search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • காங்கிரஸ் கட்சிதலைவர்கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
    • தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர்.

    உப்பள்ளி

    மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய் மூட்டை. வானமும், பூமியும் ஒன்றாக மாறிவிட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையின்படி பார்த்தால், 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த கட்சி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பது தெரிகிறது. தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர். தலித் மற்றும் விவசாயிகள் பெயரில் அக்கட்சி பொய்களை கூறி வருகிறது.

    இதற்கு முன்பு உத்தரகாண்டிலும் இதேபோன்ற பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. இதனால் அங்கு தோல்வியை தழுவியது. பா.ஜனதாவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். அதுபோல் கர்நாடகத்திலும் காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    இது அரசியல் அமைப்புக்கு எதிரானது. முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பது இந்துக்களை அவமதிப்பது போன்றது. தற்போது பஜ்ரங்தளத்தையும், பி.எப்.ஐ. அமைப்பையும் தடைசெய்வதாக காங்கிரஸ் கூறுகிறது. இது சமதான அரசியலின் ஒரு பகுதியாகும். மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல்காந்தியும் நாட்டுக்காக என்ன செய்ய போகிறார்கள்?.

    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. காங்கிரஸ் கட்சிதலைவர்கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். காங்கிரசும், பொய்யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரியங்கா காந்தி முன்னிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
    • பொதுக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 8-ந்தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். தெலுங்கானாவில் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் குறித்து பேசுகிறார்.

    வேலையின்மைக்கு எதிராக நடைபயணமாக மைதானத்திற்கு வரும் பிரியங்கா காந்தி முன்னதாக எல்.பி. நகரில் உள்ள ஸ்ரீ காந்தா சாரி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    பிரியங்கா காந்தி முன்னிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.

    பொதுக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    பிரியங்கா காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது எதிரணியினருக்கு அதிர்ச்சி தரும் மாநில கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

    • தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார்.

    சென்னை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றுள்ளார்கள்.

    அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கர்நாடகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    தேர்தல் முடியும் வரை அவர்களை கர்நாடகத்திலேயே முகாமிட்டு இருக்கும்படியும் அகில இந்திய தலைமை உத்தரவிட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார். வருகிற 5-ந்தேதி முதல் 3 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.

    தமிழர்கள் பகுதியில் முகாமிட்டுள்ள நிர்வாகிகள் கூறும்போது, 'இந்த முறை தமிழர்கள் வாக்குகள் காங்கிரசுக்கு ஆதரவாக விழும் என்று தெரிவித்தனர். தொகுதிகளின் நிலவரம் பற்றி கட்சி தலைமைக்கும் அறிக்கைகள் கொடுத்து வருகிறார்கள்.

    • பழங்குடியின குழந்தைகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகளை தொடங்கியுள்ளோம்.
    • காங்கிரஸ் மற்றும் ஜனதள கட்சி ஆட்சியில், திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். சித்ரதுர்கா அருகே செல்லகெரேயில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் ஏழைகளின் குழந்தைகளுக்காக மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் தேர்வுகளை கன்னடத்தில் எழுத பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புற குழந்தைகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கான நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

    பழங்குடியின குழந்தைகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகளை தொடங்கியுள்ளோம். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் கால் லட்சம் கோடி ஒதுக்கியுள்ளோம். பா.ஜனதாவின் வளர்ச்சியை காங்கிரசால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு பல மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. சித்ரதுர்காவிலும் மருத்துவக் கல்லூரி தொடங்கினோம். செவிலியர் கல்லூரியை தொடங்கியுள்ளோம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் பல திட்டங்களை வழங்கியுள்ளோம்.

    பழங்குடியினருக்கு பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளோம். பஞ்சாரா மற்றும் லம்பாணி சமூகத்தினருக்கு உரிமை வழங்கியுள்ளோம். நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுத்துள்ளோம். குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளோம். 7 சுற்று பாதுகாப்பு கோட்டை போல 7 விதமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். முதலில் ஆவாஸ் யோஜனா, எரிவாயு, தண்ணீர். 2-வது திட்டம் பிரதி மனேகு ரேஷன், மூன்றாவது திட்டம் ஆயுஷ் மான் பாரத் திட்டம். 4-வது திட்டமாக முத்ரா யோஜனாவும், 5-வது திட்டமாக பீமா யோஜனாவும், 6-வது யோஜனாவாக பெண்களுக்கான பாதுகாப்பும், 7-வது திட்டமாக ஜன்தன் யோஜனாவையும் செயல்படுத்தியுள்ளோம்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதள கட்சி ஆட்சியில், திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்தன. பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ரெயில்வே, சாலை, விமான நிலையங்கள் அமைக்க வேகம் கொடுத்தோம். கர்நாடகாவில் 9 தொழில் மண்டலங்களை அமைப்போம். சித்ரதுர்காவிலும் 1 தொழிற்பேட்டை அமைப்போம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே தீவிரவாதிகளை ஆதரித்து வருகிறது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர் விட்டனர். மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிற்கின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் காங்கிரசும், ஜே.டி.எஸ்.சும் வெவ்வேறு கட்சிகளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவை ஒன்றுதான். இரண்டு கட்சிகளும் குடும்ப அரசியலையும் ஊழலையும் செய்கின்றன. சமுதாயத்தை உடைக்கிறார்கள்.

    இரண்டு கட்சிகளின் முக்கியத்துவமும் மாநில வளர்ச்சி அல்ல. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியும். எனினும் பொய்யான வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க.வின் அனைத்து திட்டங்களையும் அழித்து விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் என்னை 90 முறை திட்டியுள்ளனர்.

    மே 10-ந் தேதி தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள். இந்த முறை பெரும்பான்மை பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கவேண்டும். தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க சொல்லுங்கள். உங்கள் ஆசீர்வாதம் எனக்கு பலம் தருகிறது. இது என்னை அதிக வேலை செய்ய உத்வேகம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
    • தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டது. அக்கட்சி ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆளும் பா.ஜனதா நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

    அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பா.ஜ.க. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தொடர்ச்சியாகப் பல மாநில பேரவைத் தேர்தல்களில் தோல்வி கண்டிருந்தாலும் அண்மையில் ஹிமாசல் பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. அந்த உற்சாகத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் சூழல் ஏற்பட்டால், யார் ஆட்சியமைப்பது என்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் துருப்புச் சீட்டாக செயல்படும்.

    இத்தகைய சூழலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 140 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது.

    கன்னட டிஜிட்டல் ஊடகமான ஈதினா டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் வெல்லும் என தெரிவித்துள்ளது. பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் உடன் இணைந்து கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்பை ஈதினா டாட் காம் நடத்தியுள்ளது.

    தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 134 தொகுதிகளிலிருந்து 140 தொகுதிகள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் பா.ஜ.க.விற்கு 57-ல் இருந்து 65 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு தற்போது பெரும் சரிவு ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் காங்கிரசைவிட 10 சதவீதம் குறைவாக 33 சதவீத வாக்குகளை பாஜக பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக தலைநகரான ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு 31-ல் இருந்து 37 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் பா.ஜ.க.வுக்கு இரண்டிலிருந்து நான்கு தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    மும்பை கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கு 40-லிருந்து 46 இடங்கள் கிடைக்கும் என்றும், தெற்கு கன்னடத்தில் காங்கிரசுக்கு 26 முதல் 32 தொகுதி வரையும், பெங்களூருவில் 16-லிருந்து 20 தொகுதி வரையும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளனர்.

    மேலும் கர்நாடகத்தின் மத்திய கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கும் 3-ல் இருந்து 4 தொகுதிகளும், பாஜக 19 லிருந்து 23 தொகுதிகளும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், கடலோர கர்நாடகத்தில் பாஜகவிற்கு 10 லிருந்து 14 தொகுதிகள் வரையும், காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    • சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என கூறப்பட்டது.
    • பஞ்சரத்ன யாத்திரை மூலம் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    ராமநகர் :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார். இ்ந்த நிலையில் குமாரசாமியை ஆதரித்து இக்களூருவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி பேளூர், சென்னப்பட்டாவில் பிரசாரம் செய்கிறார். அது பற்றி எனக்கு தெரியும். சென்னப்பட்டணா குமாரசாமியின் கர்ம பூமி. மண்டியா மாவட்டத்தில் குமாரசாமி போட்டியிட வேண்டும் என்று மக்கள் கூறினர். ஆனால் குமாரசாமி, நான் எனது கர்ம பூமியான சென்னப்பட்டணாவில் தான் போட்டியிடுவேன் என்று கூறி தேர்தலில் நிற்கிறார். சென்னப்பட்டணா மக்களுக்காக எனது உயிரை கொடுப்பேன் என்று குமாரசாமி கூறி இங்கு போட்டியிடுகிறார்.

    குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது பல திட்டங்களை செயல்படுத்தினார். அவர் அமல்படுத்திய திட்டங்கள் நாட்டில் வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அறிவித்தவர், குமாரசாமி. கஷ்டப்பட்டு 2 முறை அவர் முதல்-மந்திரியாக இருந்தார். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கொடுத்த அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு ஆட்சி செய்தார்.

    சித்தராமையாவால் விவசாய கடன் தள்ளுபடியை செய்ய முடியவில்லை. ஆனால் குமாரசாமி கூட்டணி ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இதனால் மக்கள் குமாரசாமியை கைவிட மாட்டார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டணி வைத்து செயல்படுகிறது. வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என கூறப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா மேலிடம் திடீரென்று வேட்பாளராக சோமண்ணாவை நிறுத்தியுள்ளது. சித்தராமையாவை எதிர்த்து விஜயேந்திராவை நிறுத்தாதது ஏன்?. நாங்கள் மேற்கொண்ட பஞ்சரத்ன யாத்திரை மூலம் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது.
    • ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பப்பட்டது. இதையொட்டி, அவரை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

    அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது. ஆனால், சீனா, அதானி, அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கர்நாடகா போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல், பா.ஜனதாவுடன் மோசடியாளர்களுக்கு உள்ள நெருக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் 'மவுனத்தின் குரல்' ஆக அவர் இருந்து விடுகிறார்.

    ரோதக்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.

    ஆனால், அதன் இயக்குனரின் கல்வித்தகுதி பற்றி மத்திய கல்வி அமைச்சகமே கேள்வி எழுப்பி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழுப்புரம் காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய தீபம் ஏந்திய மாபெரும் பேரணி காந்தி சிலை வரை நடைபெற்றது.
    • மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம் தொடக்க உரையாற்றினர்.

    விழுப்புரம்:

    ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தீபம் ஏந்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம் தொடக்க உரையாற்றினர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடக்கி வைத்தார். விழுப்புரம் காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய தீபம் ஏந்திய மாபெரும் பேரணி காந்தி சிலை வரை நடைபெற்றது. அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில துணை தலைவர் குலாம் மொய்தீன், விழுப்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, லதா பீட்டர், நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், விஜயரங்கன், நாராயணசாமி, ஐஎன்டியுசி மாநில இணை செயலாளர் காஜா மொய்தீன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் அலி, சிவாஜி மன்ற தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நடராஜன், விஸ்வநாதன், எஸ்.சி.எஸ்.டி. மாவட்ட தலைவர் சேகர், எஸ்.சி.எஸ்.டி. மாநில துணை தலைவர் உதயானந்தம், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், வட்டார தலைவர்கள் ராதா, ரவி, காமராஜ், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் தொகுதி தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார் விஜயகுமார், கிருஷ்ணகுமார், சீனிவாசன், ஆனந்த், இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் விக்கிரவாண்டி துணை தலைவர் மணிகண்டன்,வர்த்தக பிரிவு தலைவர் ரமேஷ்,ஓபிசி பிரிவு தலைவர் செல்வம், நகர எஸ்.சி.எஸ்.டி. தலைவர் பாரிபாபு , எஸ்.சி.எஸ்.டி. மாவட்ட பொருளாளர் புஷ்பராஜ், ராகுல் காந்தி பேரவை மாவட்ட தலைவர் ஞானசேகரன்,நகர நிர்வாகிகள் சீனு,தாமோதிரன், மூர்த்தி, சுந்தர், வசந்தா காசிநாதன், விக்டோபாய், வசந்தா, முருகேசன்,கீதா, ராஜேஸ்வரி, சுரேஷ், துரைசிங், சிவாஜி கிருஷ்ணன், பரிமளா,இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் சட்டமன்ற மு.தலைவர் ரமணன், சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச் செயலாளர் சாந்தராஜா, இலக்கிய பிரிவு தலைவர் செந்தில்,வட்டார நிர்வாகிகள் திருவெண்ணெய்நல்லூர் ராஜேஷ்,பையூர் முத்து,கொங்கராயனூர் ஆறுமுகம்,ராமகிருஷ்ண, வளவனூர் இளைஞர் காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் ஆனந்த், மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கவிஷ்குமார் ,மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தினேஷ் , துணை தலைவர் ஷாஜகான், திருவெண்ணெய்நல்லூர் எஸ்.சி.எஸ்.டி. வட்டார தலைவர் குமரேசன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் என்றாலே ஊழல் தான்.
    • கர்நாடக வளர்ச்சியின் அறிகுறி தாமரை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெகலாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புராவில் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றனது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் கணக்கு ஊழல் காலத்தை கொண்டது. காங்கிரஸ் என்றாலே ஊழல் தான். காங்கிரக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன். பா.ஜனதா கணக்கில் அம்ரித் காலம் இடம் பெற்றுள்ளது. ஊழல் கதவுகள் மூடப்பட்டதால் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது. அதனால் அவர்கள் மோடிக்கு கல்லறை கட்டுவதாக கூச்சல் போடுகிறார்கள்.

    காங்கிரசார் எனக்கு கல்லறை கட்டுவதில் பரபரப்பாக இருக்கும் நிலையில் மக்கள் தாமரையை மலர வைக்கிறார்கள். கர்நாடகத்தில் நிலையான, பெரும்பான்மை பலத்துடன் கூடிய பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்த அமைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். கர்நாடக வளர்ச்சியின் அறிகுறி தாமரை. வளர்ச்சிக்கு பா, .ஜனதாவிடம் மட்டுமே திட்டங்கள் உள்ளன. கா்நாடகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம், அனுபவம் வாய்ந்த புதிய குழுவை பா.ஜனதா அமைத்துள்ளது. இந்த குழு கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றும். இந்த குழுவுக்கு உங்களின் ஆசிர்வாதம் தேவை. என்னை பொறுத்தவரையில் கர்நாடகம் முக்கியமான மாநிலம். அதனால் எனக்கு உங்களின் ஆசிர்வாதம் தேவை. கர்நாடகத்திற்கு நிலையான அரசியல் பலம் கொண்ட கட்சி தேவை. தனி மெஜாரிட்டியுடன் கூடிய வலுவான அரசு தேவை.

    கர்நாடகத்தை வளர்ச்சியில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல பா.ஜனதாவால் மட்டுமே வலுவான நிலையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க முடியும். இதுவே தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்றும், அதனால் தன்னை வெற்றி பெற வைக்குமாறும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் (சித்தராமையா) கேட்கிறார். காங்கிரஸ் என்ன ஒரு மோசமான நிலைக்கு சென்றுள்ளது பாருங்கள். கர்நாடக மக்கள் சேர்ந்துபோன, தோல்வி அடைந்த காங்கிரசை ஆதரிக்க மாட்டாா்கள் என்று எனக்கு தெரியும். பா.ஜனதா பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு கர்நாடகத்தை கட்டமைப்பதற்கான தேர்தல் ஆகும். இதற்கான திட்டங்கள் பா.ஜனதாவிடம் உள்ளன. அத்தகைய திட்டங்கள் காங்கிரசிடம் இல்லை. அதற்கான ஆர்வமும் இல்லை.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜனதா ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
    • இதுவரை என்னை 91 முறை வெவ்வேறு வழிகளில் அவமரியாதை செய்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்ட சபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    பிதார் மாவட்டம் ஹம்னபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா தேர்தல் வெறும் வெற்றிக்காக மட் டும் அல்ல. கர்நாடகாவை நாட்டிலேயே நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதற்கான தேர்தல். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைந்தால்தான் முன்னேற்றம் அடைய முடியும்.

    இந்த தேர்தல் மாநிலத்தின் பங்கை தீர்மானிக்கும் கர்நாடகாவை நம்பர் 1 ஆக மாற்ற இரட்டை என்ஜின் அரசாங்கம் மிகவும் முக்கியமானது. பா.ஜனதா ஆட்சியை மீண்டும் ஏற்க கர்நாடக மக்கள் தயாராக உள்ளனர். கர்நாடகாவை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவோம்.

    காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜனதா ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடக விவசாயிகள், மக்களுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மாநில விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

    முடிக்கப்படாமல் இருந்த பல்வேறு நீர்பாசன திட்டங்களை பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்.

    நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்தியுள்ளது. அந்த கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் என்னை மீண்டும் அவமரியாதை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை என்னை 91 முறை வெவ்வேறு வழிகளில் அவமரியாதை செய்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி என்னை ஒவ்வொரு முறை திட்டும்போது அது துடைத்து எறியப்படுகிறது. அவர்கள் என்னை தவறாக பயன்படுத்தட்டும். நான் கர்நாடகா மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.

    அம்பேத்கரை கூட காங்கிரஸ் அவமரியாதை செய்கிறது. வீர் சாவர்க்கரை அவமரியாதை செய்வதை நாம் பார்க்கிறோம். சாமானியர்களை பற்றி பேசுபவர்களையும் ஊழலுக்கு எதிராக பேசுபவர்களையும் காங்கிரஸ் வெறுக்கிறது.

    காங்கிரசின் முறைகேடுகளுக்கு வாக்குகள் மூலம் பதிலளிக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார்.
    • கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியான பா.ஜனதா, எதிர்கட்சியான காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    தேர்தலுக்கு 11 நாட்களே உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் கர்நாடகத்துக்கு சென்று தங்கள் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார். அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றது, டெல்லியில் அவருடன் ஒரு மணி நேரம் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியது, ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தது என பல்வேறு செயல்கள் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், அந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும், கர்நாடக தலைவரும் கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள கேட்டு கொண்டதாகவும், இதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

    இப்படிப்பட்ட சூழலில் தான் கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மே முதல் வாரத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கமல்ஹசானை தொடர்பு கொண்டு கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதுதொடர்பாக கோவையில் நடந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும், ராகுல்காந்தி கேட்டு கொண்டதற்கு இணங்க காங்கிரசுக்கு ஆதரவாக தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

    தற்போது அவர் வருகிற மே முதல் வாரத்தில் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்வார். இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் அவர் எந்த தேதியில் பிரசாரம் மேற்கொள்வார் என்பது தெரியவரும் என தெரிவித்தனர்.

    காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதிமய்யம் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ×