search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தாவீது நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா கண்ணன். பாதிரியாரான இவர் செம்பட்டி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விஜயலட்சுமி என்பவர் வீட்டில் ஜெபகூட்டத்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த அருப்புக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேஷ்குமார், பூலோகராஜா மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக சுரேஷ்குமார் மற்றும் ஜோஸ்வா கண்ணன் ஆகிய இரு தரப்பினர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் அடிக்கடி பண உதவி செய்து வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்ததால் முத்துபாண்டி உடனான பழக்கத்தை அந்த பெண் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 4 கடைகளில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளகிரி,

    மும்பையை சேர்ந்தவர் மணிமாறன். பிரபல தனியார் நிறுவன அதிகாரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் கலப்பட டீத்தூள் மற்றும் சோப்புதூள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. சூளகிரி பகுதியில் 4 கடைகளில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அதிகாரி மணிமாறன் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, 4 கடைகளில் இருந்தும் ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள டீத்தூள், சோப்புத்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

    இதுதொடர்பாக சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த கவுதம்ராஜ் (வயது24), சிவா (23), ஏனுசோனை முனிராஜ் (44), அட்டரகானப்பள்ளி நாகராஜ் (38) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாயமான மாணவியை தேடி வந்த நிலையில் கிணற்றில் பிணம் மிதப்பு
    • போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த பெற்றோர் மீது வழக்கு

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினர் மகள் ஹேமலதா (வயது 17). இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதி 336 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஹேமலதா திடீரென மாயமானார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அருகில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் ஹேமலதாவின் காலணிகள் கிடந்ததால் சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர்.

    அப்போது அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பிணமாக மிதந்த மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடனே அவசர அவசரமாக உடலை அருகில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அவரது பெற்றோர் எரித்து விட்டனர்.இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தானத்தம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பெற்றோர் திட்டியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவி இறந்தது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்காமல் உடல் ஏரிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி பண்ணப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டீஸ்வரன் புத்தானத்தம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் மாணவியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜபாளையம் அருகே முதியவர் தாக்கப்பட்டார்.
    • சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    சேத்தூர் வளையல் தெருவை சேர்ந்தவர் ஆணைக்குட்டி (65). இவர் விவசாய நிலங்களில் மாட்டுக்கிடை அமைத்து கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகே உள்ள சிவக்காடு பகுதியில் மாட்டு கிடை அமைத்திருந்தார்.

    நள்ளிரவு அங்கு ஆணைக்குட்டி காவல் பணி மேற்கொண்டிருந்த போது மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நீலமேகம், நாயகம் ஆகிய 2 பேர் வந்து தகராறு செய்து ஆணைக்குட்டியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தனர்.
    • தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இன்று காலை திருமாணிக்குழி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கே 4 பேர் கொண்ட கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமாணிக்குழியை சேர்ந்த ராஜாங்கம், செல்வம், வெள்ளிகண்ணு, நம்பியார் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பாரில் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி, இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கலப்பட மது விற்பனை நடைபெறுவதாகவும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்தை போல சின்னியகவுண்டம்பாளையத்திலும் நடைபெறாமல் இருக்க, சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை காவல்துறையினர் முழுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு செய்தனர்.
    • தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தென்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதுதொடர்பாக தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக அதே ஊரை சேர்ந்த வாசுதேவன் (வயது 75), சுப்பிரமணியன் (62), சொக்கலிங்கம் (46), செல்வராஜ் (27), குமார் (36) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங்.
    • லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர்.

    குருகிராம்:

    டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார்.

    இந்த சமயத்தில் இவர் கட்டிடங்கள் கட்டுவதற்காக விதி முறைகளை மீறி டெண்டர் தொகையை அதிகரித்து ரூ.1 கோடியே 11 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக டெல்லி ரஞ்சித் நகரை சேர்ந்த லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    • ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது.
    • மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்.1 செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார்.அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே. எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    அதன்படி சிறு குற்றத்திற்குரிய வழக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 க்கும், காசோலை மோசடி வழக்குகள் ரூ.24 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், வங்கி வராக்கடன் வழக்குகள் ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்து 492 க்கும்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.1 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரத்து 950 க்கும், ஜீவனாம்ச வழக்குகள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் ரூ.28 லட்சத்து 42 ஆயிரத்து 360 க்கும் என மொத்தம் 416 வழக்குகள் எடுக்கப்பட்டு 236 வழக்குகளுக்கு ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு வக்கீல் சி.பி.ரவிச்சந்திரன், வக்கீல் சங்க செயலாளர் கே.எம்.ராஜேந்திரன்,வக்கீல்கள் பசீர்அகமது,பிரபாகரன் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்
    • நீதிபதி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி சார்பு நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட சட்ட பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் பாக்கியராஜ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் மருதையா, அரசு வழக்கறிஞர் சப்தரிஷி, வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணி குழுவின் 84 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, வங்கி வழக்கு நிலுவை தொகை ரூ.72 லட்சத்து 65 ஆயிரம், சார்பு நீதிமன்ற வழக்குகளான மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 6 தீர்வு காணப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.22 லட்சத்து 70 ஆயிரம், சிவில் கோர்ட் வழக்குகள் 3 க்கு இழப்பீடு தொகை ரூ.26 ஆயிரத்து 830, குற்றவியல் வழக்குகள் 79 தீர்வு காணப்பட்டு வழக்கு அபராத தொகை ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 500ம் என மொத்தம் 173 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 96 லட்சத்து 99 ஆயிரத்து 330் ரூபாய் பணிக்குழு மக்கள் நீதிமன்ற முகாமில் முடித்து வைக்கப்பட்டது. இம்முகாமில் வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டச் சட்டப் பணிக்குழு தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைதானார்.
    • பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்தது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம், ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகன் ஆனந்தக்குமார் (வயது18). இவர் பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று பள்ளம் மீனாட்சி தியேட்டர் கிருதுமால் நதி பாலம் வழியாக பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்து ஆனந்தகுமார் உயிருக்கு போராடினார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. மர்ம நபர்கள் வெட்டி யதில் ஆனந்தகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இந்த கொலை யில் தொடர்புடைய கொலையாளிகளை தேடி வந்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வில் மற்றொரு கும்பலுடன், ஆனந்த குமாருக்கு தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததும், அவரை பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் கீரைத்துறை மேலத்தோப்பு 3-வது தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் பேபி சரவணன் மற்றும் லட்சுமணன், பிரவீன், ராஜ்குமார், முத்துராம லிங்கம், பீடி ரமேஷ் உள்பட 6-க்கும் மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதில் வாலிபர் பேபி சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • சிங்கப்பூருக்கு சென்றபிறகு ஒருமுறை கூட தனது மனைவியிடம் தேவன் செல்போனில் பேசமால் இருந்து வந்துள்ளார்.
    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கம்மளாப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் அனுசியா (வயது22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தேவன் (31) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் 6 மாதங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் தேவன் டிப்ளமோ முடித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காததால் வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு கடன் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக தேவனுக்கு அவரது அண்ணன் சென்னகேசவன் (40) வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்.

    சிங்கப்பூருக்கு சென்றபிறகு ஒருமுறை கூட தனது மனைவியிடம் தேவன் செல்போனில் பேசமால் இருந்து வந்துள்ளார். சிங்கப்பூரில் ஒரு வருடம் மட்டும் வேலை செய்துவிட்டு மீண்டும் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

    அப்போது தனது மனைவி அனுசியாவிடம் தேவன் பேசமால் இருந்து வந்தார். இதுகுறித்து அவரது மனைவி தட்டி கேட்டபோது, அவரிடம் 15 பவுன் நகை, சொந்தமாக வீடு ஒன்று வேண்டும், அதன்பிறகுதான் அனுசியாவுடன் குடும்பம் நடத்துவேன் என்று தேவன் கூறினார்.

    இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தேவன் தனது மனைவியை மிரட்டியதாக தெரிகிறது.

    இதுகுறித்து அனுசியா அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் அனுசியாவின் கணவர் தேவன், அண்ணன் சென்னகேசவன், அண்ணி செண்பகவள்ளி (35) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×