search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேபி தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார்.
    • பேபிக்கு நாய் தான் தனது நகையை விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5500-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.

    நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே குதிரை கொம்பாக மாறிவிடும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பெண்கள் இருக்கும் நகையை பாதுகாத்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

    இந்த நிலையில் பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார்.

    சிறிதுநேரம் கழித்து பார்த்த போது அந்த நகையை காணவில்லை. பதறி போன அவர் வீடு முழுவதும் தேடி பார்த்தார்.

    எங்கு தேடியும் நகையை காணவில்லை. வீட்டுக்கு யாரும் வரவும் இல்லை. நகையும் படுக்கை அறையில் உள்ள கண்ணாடி முன்புதான் இருந்தது. அதன்பிறகு நகை எப்படி மாயமானது என்று தெரியாமல் பேபி குழம்பி போனார்.

    அப்போதுதான் வீட்டில் அவர் வளர்த்து வந்த செல்ல நாய் படுக்கை அறைக்குள் சென்று விட்டு வெளியே வந்தது. அப்போது அந்த நாய் தரையில் கிடந்த பென்சில் ஒன்றை அப்படியே விழுங்கியது.

    இதை பார்த்த பேபிக்கு நாய் தான் தனது நகையை விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் கணவரிடம் இதுபற்றி கூற, அவர் நாயை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாயின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். இதில் நாயின் வயிற்றில் செயின் இருப்பது தெரியவந்தது.

    உடனே நாய்க்கு பேதி மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு நாயை வீட்டுக்கு கொண்டு சென்று அது எங்கேயும் வெளியே சென்றுவிடாமல் வீட்டில் இருந்தோர் கண்காணித்தனர்.

    மறுநாள் அந்த நாயின் வயிற்றில் இருந்து 3 பவுன் தங்க செயின் வெளியே வந்தது. அதன்பின்பே பேபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நிம்மதி வந்தது.

    ஆமாம் 3 பவுன் நகையின் இன்றைய விலை ரூ.1¼ லட்சத்துக்கும் அதிகம்தானே...

    • இந்தியாவை பொறுத்தவரை நடுத்தர மக்கள் தங்கத்தை தான் மிகப்பெரிய முதலீடாக கருதி வருகின்றனர்.
    • இனி தங்கம் வாங்குவது என்பது பலருக்கு கானல் நீராக மாறி விடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    தங்கத்தில் போட்ட காசு என்றுமே வீணாகாது என்று சொல்வார்கள். அந்த அளவு உலக சந்தையில் தங்கத்துக்கு என்றுமே தனி மவுசு தான். அதுவும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது உண்டு.

    ஆண்களில் கூட விதவிதமான தங்க நகைகள் அணிபவர்கள் உள்ளனர். இதனால் தங்கத்தின் மீதான மோகம் எல்லோரிடமும் உள்ளது. பெண்களை திருமணம் செய்து கொடுக்க வரதட்சணையில் தங்கம் மிக முக்கிய இடத்தை பெற்று திகழ்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் வேட்டு வைக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவில் தங்கம் விலை இன்று பவுன் ரூ 44 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    நகை கடைக்கு சென்று ஒரு பவுன் செயின், மோதிரம் போன்ற ஆபரணங்கள் வாங்கினால் செய்கூலி, சேதாரம். வரிகள் போன்றவற்றால் ரூ.50 ஆயிரத்தை தொட்டு விடும். இதனால் இனி தங்கம் வாங்குவது என்பது பலருக்கு கானல் நீராக மாறி விடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நடுத்தர மக்கள் தங்கத்தை தான் மிகப்பெரிய முதலீடாக கருதி வருகின்றனர். தங்கம் பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் என்பதோடு அவசர பண உதவிக்கு யாரிடமும் கையேந்தாமல் நகைகளை அடகு வைக்கவும் உதவுகிறது.

    அமெரிக்கா வங்கித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது விழுந்துள்ளது.

    இதனால் பங்கு சந்தையில் இருந்து அவர்கள் மாறி தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பானது என நினைத்து தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாலும். சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாலும் தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவதாக நகை கடை அதிபர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இல்லத்தரசிகள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் கடந்த மாதம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம். வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏழை மற்றும் பெண் குழந்தைகளை வைத்து இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.110 உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சவரன் ரூ.44,480-க்கு விற்கப்படுகிறது. இது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,480-க்கும், கிராம் ரூ.5,560-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.74.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கும் விற்கப்படுகிறது.

    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடந்து ஏறுமுகமாக உள்ளது.
    • கிராம் ரூ 72.70-ல் இருந்து ரூ 73.10 ஆகவும், கிலோ ரூ 72,700-ல் இருந்து 73,100 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கிராம் ரூ 5,425-க்கும் பவுன் ரூ 43,400க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ 25-ம் பவுன் ரூ 200-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

    இன்று கிராம் ரூ 5,450-க்கும், பவுன் ரூ. 43,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே வேகத்தில் உயர்ந்தால் இன்னும் ஓரிரு நாளில் தங்கம் பவுன் ரூ 44 ஆயிரத்தை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடந்து ஏறுமுகமாக உள்ளது. கிராம் ரூ 72.70-ல் இருந்து ரூ 73.10 ஆகவும், கிலோ ரூ 72,700-ல் இருந்து 73,100 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    • தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
    • வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சவரன் ரூ.43,400-க்கு விற்கப்படுகிறது. இது மக்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43,400-க்கும், கிராம் ரூ.5,425-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.72.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700-க்கும் விற்கப்படுகிறது.

    • தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது.
    • இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.65 அதிகரித்து ரூ.5,390க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில வாரம் திடீரென்று உயர்வதும், சில வாரம் திடீரென்று குறைவதுமாக மாறி மாறி நிகழ்ந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்பட்டது.

    இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்று 1 கிராம் ரூ.5,325-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.65 அதிகரித்து ரூ.5,390க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ரூ.72-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,000-க்கு விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் ஹால்மார்க் சான்றிதழ் பெறுவதற்கான மையங்கள் 12 உள்ளது.
    • நகைகளுக்கு 6 இலக்க ஹால் மார்க் முத்திரை பதித்து டெலிவரி கொடுக்க குறைந்தது ஒரு நாள் ஆகும்.

    சென்னை:

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் 4 இலக்க ஹால் மார்க் தங்க நகை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    6 இலக்க நகைகளையே விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது நகை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக 'ஹால் மார்க்' என்பது தங்கத்தின் தூய்மையை குறிப்பதற்காக வழங்கப்படும் குறியீட்டு சான்றிதழ்.

    கடந்த 2021 ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டது. பொது மக்களும் நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகள் தானா என்று கேட்டு வாங்கும் அளவுக்கு விழிப்புணர்வு அடைந்து விட்டனர்.

    தற்போது ஹால்மார்க் முத்திரையுடன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தனித்த 4 இலக்க அடையாள எண் (huid) வழங்கப்படுகிறது.

    இனி 4 இலக்க தனித்த அடையாள எண் 6 இலக்கமாக இருக்க வேண்டும். 1-ந் தேதி முதல் 6 இலக்க அடையாள எண் கொண்ட ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஹால்மார்க் இல்லாமல் நகைகள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பைவிட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    ஏற்கனவே திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வாங்கப்பட்டு கைவசம் இருக்கும் தங்க நகைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அப்படி அச்சப்பட தேவையில்லை. இந்த விதி விற்பனைக்கு மட்டும்தான். கைவசம் இருக்கும் பழைய ஹால் மார்க் நகைகளை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரம் 6 இலக்க எண்களை முத்திரை பதிப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது அவகாசம் வேண்டும் என்றாலும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறினார்.

    சென்னையில் ஹால்மார்க் சான்றிதழ் பெறுவதற்கான மையங்கள் 12 உள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது. ஆனால் தேவையை விட 50 சதவீதம் குறைவாகவே உள்ளது.

    முதலில் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து நேரம் வாங்க வேண்டும். அவர்கள் ஒதுக்கி தரும் நேரத்தில் நகைகளை ஒப்படைக்க வேண்டும்.

    அந்த நகைகளுக்கு 6 இலக்க ஹால் மார்க் முத்திரை பதித்து டெலிவரி கொடுக்க குறைந்தது ஒரு நாள் ஆகும். எனவே, கால நீட்டிப்பு அவசியம்.

    பொதுமக்களும் இந்த மையங்களில் தங்கள் நகைகளை கொடுத்து 6 இலக்க ஹால் மார்க் குறியீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,520 ஆக உயர்ந்தது.
    • நேற்று முன்தினம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற-இறக்கமாக காணப்படுகிறது. சில வாரம் திடீரென்று உயர்வதும், சில வாரம் திடீரென்று குறைவதுமாக மாறி மாறி நிகழ்ந்து வருகிறது.

    கடந்த வாரம் தங்கம் விலை குறைந்து வந்தது. கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.42 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் மறுநாள் ரூ.41,800 ஆக குறைந்தது. 8-ந்தேதி அது ரூ.41,320 ஆகவும், 9-ந்தேதி ரூ.41,240 ஆகவும் குறைந்தது.

    அதன் பிறகு கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,520 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று ரூ.42,160-க்கு விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையே நீடித்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,270-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,325-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.69.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,500-க்கு விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ரூ.67.30-க்கும் விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.68.70-க்கும் விற்பனையாகிறது.
    • ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.640 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.5,270-க்கும் சவரன் ரூ.42,160-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ரூ.67.30-க்கும் விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.68.70-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் தொடர்ந்து அதிகரித்த வந்த தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது.
    • வெள்ளி விலை குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    நேற்று தங்கம் கிராம் ரூ.5,155-க்கும் பவுன் ரூ. 41,240-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் அதிகரித்தது. இன்று கிராம் ரூ.5,190-க்கும் பவுன் ரூ.41,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது. கிராம் ரூ. 67.40-ல் இருந்து ரூ.67.30 ஆகவும், கிலோ ரூ.67,400-ல் இருந்து ரூ.67,300 ஆகவும் குறைந்து இருக்கிறது.

    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
    • நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.67.40-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்தே குறைந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,320-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,240-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5165-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.10 குறைந்து ரூ.5155-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும், இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.67.40-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,400-க்கு விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5,165-க்கும் ஒரு சவரன் ரூ.41,320-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமுமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.41,320-க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.5,235-க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.5,165-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.67.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×