என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுத்தேர்வு"
- 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.
- அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.
2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
செய்முறை தேர்வு
* 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும்.
* 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.
* 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.
பொதுத்தேர்வு
* அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்.
* அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கும்.
* அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.
பொதுத்தேர்வு முடிவுகள்
* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும்.
* 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
#PublicExam@tnschoolsedu pic.twitter.com/xh4EHGRyJf
— Anbil Mahesh (@Anbil_Mahesh) October 14, 2024
- 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
- பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 14-ந்தேதி (திங்கட்கிழமை) வெளியிடுகிறார்.
- 10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை.
- 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.
புதுடெல்லி:
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் 56 மாநில கல்வி வாரியங்கள் மற்றும் 3 தேசிய கல்வி வாரியங்கள் உட்பட 59 பள்ளி கல்வி வாரியங்கள் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், பிளஸ்-2 தேர்வை அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவிகள் எழுதியுள்ளனர், ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவிகளே தேர்வு எழுதியுள்ளனர்.
10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை. காரணம் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை, 28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதேபோல், சுமார் 32.4 லட்சம் மாணவர்கள், 12-ம் வகுப்பை தாண்டவில்லை. இவர்களில் 5.2 லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மத்திய கல்வி வாரியத்தில் மாணவர்கள் தோல்வி 6 சதவீதம். மாநில வாரியங்களின் தோல்வி 16 சதவீதம். பிளஸ்-2 தேர்வில், மத்திய வாரியத்தில் தேர்ச்சி பெறாதோர் 12 சதவீதமாகவும், மாநில வாரியங்களின் தேர்ச்சி பெறாதவர்கள் 18 சதவீதமாகவும் உள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.
மத்தியபிரதேச மாநில வாரியத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.
- உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு மாநிலத்திற்காக கல்வி கொள்கையை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர், ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் யூனி செப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ உள்ளிட்ட 14 பேர் இதில் இடம் பெற்றிருந்தனர்.
அனைவருக்கும் உள்ள கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு மாநில கல்வி கொள்கையை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை தயாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்கினார்கள்.
600 பக்கங்கள் கொண்டதாக அதன் அறிக்கை உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் என்னென்ன என்ற விவரம் வருமாறு:-
3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வைக்க கூடாது. பிளஸ்-1 பொதுத் தேர்வை தொடர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. பிளஸ்-1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தேசிய கல்வி கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றபோது படிப்பதில் இருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற தேவையில்லை.
முதலாம் ஆண்டு மட்டும் படித்துவிட்டு பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிடவும், 2-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ், 3-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. அதனை மாநில கல்விக் கொள்கை நிராகரிக்கிறது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் என உள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.
தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படுவதோடு, மாணவர்கள் 10-ம் வகுப்பில் வாரிய தேர்வுகளை எடுக்கும் வரை, பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும்.
முந்தைய நிலைகளில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் இருக்க கூடாது.
கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு தடகள நிகழ்வுகளில் கலந்து கொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம்.
அனைத்து தாய்-சேய் குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர பரிந்துரைக்கிறது.
ஸ்போக்கன் இங்கிலீஷ் தவிர ஸ்போக்கன் தமிழ் மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மனநல ஆலோசகர் ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக்குழு அமைக்க வேண்டும்.
இரு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
- தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார்.
- மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ந்தேதி மற்றும் ஜூலை 3-ந்தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.
முதல் கட்டமாக வருகிற 28-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.
சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq @BussyAnand @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/SJ2CrkzGWU
— Thalapathy Vijay Makkal Iyakkham (@TVMIoffl) June 10, 2024
- பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது.
- மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு, மேலே 58 என பதிவு செய்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தியதில் குளறுபடி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.
மறுகூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்ற மாணவர் அதிர்ச்சி அடைந்தார்.
மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு, மேலே 58 என பதிவு செய்துள்ளார். விடைத்தாளை திருத்திய தமிழ் ஆசிரியர் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டதும் தெரிய வந்தது.
மேலே குறிப்பிடப்படும் மதிப்பெண் மட்டுமே பதிவேற்றப்படும் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு 30 மதிப்பெண்கள் குறைந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு:
பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 106 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 535 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.14 சதவீதம் பேரும், மாணவிகள் 94.14 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகளில் 12 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
இது 85.54 சதவீதம் தேர்ச்சி ஆகும். அரசு பள்ளிகள் அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 487 பேரில் 9 ஆயிரத்து 529 பேரும், (82.95 சதவீதம்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 816 பேரில் 6 ஆயிரத்து 372 பேர் தேர்ச்சி (81.59 சதவீதம்) பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் தேர்வு எழுதிய 13 ஆயிரத்து 809 மாணவ-மாணவிகளில் 10 ஆயிரத்து 427 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 75.51 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
- அறிவியல் 94.31 சதவீதம், வணிகவியல் 86.93 சதவீதம், கலைப்பிரிவு 72.89 சதவீதம், தொழிற்பாடம் 78.72 சதவீதமாகும்.
- பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள், தமிழ் 8, ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171.
சென்னை:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்தும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
இந்த நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
பள்ளி வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம்:
அரசுப்பள்ளிகள் 85.75 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீதமாகும்.
பாடப்பிரிவு வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம்:
அறிவியல் 94.31 சதவீதம், வணிகவியல் 86.93 சதவீதம், கலைப்பிரிவு 72.89 சதவீதம், தொழிற்பாடம் 78.72 சதவீதமாகும்.
பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள்:
தமிழ் 8, ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171.
கணிதம் 779, தாவரவியல் 2, விலங்கியல் 29, கணினி அறிவியல் 3432, வணிகவியல் 62.
கணக்கு பதிவியல் 415, பொருளியல் 741, கணினி பயன்பாடுகள் 288, வணிக கணிதம், புள்ளியியல் 293.
- 96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
- அரசு பள்ளிப் பள்ளிகளை பொருத்தவரை 92.86 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந் துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.17 ஆகும். மாணவிகள் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.69 ஆகும்.
மாணவர்கள் 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.26 ஆகும்.
பிளஸ்-1 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதை விட 0.24 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7534 ஆகும். இதில் 1964 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 241 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியையும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியையும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீத தேர்ச்சியையும், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீத தேர்ச்சியையும், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீத தேர்ச்சியையும், ஆண்கள் பள்ளிகள் 81.37 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளன.
8418 மாணவ-மாணவிகள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8221 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள். இதில் 7504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.27 சதவீதம் ஆகும். சிறை கைதிகள் 187 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 90.90 சதவீதம் ஆகும்.
96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
அரசு பள்ளிப் பள்ளிகளை பொருத்தவரை 92.86 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
மாணவ-மாணவிகள் www.tnresult.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது.
- மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
சென்னை:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்தும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
இந்த நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
பிளஸ்-1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
அதேபோல், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படுகிறது.
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.
- 12ம் தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி (நாளை) வெளியாகும் என அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2023-2024 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 14.08.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.08.2024 அன்று www.dgetngovin என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- பயன்படுத்தி மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) முற்பகல் 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை
14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு தங்களது User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் +2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை முதலிடம்.
- பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன் என பூங்கோதை தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.
4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார்.
மாணவி பூங்கோதை கூறியதாவது:-
ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டில் அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.
பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி பூங்கோதைக்கு உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்பதாக எத்திராஜ் கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதைக்கு, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவசமாகப் படிப்பதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் நேரில் வழங்கியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்