search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • காரை ஹானஸ்ட்ராஜின் உறவினரான சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
    • விபத்து குறித்து மேலூர் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலூர்:

    சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள பி.பி.நகரை சேர்ந்தவர் ஜான் தங்கராஜ். இவரது மகன் ஹானஸ்ட்ராஜ் (வயது29). இவரது மனைவி பவானி (27). இவர்களுக்கு பத்து மாதத்தில் மகிழ் என்ற பெண் குழந்தை உள்ளது. ஹானஸ்ட்ராஜ் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர்களது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஹானஸ்ட்ராஜ் தனது மனைவி, குழந்தை, தாய் ஜெயராணி (47) ஆகியோரை அழைத்து கொண்டு சமீபத்தில் வாங்கிய புதிய காரில் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார்.

    காரை ஹானஸ்ட்ராஜின் உறவினரான சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்களது கார் திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    சூரக்குண்டு பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வாகனங்கள் அருகே உள்ள சாலை வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் பாலம் கட்டும் பணி நடக்கும் இடத்தில் முறையான அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகள் எதுவும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஹானஸ்ட்ராஜ் குடும்பத்தினர் வந்த கார் அந்த வழியாக இன்று காலை வந்தது. அவர்களது கார் திடீரென சாலையின் பக்கவாட்டில் இருந்து தடுப்பு சுவரில் மோதி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பவானி மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்கள் இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் ஹானஸ்ட்ராஜ், அவரது 10 மாத குழந்தை மற்றும் அவருடைய தாய் ஆகிய 3 பேரும் காரின் பின் பகுதியில் இருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நிர்மலா தாடே பள்ளிக்கூடேம் போலீசில் புகார் அளித்தார்.
    • பெற்றோரை இழந்த அவரது 2 மகள்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வீரபாளையத்தை சேர்ந்தவர் பாவிடு (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா (35) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாவிடு மது குடிக்க ஆரம்பித்தார். போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனை தடுக்க வந்த அவரது மகள்களையும் அடித்து உதைத்தார்.

    நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

    கணவனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நிர்மலா இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள தாடே பள்ளிக்கூடேம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    அதற்குப் பிறகும் பாவிடு மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தினார். இதனால் மீண்டும் நிர்மலா போலீஸ் நிலையத்திற்கு சென்று கணவன் மீது புகார் அளித்தார்.

    போலீசார் பாவிடுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாவிடு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

    அவருடைய உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் சாமாதானம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு பாவிடு, நிர்மலா இருவரும் ஒரு அறையிலும், அவருடைய மகள்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அதிகாலையில் பாவிடு கண் விழித்தார். ஜெயிலுக்கு அனுப்பியதால் மனைவியின் மீது அவருக்கு தீராத கோபம் ஏற்பட்டது.

    வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

    அந்தத் தலையை 3 துண்டுகளாக வெட்டி வீசினார். மேலும் நிர்மலாவின் 2 கைகளை துண்டு துண்டாக வெட்டி அறையில் இருபுறமும் தூக்கி எறிந்தார்.

    சத்தம் கேட்டு கண்டுவிழித்த அவரது மகள்கள் ஓடி வந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தாய்க்கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அதற்குள் பாவிடு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலாவின் உடலை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாவிடுவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தப்பி ஓடிய பாவிடு ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெற்றோரை இழந்த அவரது 2 மகள்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர்.
    • ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேலபுலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). சென்னையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பேபி என்கிற ரேணுகா (30) தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    தம்பதியின் மகள் ஸ்ருதிஹா (5), மகன் தீபக் (3) இருவரும் அங்குள்ள அங்கன்வாடியில் படித்து வந்தனர். ரேணுகா தனது 2 குழந்தைகள் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் ரேணுகா அங்கன்வாடியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உடனே அங்கன்வாடிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ரேணுகா அவரது குழந்தைகளுடன் மதிய உணவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் மேலபுலம் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் ரேணுகா மற்றும் அவரது 2 குழந்தைகள் பிணமாக மிதந்தனர். அந்த வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர். 3 பேர் உடல்களை ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக ரேணுகா 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சங்கர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை குருவிக்காரன் ரோடு வைகை தென்கரை ரோடு ரவுண்டானா அருகே சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் பெயர் வெங்கடேசன் என தெரியவந்துள்ளது. மற்ற விபரங்கள் தெரியவில்லை.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிண்டு பீளமேடு சிட்ராவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிண்டு (வயது 25). கட்டிட தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் பீளமேடு சிட்ராவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று பிண்டு வேலை செய்து கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

    அப்போது அவரது இடது கால் அந்த வழியாக சென்ற மின்சார வயரில் பட்டது. கண்இமைக்கும் நேரத்தில் பிண்டுவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பிண்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரூரில் ெரயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்
    • இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கரூர் ெரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், மாங்காசோளிபாளையம் வி.வி. நகர் அருகில் கரூர்-மூர்த்தி பாளையம் ெரயில் தண்டவாளங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கரூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கரூர் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான ெரயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விசாரணையில் அந்த வாலிபர் வலது கையில் ஒரு கருப்பு மச்சம், இடது கையில் ஸ்டார், சிங்கம் படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. ெரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கரூர் ெரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வயலூர் கிராமத்தில் சிறுவன் ஏரியல் மூழ்கி பலியானார்
    • பெற்றோர்கள் தேடி பார்த்த போது அண்ணா குளம் ஏரியில் சிறுவன் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து வயலூர் கிராமத்தில் காலணி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் ( வயது 40). இவரது மனைவி துளசி (35) இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தர்ஷன் (வயது 11), ரெட்சன் (வயது 7) சுகன் (வயது 4.1/2) இந்நிலையில் இன்று காலை 6 -மணியளவில் இவரது வீட்டிற்கு வடக்கு பகுதியில் உள்ள அண்ணா குலம் ஏரியல் காலை கடனை முடிப்பதற்கு சென்ற சிறுவனை வெகு நேரம் ஆகியும் காணவில்லை.

    அதனால் பெற்றோர்கள் தேடி பார்த்த போது அண்ணா குளம் ஏரியில் சிறுவன் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள கடலூர் திட்டக்குடி அரசு பொது மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    • குன்னம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சாத்தனூர் மற்றும் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. அப்போது சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 43) என்பவர் இலுப்பைக்குடி- சிறுவாச்சூர் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இந்தநிலையில் சாத்தனூர் பெரிய ஏரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்னல் தாக்கி பலியான முருகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், சீதா என்ற மகளும், சிவா என்ற மகனும் உள்ளனர்


    • பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்தார்.
    • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை தொட்டிப்பாளையம் பிரிவு அருகே உள்ள டேனியல் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 67). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். சம்பவத்தன்று வெங்கடாசலம் பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்தார்.

    அப்போது நெருப்பு படுக்கையில் விழுந்து தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. அப்போது தீ படுக்கையில் இருந்த வெங்கடாசலம் மீதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வெங்கடாசலத்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்துமாரி,முத்து கணேஷ் 2 பேரும் சுரண்டை கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
    • மருத்துவமனை செல்லும் வழியிலேயே முத்துமாரி உயிரிழந்தார்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் இல்லம் தெருவை சேர்ந்த ராமர். இவரது மகன் முத்துமாரி (வயது 19). அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் முத்து கணேஷ்(19).

    இவர்கள் 2 பேரும் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்துமாரி ஓட்டிச்சென்றார்.

    தென்காசி-குத்துக்கல் வலசை அருகே இலஞ்சி சாலையில் அய்யாபுரம் நோக்கி சென்றனர். அப்போது புளியரையை சேர்ந்த இசக்கி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மாணவர்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் முத்துமாரி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த முத்து கணேஷ் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மற்றொரு மாணவர் முத்து கணேஷ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி சென்று திரும்பிய மாணவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அய்யாபுரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • பள்ளி திரும்பிய சிறுமியிடம் பாட்டி கோபம் கொண்டதால் ஆத்திரம்
    • திருச்சி துவாக்குடியில் நடந்த துயர சம்பவம்

    திருச்சி,

    திருச்சி துவாக்குடி வாளவந்தான்கோட்டை முல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரின் மகள் தேவகி(வயது 11). தேவகி பாய்லர் பிளாண்ட் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி நேரம் முடிந்ததும் தேவகி வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரின் பாட்டி 100 ரூபாய் தொலைந்து போனது தொடர்பாக சிறுமியை திட்டி உள்ளார். இதனால் கோபம் கொண்ட சிறுமி அறைக்குள் சென்றுள்ளார். வெகுநேரம் அறையைவிட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த தந்தை முருகானந்தம் உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மூதாட்டி 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீலாம்பூர்,

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் பொன்கிஆத்தால் (வயது72). சம்பவத்தன்று இவர் அவரது அக்கா வீட்டுக்கு சென்று விட்டு சேலம்-கொச்சின் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத கார் இவர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் பொன்கிஆத்தாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பொன்கி ஆத்தால் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்ப டுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×