search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • கல்வி கடன் வாங்கியவர் இறந்த நிலையில் கோர்ட்டில் வழக்கு
    • செய்வதறியாது மாணவர் குடும்பம் தவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் அருகே திருமானூர்ப குதியை ேசர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாய குடும்பத்தை சார்ந்தவர், அவரது மகன் அரவிந்த், இவர் ப்ளஸ்2 தேர்ச்சி பெற்ற பின்பு கரூரிலுள்ள தனியார்கல்லூரியில் இன்ஞ்னியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார், தொடர்ந்து படிக்கவைக்க முடியாமல் சிரம ப்பட்டுவந்த பன்னீ ர்செல்வம் திருமழப்பாடியில் உள்ள வங்கியில் 2013ஆம் ஆண்டு 2லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார், வேலை கிடைக்காமல் தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துவந்துள்ளார்.2022ம் ஆண்டு திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் இறந்துவிட்டார், வங்கி நிர்வாகம் கல்விகடன்களை வசூலிக்க திவிரம் காட்டியது, ஆனால் பன்னீர்செல்வம் வங்கிக்கு சென்று கல்வி கடன் செலுத்த வசதியுமில்லை, எனது மகனும் இறந்தும் விட்டான், கல்வி கடனை ரத்து செய்யவேண்டும் என கோரி மகனின் இறப்பு சான்றிதழ் இணைத்து எழுத்து மூலமாக மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை முதலமை ச்சருக்கும், அரசுதுறை அதிகாரி களுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ளார்.இந்நிலையில் அரியலூரில் உள்ள சப்கோர்ட்டில் திருமழ ப்பாடியில் உள்ள வங்கி நிர்வாகம் அரவிந்த் அவரது தந்தை பன்னீர்செல்வம் மீது கல்விகடன் வசூல் செய்ய வழக்கு தொடர் ந்துள்ளனர். கல்வி கடன் வாங்கியது ரூ.2லட்சம், ஆனால் அசல் வட்டி எனக்கணக்கிட்டு ரூ.5லட்சம் கேட்டு சாலை விபத்தில் இறந்த அரவிந்தனுக்கு கோர் ட்டிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரனை ஜீன் 7-ந் தேதி போடப்பட்டுள்ளது. கல்வி கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுக்கப்ப ட்டாலும், கல்வி கடன் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைத்தாலும், இறந்தவர் மீது கல்வி கடன் வசூல் செய்ய நேட்டிஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி
    • இரணியல் கோட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.

    கன்னியாகுமரி :

    திங்கள் சந்தை அருகே புது குளத்தான் கரை பகுதி யைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55).

    இவர் கடந்த ஜனவரி மாதம் குளச்சல் அருகே டாஸ்மார்க் கடையில் நடந்த மோதலில்அதே பகுதியைச் சேர்ந்த அருள் பாபி (53) என்பவரை தாக்கினார். இதில் அருள் பாபி இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் ராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ஜெயி லில் இருந்த ராஜனை வழக்கு விசாரணைக்காக நேற்று இரணியல் கோட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜன் போலீ சாரிடம் சிறுநீர் கழிக்க செல்லவேண்டும் என்று கூறிவிட்டு கழிவறைக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து கழிவறையிலிருந்து சத்தம் கேட்டதையடுத்து அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.அப்போது கழிவறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ரத்த வெள் ளத்தில் கிடந்த ராஜனை மீட்டு போலீசார் சிகிச் சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச் சைக்காக நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ராஜனை போலீசார் சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்துள்ளனர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். தற்கொலைக்கு முயன்ற ராஜன் மீது போலீ சார் இந்திய தண்டனைச் சட்டம் 309 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஆசை வார்த்தை கூறி சுதாவிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
    • இதனை யடுத்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது29). இவர் திருமணம் ஆன நிலையில் முதல் கணவரை பிரிந்து கம்பைநல்லூர் அருகே பானிப்பூரி கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சுதாவுக்கு கோனம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது33) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருமண ஆசை வார்த்தை கூறி சுதாவிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    இதனையடுத்து கம்பைநல்லூரில் உள்ள கோவிந்தன் என்பவரின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனை யடுத்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் மாதேஷ், உதவியாக இருந்த கோவிந்தன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர்.
    • மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் நடந்தது. இதில் பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் எடுத்துச் சென்றனர். இதன் மூலம் 100 பேர் சோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 2 பழைய குற்றவாளிகள் அடையாளம் காண ப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நேற்று நடைபெற்றது. சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் போலீசாரிடம் சிக்கின. மொத்தம் 172 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைத்து வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்க ப்பட்டது.

    • பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
    • இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர், மார்ச்.24-

    பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கடலூர் காமராஜர் சிலை அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       

     இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி கோஷம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி மோடி உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புது நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உருவ பொம்மையை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இதில் ஓ.பி.சி.அணி ராமராஜ், மீனவரணி கடல் கார்த்திகேயன், ஆட்டோ வேலு, விக்கி, ஆறுமுகம் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
    • அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் பேசி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்

    கோவை,

    கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக காளீஸ்வரி (வயது 49) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ரோந்து வாகனத்தில் டாடாபாத் மின்வாரிய அலுவலகம் வழியாக ரோந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த திருநங்ககைள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி பிச்சை எடுக்க கூடாது என திருநங்ககைளிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் பேசி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நித்யா உள்பட 10 திருநங்ககைள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அனுமதி இல்லாமல் இயங்கியது தொடர்பாக சீல் வைக்கப்பட்டது
    • ஜவ்வரிசி ஆலை இயங்குவது தொடர்பாக விசாரணை

    உப்பிலியபுரம்,

    திருச்சி மாவட்டம் உப்பி–லியபுரம் அருகே உள்ள டி.முருங்கபட்டி ஆத்தூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி முத்துச் செல்வி (வயது 52). இவர் டி.முருகப்பட்டி பகுதியில் ஜவ்வரிசி தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.இந்த தொழிற்சாலை அரசின் உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கண்டு–பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜன–வரி 25-ந்தேதி அந்த தொழிற்சாலைக்கு அதிகா–ரிகள் சீல் வைத்தனர்.இதற்கிடையே சீல் வைக் கப்பட்ட அந்த ஆலை இயங்கி வருவதாக வாட்ஸ்அப் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே உப்பிலியபுரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அப்போது சீல் வைக்கப்பட்ட அந்த தொழிற்சாலை மீண்டும் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து முத்துச் செல்வி மீது உப்பிலியபுரம் போலீசார் மூன்று பிரிவு–களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீல் வைக்கப்பட்ட ஆலையை தடை உத்தரவை மீறி மீண் டும் இயக்கிய சம்ப–வம் அந்தப் பகுதியில் பரப–ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அந்தோணி தாஸ் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
    • நெல்லைக்கு வந்து கடன் தொகையை திருப்பி கேட்பதற்காக ஆனந்த மெர்லின் வீட்டுக்கு அந்தோணி தாஸ் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அந்த தொடக்கப்பள்ளியில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஆனந்த மெர்லின்(வயது 48) என்பவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் மெர்லினுக்கு செல்போன் செயலி மூலமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ராணுவ வீரரான அந்தோணி தாஸ்(45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிக்கடி 2 பேரும் நேரில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அவரிடம் இருந்து கடனாக ரூ.20 லட்சம் வரை ஆனந்த மெர்லின் பெற்றுக்கொண்டதாகவும், அதனை தற்போது திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சமீபத்தில் அந்தோணி தாஸ் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தோணி தாஸ் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் நேற்று நெல்லைக்கு வந்து கடன் தொகையை திருப்பி கேட்பதற்காக ஆனந்த மெர்லின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் அவரை தேடி கருங்குளம் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது கடன் தொகையை அந்தோணி தாஸ் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தோணி தாஸ் ஆத்திரம் அடைந்து பள்ளி வளாகத்தில் வைத்து ஆனந்த மெர்லினை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மெர்லின் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும், ஆனால் அவர் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில் இன்று பள்ளியில் வைத்து தாக்கியதாகவும் கூறி புகார் மனு அளித்தார்.

    இதையடுத்து அவரது புகாரின்பேரில் இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323, 506(1) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அந்தோணி தாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை
    • சீதா ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

    நாகர்கோவில் :

    குலசேகரம் மணலோடை வில்சாரி மலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகள் சீதா (வயது 38). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் தன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சீதாவை காப்பாற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சீதாவிடம் விசாரணை நடத்தினர். தனது பிரச்சினைக்காக கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். போலீசார் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீதா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.சீதா ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதையடுத்து இன்று பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கலெக்டர் அலுவல கத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.அவருடைய பேக்குகள் முழுமையான சோதனை செய்யப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நீடித்தது.

    • குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல் மற்றும் வாகன விதிமீறல்களை தடுக்க வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று 18-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை தீவிர வாகன சோதனை, குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு, சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை, தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் போலீசார் தீவிர ஈடுபட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 89 லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள், வேறு மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிரமாக 2100 வாகனகளில் சோதனை செய்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிக பாரங்கள் ஏற்றி செல்லுதல், செல்போனில் பேசி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1777 வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்தனர்.

    இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் 260 பழைய குற்றவாளிகள், 196 ரவுடிகளை அதிரடியாக நேரில் சென்று அவர்கள் சொந்த ஊரில் உள்ளனரா? வீட்டில் உள்ளார்களா? தற்போது வெளியூரில் இருந்தால் என்ன வேலை செய்கிறார்கள்? தற்போது என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? என்பதனை அதிரடியாக சோதனை செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகளையும், 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 32 நபர்கள் மீது சந்தேக வழக்கு பதிவு செய்து அவர்களின் கைரேகை, முழு விலாசம், தற்போது காரணம் இன்றி வெளியில் சுற்றுதல்? உள்ளிட்டவைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இருந்து சாராயம் மற்றும் மது கடத்தல் தொடர்பாக 26 வழக்கில் செய்து 27 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் குற்ற சம்பவங்கள், வாகன விதிமீறல்களை தடுப்பது, அடிக்கடி வாகன விபத்தால் ஏற்படும் இறப்பு சதவீதத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • அப்பகுதியை சேர்ந்த 15 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.
    • கோவிந்தசாமி நிலத்தை அளந்து வேலி போட்டு விட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மேல்கோட்டாய் தெருமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 15 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோவிந்தசாமி நிலத்தை அளந்து வேலி போட்டு விட்டார். இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போலீஸ் விஜய சங்கர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×