search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • இடப்பிரச்சினை தொடர்பாக மாரிக்கண்ணுவை, செல்வமுருகன்,மாரிமுத்து ஆகியோர் கொலை செய்ய முயன்றனர்.
    • செல்வமுருகன், மாரிமுத்து ஆகியோருக்கு தலா 5 வருட கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்தவர் மாரிகண்ணு. விவசாயி. கடந்த 2016-ம் ஆண்டு இடப்பிரச்சினை தொடர்பாக மாரிக்கண்ணு வை, வீராணத்தை சேர்ந்த செல்வமுருகன் (வயது 30), ஊத்துமலையை சேர்ந்த மாரிமுத்து (35) ஆகியோர் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

    இதுதொடர்பாக வீ.கே. புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமுருகன், மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி ரஷ்கின் ராஜ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி வழக்கில் செல்வமுருகன், மாரிமுத்து ஆகியோருக்கு தலா 5 வருட கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • 3 பேர் கோர்ட்டில் ஆஜர்
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் அனந்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.

    இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 16-ந்தேதி இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் தாழக்குடி-மாதவலாயம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தபோது ஒரு கும்பல் ராஜ்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தவிளை யைச் சேர்ந்த பிரவீன் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ராம் சித்தார்த் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெபின் ஆகிய மூன்று பேரை கைது செய்த னர். கைது செய்யப் பட்ட மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயி லில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாகியுள்ள மேலும் 4 பேரை தேடி வந்த நிலையில் ராமன் புதூர் சாரோன் தெருவை சேர்ந்த ஜோன்ஸ் (34), அழகிய பாண்டிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சாம் ஈஷாக் (37), சீதப்பால் மேல தெருவை சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய மூன்று பேர் பத்நாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    சரண் அடைந்த மூன்று பேரையும் காவல் எடுத்து விசாரிக்க ஆரல்வாய்மொழி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து உடனே அவர்களுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப் பட்டது. போலீஸ் காவல் வழங்கப்பட்டதையடுத்து ஜோன்ஸ், சாம் ஈஷாக், அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் போலீசார் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.

    விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜ்குமாரை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.சம்பவத்தன்று பிரவீன், முருகன் இருவரும் சூப் கடையில் இருந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த ராஜ்குமார் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களை தீர்த்து கட்டி விடுவதாக ராஜ்குமார் மிரட்டி உள்ளார். இதை பிரவீன், முருகன் இருவரும் எங்களிடம் தெரிவித்தனர்.

    உடனே நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு வந்த ராஜ்குமாரிடம் இது தொடர்பாக கேட்டோம். அப்போது ஏற்பட்ட தகரா றில் அவரை தீர்த்து கட்டிய தாக கூறியுள்ளனர். தொடர்ந்து 3பேரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணைக்கு பிறகு இன்று மாலை 3 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தலை மறை வாகியுள்ள முருகனை போலீசார் தேடி வருகிறார் கள்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரவுடிகளை கைது செய்ய காத்திருக்கும் போலீசார்
    • புதுக்கோட்டை கொலை வழக்கிலும் கைது செய்ய போலீசார் தயார்

    திருச்சி,

    திருச்சியில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ரவுடி துரைசாமியின் உறவுக்கார பெண்ணான அனுராதா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் துரைசாமி, கொள்ளையடித்து மறைத்து வைத்திருந்த 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றைய போலீஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 ரவுடிகள் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய்த்தில் கொள்ளையடிகப்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது போலீசாரை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொன்மலை ரவுடி இளவரசன் கொலை வழக்கிலும் துரைசாமியை கைது செய்ய புதுக்கோட்டை போலீசார் ஆயத்தமாகி வருகிறார்கள். சிகிச்சையில் இருக்கும் அவர் குணமடையும் பட்சத்தில் கைது நடவடிக்கை இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனுராதா மூலமாக கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • அவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு உள்ளது.
    • இந்த ஆண்டு இதுவரை ரெயிலில் 52 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று திருச்சி இருப்பு பாதை ரெயில்வே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    திருச்சி ரெயில்வே மாவட்ட இருப்பு பாதைக்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா, டி.ஐ.ஜி. டாக்டர் விஜயகுமார் ஆகியோர் உத்தரவுப்படி எனது மேற்பார்வையில் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் உட்பட 30 போலீசார் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் , பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த அனீஸ் (வயது 27) என்பதும், அவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளி அனீசை கைது செய்தோம்.

    மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் மற்றும் குழந்தைகளிடம் யாரேனும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாலோ அல்லது ரெயில்வே பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். திருச்சி இருப்பு பாதை காவல் மாவட்டத்தில் உள்ள தனிப்படையினர் தமிழ்நாட்டில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு விரைவு ரெயில்களான பகத்கிகோதி, பாட்னா- எர்ணாகுளம், தன்பாத், ஹெவுரா -திருவனந்தபுரம், ஹெவுரா- ஆலப்புழா மற்றும் எஸ்வந்த்பூர் ரெயில்களில் இன்று சோதனை நடத்தினோம். அதில் எஸ்வந்த்பூர் ரயிலில் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். இந்த ஆண்டு இதுவரை ரெயிலில் 52 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. ரெயிலில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசர கதவை தொட்ட மாணவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கதவை திறந்து சர்ச்சையில் சிக்கினார். இதே போல் மேலும் சில சம்பவங்கள் நடந்தன.

    இதைத் தொடர்ந்து விமானத்தின் அவசர கதவு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியது. அத்து மீறலில் ஈடுபடும் பயணிகள் மீது விமான நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசர கதவை தொட்ட மாணவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.

    இதனை கவனித்த விமான பணிப்பெண்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் இதுபற்றி விமான கேப்டனிடமும் தெரிவித்தனர்.

    இதையடுத்து விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் மாணவரின் செயல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக அந்த மாணவர் கூறும்போது, "நான் விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யவில்லை. அதன் கைப்பிடியை தொட்டுப் பார்த்தேன்" என்றார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, "விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்றதாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் மாணவர் கைது செய்யப்படவில்லை" என்றனர்.

    • சம்பவத்தன்று சந்திரனின் கோழி பண்ணைக்கு கோழிகள் ஏற்ற லாரி வந்துள்ளது.
    • அந்த லாரிக்கு சகாதேவன் தரப்பு வழிவிட் மறுத்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பண்டுஹாரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 61). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்திரன்.

    இவர்களிடையே நில தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று சந்திரனின் கோழி பண்ணைக்கு கோழிகள் ஏற்ற லாரி வந்துள்ளது.

    அந்த லாரிக்கு சகாதேவன் தரப்பு வழிவிட் மறுத்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாலக்கோடு போலீசில் சகாதேவன் தரப்பில் கொடுத்துள்ள புகாரில் சந்திரன், குமார், கோவிந்தராஜ், முனிராஜ், சாந்தி ஆகியோர் தங்களை சாதி பெயரை சொல்லி விமர்சித்ததாக தெரிவித்துள்ளனர்.

    இதேபோல எதிர் தரப்பில் சாந்தி என்பவர் கொடுத்த புகாரில் சகாதேவன், அவரது மகனான ராணுவ வீரர் சதீஷ்குமார் ஆகியோர் தன்னை மானபங்கப்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

    இரு தரப்பு புகார்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.
    • திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது

    கடலூர்:

    கடலூர்முதுநகர் சேர்ந்த 23 வயது பெண் தனியார் பள்ளியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சம்பத்தன்று தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் காணாமல் போன இளம் பெண்ணுக்கும், வாலிபர் ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மூலம் 2 பேரும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வந்த நிலையில் திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மீன்பிடிப்பதில் விதி மீறல் செய்ததாக ஒரே மாதத்தில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:-

    தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே தடை மீறும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்வள சட்ட அமலாக்க துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேசுவரம், மண்டபம், தொண்டி, புதுமடம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் தடையை மீறி இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் மீது 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மீனவர்களின் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளும் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜன.23-ந்தேதி வரை 16 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    பிடிபட்ட மீன்கள் ஒரு லட்சத்து 67 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
    • இவர் சிறுமியிடம் பலமுறை பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் பலமுறை பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இது குறித்து, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் குழந்தைகள் நல அலுவலர் சதீஸ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.
    • இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்த

    ரவி (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (32) என்பவருக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி இருதரப்பை சேர்ந்த குமரவேல், சத்யராஜ்,ரவி, இருசாகவுண்டர், கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார்
    • 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

    கன்னியாகுமரி :

    வெள்ளிச்சந்தை அருகே சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அனித் (வயது24). இவர் வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அனித் உறவினரை பார்ப்பதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அம்மாண்டிவிளை தேரி காடு சாலையில் செல்லும்போது அங்கு வந்த கண்டன்விளையை சேர்ந்த சுபின், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தை சேர்ந்த அய்யப்பன், திருநயினார்குறிச்சியை சேர்ந்த ராஜன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து புல் வெட்டியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

    இதில் படுகாயமடைந்த அனித் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்ச ம்பவம் குறித்து மணவா ளக்குறிச்சி போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் சிவசங்கர்(வயது 23). பொக்லைன் ஆபரேட்டர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த தங்கராசுவின் மகன் மணிகண்டன்(26). கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மணிகண்டனுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மணிகண்டனும், சிவசங்கரும் கவுல்பாளையம் அய்யனார் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கவுல்பாளையம் எம்.பி.சி. காலனி பகுதியை சேர்ந்த மண்ணுமுட்டி என்ற மணிகண்டன்(23), தனக்கும் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புதுமாப்பிள்ளை மணிகண்டனும், சிவசங்கரும் மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் மண்ணுமுட்டி என்ற மணிகண்டன் அங்கிருந்த காலி மதுபாட்டிலை உடைத்து சிவசங்கரின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவசங்கரை, மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×