search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்
    • புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர்

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பச்சைவெளி, நைனார்குப்பம், பள்ளமேடு பகுதிகளில் உள்ள ஒரு சிலர் கூழாங்கற்களை லாரியில் கடத்தி வெளிமாநிலங் களுக்கும், வெளிநாடு களுக்கும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக புவியி யல் துறை அதிகாரிகள், கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக கூழாங்கற்களை கடத்தி சென்ற 4 லாரிகளை விழுப்புரத்தில் புவியியல் துறை லாரிகளை பறிமுதல் செய்தனர்.   இதில் பாதிக்கப்பட்ட லாரி உரிமை யாளர்கள், இதற்கு உளுந்தூர்பேட்டை யில் கந்த சாமி புரத்தில் வசிக்கும் சதீஷ் என்ப வர்தான் காரணம் என்று கருதினர். இதையடுத்து


    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூபேட்டை சுங்கச் சாவடி அருகே நிறுத்தப்பட் டிருந்த சதீஷ்-க்கு சொந்தமான 3 லாரிகளை பள்ளமேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல், வீரமணி உள்ளிட்டவர்கள் கடத்தி சென்றனர். இந்த லாரியை கொளுத்தப் போவதாக சதீஷ்-க்கு போன் செய்து கூறினர்.  இதனால் பதறிப்போன சதீஷ், உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர்.  அப்போது அங்கிருந்த ஏரிக்கரை அருகில் 3 லாரிகளிலும் கூழாங்கற்கள் ஏற்றப்படுவதை போலீசார் கண்டனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரியை திருடியது, அதில் சட்ட விரோதமாக கூழாங்கற்களை கடத்த முயற்சி செய்தது போன்ற பிரிவுகளில் குழந்தைவேல், வீரமணி, ரஞ்சித்குமார், ஆறுமுகம், ராஜசேகர், சத்தியராஜ், அணில்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் சத்தியராஜ், ஆறுமுகம், ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பறிமுதல் செய்த லாரிகளை அதன் உரிமையாளர் சதீஷ்-ம் போலீசார் ஓப்படைத்தனர்.

    உளுந்தூர்பேட்டையில் அதிகளவில் உள்ள கனிமமான கூழாங்கற்களை கடத்துவதும், அதில் தொழில் போட்டி ஏற்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     

    • மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் இன்று மாலை ஓ.பி.எஸ். அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ். அணியினர் கட்சி கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறி போலீசில் கடந்த சனிக்கிழமை புகார்கள் அளிக்கப்பட்டன.

    ஏற்கனவே கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம். எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றனர். அதேபோல் சற்று திருத்தம் செய்யப்பட்ட கொடி திருச்சி மாநாட்டில் முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே திருச்சி மாநாடு உள்பட எந்த இடத்திலும் அ.தி.மு.க.வின் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை திருச்சி போலீசில் புகார்கள் அளித்துள்ளோம்.

    அதையும் மீறி இந்த மாநாட்டிற்காக அ.தி.மு.க. பெயர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்சி தலைமையிடம் ஆலோசித்த பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார். 

    • உஷா சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார்.
    • வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டு வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி உஷா (வயது 36). இவர் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த பிரபு மனைவி கலைச்செல்வி (33) என்ப வருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று உஷா பள்ளியில் வேலை பார்த்து கொண்டி ருந்த போது அங்கு வந்த கலைச்செல்வி, அவரது கணவர் பிரபு, கலைச் செல்வியின் தாயார் ஜெயக்கொடி ஆகியோர் உஷாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர் பான வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயக்கொடி உள்பட 3 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, கலைச்செல்வி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சிக்கு கடந்த 2008-09-ம் ஆண்டு குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிதியை அரசு ஒதுக்கியது. இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் விதிமுறைகளை மீறி நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக விருது நகரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றத்திடம் புகார் அளித்தார். இதனை விசாரித்த உள்ளாட்சி அமைப்பு மன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரி களுக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் விருதுநகர் நகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் 8பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

    இது தொடர்பாக பாண்டுரங்கன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு போலீஸ் சூப்பி ரண்டு 8வாரங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நடவ டிக்கை எடுக்காத விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு கடந்த 13-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85).
    • இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் பவுனம்மாள் (வயது 85). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த இவரை கொலை செய்து. இவர் அணிந்திருந்த 3 பவுன் தோடு, செயின் ஆகியவைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 3 ஆண்டு காலமாக துப்பு ஏதும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ராஜாராம் பொறுப்பேற்ற பிறகு, நிலுவையில் உள்ள வழக்குகளை துப்பு துலக்கிவதில் தீவிரம் காட்டினார். அதன்படி இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா நியமிக்கப்பட்டார்.  பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளிகளாக மனப்பாக் கத்தை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 32), மேல் அருங்கு ணத்தை சேர்ந்த வேலாயுதம் ஆகிய 2 பேரையும் அடை யாளம் கண்டனர். இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீ சார் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். விசார ணையில், மூதாட்டி யை கொலை செய்து கொள்ளையடித்ததை 2 வாலிபர்களும் ஒத்துக் கொண்டனர்.

    மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளை யடித்த 2 நபர்களையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மூன்று ஆண்டு களுக்கு முன்பு நடந்த கொலை, கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் சூப்பிரண்டு ராஜா ராம் வெகுவாக பாராட்டி னார்.

    • ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சென்ற போது 5 பேர் கும்பல் தாக்கியது.
    • இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை துவரிமான் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் (56). சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று லட்சுமிபுரம் பகுதியில் சரக்குகளை இறக்கினார். அப்போது அவருக்கும், அதே பகுதியில் இருந்த காவலாளிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கண்ணனை தாக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை கைது செய்தனர்.

    மேலூர் சந்தைப்பே ட்டையை சேர்ந்தவர் அயூப்கான் (45) ஷேர் ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சென்ற போது 5 பேர் கும்பல் தாக்கியது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.
    • தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் மேடநாடு என்ற இடத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

    சிவக்குமார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மருமகன் ஆவார்.

    இந்த நிலையில் இவரது தோட்டத்திற்கு சாலை இணைப்ைப ஏற்படுத்தும் வகையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 2 கி.மீ தூர தொலைவுக்கு சாலை பணி நடந்தது.

    இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.

    மேலும் தோட்ட மேலாளர் பாலமுருகன், கனரக வாகன டிரைவர்கள் உமர் பாரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அங்கிருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. விதிகளை மீறி காப்புக்காட்டில் சாலை அமைத்ததாக ஏற்கனவே 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தோட்ட உரிமையாளரும், அமைச்சரின் மருமகனுமான சிவக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, மேடநாடு காப்புக்காட்டில் விதிகளை மீறி சாலை அமைத்ததற்காக தோட்ட உரிமையாளரான சிவக்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சிவக்குமாரை முதல் குற்றவாளியாக சேர்த்து ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    • கர்ப்பிணி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி இசக்கி துரைச்சி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 39). திருமணமான இவர் கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் பானுப் பிரியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இசக்கி ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகியதில் பானுப் பிரியா கர்ப்பமானார்.

    சம்பவத்தன்று இசக்கி ராஜாவை பார்ப்பதற்காக பானுப்பிரியா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த இசக்கி ராஜாவின் மனைவி இசக்கி துரைச்சி, உறவி னர்கள் மாரியம்மாள், ராமலட்சுமி, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் பானுப்பிரி யாவிடம் தகராறு செய்து அவரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பானுப் பிரியா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி இசக்கி துரைச்சி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    • கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    தென்காசியில் உள்ள மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 52). இவர் செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றிருந்த ஜெரால்டு இன்று காலை காரில் ஊருக்கு புறப்பட்டார்.

    மதியம் மதுரை மாவட்டம், பேரையூர் சின்ன பூலாம்பட்டி அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த திறந்த வெளி கிணற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிணற்றில் குதித்து கண்ணாடியை உடைத்து காருக்குள் சிக்கிய ஜெரால்டை மீட்டனர்.

    கிணற்றில் மூழ்கிக்கிடக்கும் கார்.

    தொடர்ந்து அங்கு வந்த வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரை மீட்டனர். விபத்தில் காய மடைந்த ஜெரால்டு பேரையூர் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நெல்லையப்ப புரத்தைச் சேர்ந்தவர் அருள் (41). இவர் தனக்கன்குளம் இறைச்சி கடையில் இருந்தார். அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அருளிடம் இதே பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் செல்போனை வாங்கி யுள்ளார். இதனை அவர் திருப்பி தரவில்லை.

    அருள் செல்போனை கேட்டு நெருக்கடி கொடுத்தார். ஆத்திரமடைந்த மாணிக்கம், கூட்டாளிகளான மணிமாறன், சதீஷ், அன்புராஜூடன் சேர்ந்து அருளை தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான கீழக்குயில்குடி தெற்கு தெரு முருகேசன் மகன் அன்புராஜ் (19), சிவபாரதி என்ற கலியா உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு, மச்சக்காளை மகன் ஆனந்தபாண்டி (21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.

    சம்பவத்தன்று காலை ஆனந்த பாண்டி அனுப்பானடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அவரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    இது குறித்த புகாரின்பேரில் தெப்பக்கு ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதே பகுதியில் வசிக்கும் கலை யரசன், கூட்டாளிகளான மதுசூதனன், தனசேகரன், வேல்பிரதாப், ஐராவத நல்லூர், பாபு நகர், வேலவன் தெரு பூமிநாதன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • சிறுமி கர்ப்பமானார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உடன்பட்டியை சேர்ந்தவர் குமார்(வயது27), வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஒரு வரு டத்திற்கு முன்பு இவருக்கும், மாங்கு ளப்பட்டியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகமலேயே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் கொட்டாம்பட்டி சமூகநல அலுவலர் பஞ்சு விற்கு தகவல் தெரிவித்தனர். அவர் மேற்கொண்ட விசார ணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து பஞ்சு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி சிறுமியை திருமணம் செய்த குமார், உடந்தையாக இருந்த தாய் சின்னம்மா, உறவினர் செல்வி ஆகியோர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
    • இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று 2 நபர்கள் திடீரென்று ஷேர் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த ஷேர் அலி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தோட்டப்பட்டு சேர்ந்த வெங்கடாஜலபதி உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×