போது மனதில் ஏற்படும் பதற்றம் அவர்கள் உடம்பையும், உள்ளத்தையும் உலுக்கிவிடும்.

    காலை நேர அவசர வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே பல வீடுகளில் தாய்மார்களுக்கு சவா லான விஷயமாக இருக்கும். தாயாரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும்.

    அப்போது குழந்தைகளிடம் ‘உன் எதிர்காலத்திற்காக தான் நான் சம்பாதிக்கிறேன்’ என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? அந்தப் பருவத்தில் குழந்தைக்கு தேவை அம்மாவின் அரவணைப்புதான். பணமல்ல!. வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட பல வீடுகளில் குழந்தை களுக்கு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட மனநிலையில் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? என்பதை பற்றி சிந்திக்க கூட அம்மாக்களுக்கு நேரம் இருக்காது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்பது கூடுதல் குழப்பத்தை தரும். முடிந்த வரை முக்கியமான வேலைகளை செய்துவிட்டு மற்றதை ஒதுக்கி விட்டு மறுநாளைக்கு தேவையானவைகளை செய்து முடித்து விட்டு படுப்பதற்குள் போதுமென்றாகிவிடும். கால்வலி, உடம்பு வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    இப்படி பரபரப்பாக இயங்குபவர்கள் குழந்தைகளிடத்தில் பொறுமையாக கையாள பழகிக்கொண்டாலே சுமுகமாக செயல்பட தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் பக்குவமாக பேசி அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் பணி முடித்து வீடு திரும்பும்போது கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி செய்து வந்தால் இயல்பாகவே குழந்தைகள் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம்பிடிக்காமல் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள பழகிவிடுவார்கள்.
    கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த வேலூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் ஸ்டீபன் (30). ஆர்.எஸ். புரத்தில் வணிக வளாகத்தில் உள்ள கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கலசம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரன் (31) என்பவர் கடைக்கு வந்தார். அவர் ஸ்டீபனிடம் அறிமுகம் ஆனார். அப்போது உமா மகேஸ்வரன் தான் ஏற்கனவே கனடாவில் வேலை பார்த்ததாகவும் அங்கு நிறைய பணம் சம்பாதித்தாகவும் தற்போது கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார்.

    நீங்களும் கனடா சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் தான் ஏற்கனவே கனடாவில் வேலை பார்ததற்கான போலி ஆவணங்களையும் காண்பித்து உள்ளார்.

    இதனை ஸ்டீபன் உண்மை என நம்பி உள்ளார். கனடா செல்ல வேண்டுமானால் பாஸ்போர்ட்டு உள்ளிட்டவைகளுக்கு ஏராளமான பணம் செலவாகுமே என ஸ்டீபன் கேட்டு உள்ளார்.

    அதற்கு உமா மகேஸ்வரன் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தால் போதும். கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளார். அதன் படி அவர் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டீபன் தனது நண்பர்கள் பிரகாஷ், சவுந்தர் ராஜ், பாலாஜி, ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரிடம் தெரிவித்து உள்ளார். அவர்களும் கனடாவில் வேலை கிடைக்கும் என நம்பி பணம் கொடுத்துள்ளனர்.

    அதன்படி ரூ. 15 லட்சம் வரை உமா மகேஸ்வரன் வாங்கி உள்ளார். அதன் பின்னர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. அப்போது தான் ஸ்டீபன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    இது குறித்து கோவை குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாளிடம் புகார் அளித்தார். அவர் விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். அதன்படி உதவி கமி‌ஷனர் சோம சேகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனை கைது செய்தனர். #tamilnews
    அரசு பணியின்போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை - எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பொதுத்துறையின் கீழ் செயல்படும் சென்னை, சேப்பாக்கம், அரசு விருந்தினர் இல்லத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான இருதயராஜ், ராஜசேகர் கிரிஜா ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், அரசு விருந்தினர் இல்லத்தில் தொலைபேசி இயக்குபவர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) செந்தில் குமார், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×