search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • போக்குவத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இச்சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை அருகே காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானையை அடர் வனப்பகுதிக்குள்

    விரட்டக்கோரி தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் தலை மையில் காரமடை - தோலம்பாளையம் செல் லும் சாலை தாயனூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், வட்டாட்சியர் மாலதி, வனச்சரகர் திவ்யா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில் மக்னா யானையை அடர் வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் கை விடப்பட்டது.

    இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நி லையில் போக்குவரத்திற்கு இடையூறாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் மீது காரமடை போலீசார் பொதுபோக்குவத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரளாவில் நண்பர் வீட்டில் பதுங்கல்-தனிப்படை போலீசார் விரைந்தனர்.
    • இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு  மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    பெனடிக்ட் ஆன்றோ தக்கலை பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியராக இருந்தார்.அப்போது ஆலயத்துக்கு வரும் இளம்பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, பாதிரியார் மீது புகார் கொடுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் மீது எஸ்.பி.அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில்  ஆலயத்துக்கு சென்ற போது பாதிரியார் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.மேலும் தன்னை  வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே  சமூக வலைதளத்தில் வெளியான ஆபாச படங்களில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்  என தெரியவந்தது.

    தற்போது அந்த படம் வைரலானதை தொடர்ந்து  அவரும் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது அடுத்தடுத்து புகார்கள் வெளிவந்த நிலையில் குமரி மாவட்ட போலீசார் தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்த விபரம் தெரியவந்ததும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ  தற்போது கேரளாவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்க ப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புகார் அளிக்கும் பெ ண்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்கள் தைரி யமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பான புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கூடல் புதூர் பொதிகை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் குமர வடிவேல். இவரது மகள் ஹரிணி (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் ஹரிணி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அவர் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது. அவர் இது தொடர்பாக குடும்பத்தி னரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் ஹரிணி சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், வித்தகர் தெருவை சேர்ந்தவர் பேபி பாலசுப்ரமணி(வயது26). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லா மல் இருந்து வந்தார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர் பான புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் வந்து கட்டையாலும் தாக்கி மிரட்டிசென்றுள்ளனர்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள முடிக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த முனியப்பன் மனைவி ராதா (வயது35). இவர் நேற்று வீட்டில் இருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் வந்து கையாலும்,கட்டையாலும் தாக்கி மிரட்டிசென்றுள்ளனர்.

    இதனால் காயமடைந்த ராதா பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து அங்கிருந்து கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    மதுரை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் மதுரைக்கு வந்தார். அப்போது அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவர் மதுரை விமான நிலையத்தில் வீடியோ எடுத்து அவதூறாக பேசினார்.

    இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜேஸ்வரனுக்கு அடி-உதை விழுந்தது. இதுபற்றி அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதே சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் அ.தி.மு.க.வினர், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர்.

    அப்போது போலீசார் தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இருந்தபோதிலும் அ.தி.மு.க.வினர் கலைந்து செல்லாமல் போலீசாரின் தடையையும் மீறி அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம் செய்தனர்.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன், சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார், அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர் மற்றும் 500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநள்ளாறில், இடப்பிரச்சனை காரணமாக, தம்பி, அவரது மனைவியை தாக்கிய அக்கா மற்றும் அவரது மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
    • பன்னீர்செல்வம்(வயது56). இவர் வீட்டு வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது அக்கா கலா(58) என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடப்பிரச்சனை உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், இடப்பிரச்சனை காரணமாக, தம்பி, அவரது மனைவியை தாக்கிய அக்கா மற்றும் அவரது மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தென்னங்குடி பகுதியைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது56). இவர் வீட்டு வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது அக்கா கலா(58) என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடப்பிரச்சனை உள்ளது. கோர்ட்டிலும் இது தொடர்பான வழக்கு உள்ளது. இந்நிலையில், கலா அடிக்கடி பன்னீர்செல்வம் மற்றும் அவரதுமனைவி வசந்தியையும் ஆபாசமாக திட்டி அடிப்பதும், பிறகு போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

    நேற்று முன்தினம், பன்னீர்செல்வம், வீட்டு வாசலில் கொத்தனார் மூலம் வீட்டை பழுது பார்க்கும் வேலையில் இருந்தபோது, அங்கு வந்த கலா மற்றும் அவரது மகள் ரஞ்சிதா, இடப்பிரச்சனை இருக்கும் போது, எப்படி வேலை செய்யலாம் என ஆபசமாக திட்டி, அருகில் கிடந்த தென்னை மட்டை மற்றும் கொத்தனார் கருவியால், பன்னீர்செல்வத்தையும், அவரது மனைவி வசந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும் சப்தம் போடவே, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு கலா மற்றும் ரஞ்சிதா இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும், சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொ ண்டுசெ ல்லப்பட்டனர். அங்கு இருவரும் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் கலா மற்றும் ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் முதல்-அ மைச்சர் எடப்பாடி பழனி சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்தார். அப்போது அ.ம.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலர்மீது மதுரை அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன் குணசேகரன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், கருணாகரன், ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, கோபி, செல்வமணி, ஜெகதீஸ்வரன், பழனிசாமி, ஸ்ரீதர், சோனைரவி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பில்லுர் ராமசாமி மாரிமுத்து, கோமதிதேவராஜ் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி மன்றதலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • போலீசார் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்ற போது சிக்கினர்
    • 5600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    கரூர்,

    வாங்கல் அருகே, சூதாட்டத்தில் ஈடு பட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட, போலீசார் மண்மங்கலம் அண்ணா நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பணம் வைத்து சூதாட் டத்தில் ஈடுபட்டதாக மணிகண்டன் (வயது 35), மூர்த்தி (42), பார்த்திபன் (32), விஜய் (25), பழனிசாமி (35) ஆகிய ஐந்து பேர் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து சூதாட்டத் துக்கு பயன்படுத்தப்பட்ட, 5,600 ரூபா யையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த நசீரா மீது டாரஸ் லாரி சக்கரம் ஏறி இறங்கியது
    • பலத்த காயமடைந்த முகமது இர்பானை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி :

    வேர்க்கிளம்பி காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் முகம்மது இர்பான் (வயது 38). துணி வியாபாரி. இவர் நேற்று மாலை அவரது தாயார் நசீரா (55) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    வில்லுக்குறி பாலம் அருகில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த நசீரா மீது டாரஸ் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய நசீரா சம்பவ இடத்தில் பலியானார்.

    பலத்த காயமடைந்த முகமது இர்பானை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து முகமது இர்பான் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் இரணியல் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி டிரைவர் காக்கச்சல் மணியன்குழியை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மிரட்டல் விடுத்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் போலீஸ் சரகம் உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ஜான்சி (34). இவரது தோட்டத்திற்குள் அதே ஊரைச் சேர்ந்த தவமணி என்பவரின் ஆட்டுக்குட்டி நுழைந்தபோது அதனை விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவமணி மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் ஜான்சியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஜான்சி கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    • எருதை கயிறு பிடிக்காமல் கழட்டி விட்டதால் சுற்றிநின்ற பொது மக்களை எருது கொம்பில் குத்தி தூக்கி வீசியது.
    • இது குறித்து பாலக்கோடு போலீசார் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைப்பெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று எருதாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் எருதாட்ட நிகழ்ச்சி அதனை மீறி நடைப்பெற்றது.

    இதில் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவரின் எருதை கயிறு பிடிக்காமல் கழட்டி விட்டதால் சுற்றிநின்ற பொது மக்களை எருது கொம்பில் குத்தி தூக்கி வீசியது.

    இதில் கொண்ட சாமனஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (55), முனியப்பன் (42), தீத்தாரஅள்ளியை சேர்ந்த திவ்யா (19) ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் பாலக்கோடு கமால் சாகிப் தெருவை சேர்ந்த சிறுவன் மாபூப்பாஷா (15), மந்திரி கவுண்டர் தெருவை சேர்ந்த சக்திவேல் (17), பனாரஸ் தெருவை சேர்ந்த தன்சிம் (22), கொட்டுமாரனஅள்ளியை சேர்ந்த ராணி (47), அன்னா நகரை சேர்ந்த சண்முகம் (28) ஆகிய 6 பேர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • குடும்ப தகராறில் நடந்த சம்பவம்
    • மத்திய கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் மத்திய கூட்டுறவு வங்கி வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்தினரிடையே சொத்துப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து, அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர். வங்கியி ன் வெளிப்பகுதியை பூட்டியுள்ளார். அலுவலகத்தைத் திறக்க வந்த வங்கி அலுவலர்கள் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்படி விரைந்து வந்த வங்கி மேலாளர் இது குறித்து வடகாடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், போலீஸார் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு வங்கி திறக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து வங்கியின் கிளை மேலாளர் கனகபூஜம் வடகாடு போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார்

    புள்ளாட்சிகுடியிருப்பு வெங்கடாசலம் மகன் ராஜராஜன் மீ து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×