search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மீன்சுருட்டி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வினோத்குமார் (வயது24). இவர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோழதரம் கோவிந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் அவருடன் சேர்ந்த இருவர் பாப்பாக்குடி வருவதற்காக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வினோத் குமார் என்பவர் வந்ததால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காளிதாஸ் என்பவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார்.

    இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ஏகமூர்த்தி (வயது 47). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு யமுனா என்ற மனைவியும், ஹர்சிகா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஏக மூர்த்தி பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார். 1-வது மலையில் சென்ற போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மருத்துவ குழுவினருடன் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    டாக்டர்கள் ஏகமூர்த்தியை பரிசோதனை செய்த போது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் டோலி மூலம் ஏகமூர்த்தியின் உடலை கீழே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலியில் சிக்கி புள்ளிமான் பலியானது.
    • கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் இரை தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள நாய்கள் துரத்தின. இதனால் பயந்து ஓடிய புள்ளிமான் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி முள்ளு கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர்கள் புள்ளிமான் உடலை கைப்பற்றி கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.

    • தேவகோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
    • நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே உள்ள நாஞ்சி வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது34), எலனாப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (22). இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அவர்கள் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியூர் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால் வரும் வழியில் இறந்து விட்டார். நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.

    அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.

    • பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார்,
    • இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் இளவரசன் (வயது 25). இவர் பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார். இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இளவரசன் மயங்கி கீழே விழுந்தார்.

    இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், இளவரசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட 1½ மாத பெண் குழந்தை இறந்தது
    • மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மிகவும் சிரமப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த வாழவந்தி கொல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (வயது 21). சமீபத்தில் திருமணமான இந்த தம்பதியினர் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். இதற்கிடையே பவித்ரா கர்ப்பம் ஆனார். தாய் வீட்டில் இருந்த பவித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த 48 நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. உரிய சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவித்ரா குழந்தையை பராமரித்து வந்தார். இதற்கிடையே டாக்டர்களின் அறிவுரைப்படி கடந்த 3-ந்தேதி வாழவந்தி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் குழந்தையுடன் பவித்ரா வீடு திரும்பினார். அப்போது முதல் குழந்தை அழுது கொண்டே இருந்தது.மேலும் குழந்தைக்கு கை, கால் பகுதிகளில் அதிகப்படியான வீக்கம் ஏற்பட்டது.

    அத்துடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மிகவும் சிரமப்பட்டது. இதையடுத்து ராஜகோபால், பவித்ரா இருவரும் குழந்தையை தூக்கிக்கொண்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தனர்.பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெள்ளக்கோவிலுக்கு சென்றுபோது விபரீதம்
    • பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்

    கரூர்

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொடிங்கால்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது23). இவர் வெள்ளக்கோவிலில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணன் ராஜராஜனை பின்னால் அமர வைத்து வெள்ளக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சித்தலவாய் கடை வீதி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் ராஜராஜன் டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர் ராஜராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிக்கம்பட்டி டிராக்டர் டிரைவர் முருகேசனிடம் (48) விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.
    • விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பூரணபுஷ்பம் (வயது 55). இவரது தந்தை பழனிநாதன்(75).

    இவர்கள் செங்கோட்டையில் இருந்து காசிக்கு செல்லும் சுற்றுலா ரெயில் முதன்முறையாக இயக்கப்பட்டதால் அதில் செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்தனர். இந்த ரெயில் ராஜபாளையத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வரும் என்பதால் மகளும், தந்தையும் வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

    முகவூரில் இருந்து ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சாமிராஜ் என்பவரின் ஆட்டோவில் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது எதிர்திசையில் மதுரையில் இருந்து சங்கரன்கோவில் சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.

    இதில் உருக்குலைந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பூரணபுஷ்பம் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை பழனிநாதன் படுகாயம் அடைந்தார். ஆட்டோ டிரைவர் சாமிநாதனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பூரணபுஷ்பம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிநாதன் மற்றும் ஆட்டோ டிரைவர் சாமிநாதனையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.

    • பாஸ்கர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி உப்பாற்று ஓடை அருகே உள்ள பெரியசாமிநகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் பாஸ்கர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தென்திருப்பேரையை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • செங்கல் சூளை வியாபாரியான வீரபத்திரன் டிபன் வாங்க பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது வீரபத்திரன் பைக்குடன் அன்பரசன்(32), ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பக்கம் காந்தி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் வீரபத்திரன் (23), செங்கல் சூளை வியாபாரி.இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சூளையில் வேலைசெய்துகொண்டு இருந்த தொழிலாளிகளுக்கு டிபன் வாங்குவதற்காக பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.

    பண்ருட்டி - அரசூர் ரோட்டில் மணிநகர் பஸ் நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் 4-வது தெருவை சேர்ந்த அன்பரசன்(32) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டது. 

    இந்த விபத்தில் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அன்பரசன் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×