search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • கரூர் க.பரமத்தியில் இரண்டு பட்டிக்குள் புகுந்து வெறிச்செயல்
    • கால்நடை மருத்து குழுவினர், உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், க.பரமத்தியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). விவசாயியான இவர் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், பட்டிக்குள் புகுந்த நாய்கள், கடித்ததில் ஏழு ஆடுகள் இறந்தன. அதேபோல், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி ரவி (50) என்பவரது பட்டியில் இருந்த, மூன்று ஆடுகள், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன. தகவல் அறிந்த க.பரமத்தி உதவி கால்நடை மருத்துவர் தமிழரசன் குழுவினர், உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
    • சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து எறையூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா மகன் அக்பர்அலி (வயது 20). இவர் எறையூர் சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வரை சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது மங்களமேடு அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அக்பர்அலி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்கள் துரத்தி கடித்ததில் ரத்தம் கொட்டி செத்தது
    • உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை, சுத்தமல்லி, பூவந்திகொல்லை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது சுத்தமல்லி நீர் தேக்கம். இதில் உள் பகுதிகள் காடுகளாக இருப்பதால் மான், மயில், பறவைகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் காலை நெல் கொள்முதல் நிலையம் அருகே பெண் புள்ளி மான் ஒன்றை நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியதை கண்ட பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு உள்ளனர். பின்னர் அந்த மானை மீட்டு பொதுமக்கள் பார்த்த போது மானில் உடலில் பல இடங்களில் நாய்கடி காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.இது குறித்து தா.பழூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அங்கு வருவதற்குள் மான் பரிதாபமாக இறந்தது. உயிரிழந்த மானின் உடலை அங்கே உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறையினர், அதன் பின்னர சுத்தமல்லி வனப்பகுதியில் புதைத்தனர்.

    • குடும்பத்தினருடன் விடுமுறை சுற்றுலா சென்றபோது பரிதாபம்
    • வாத்தலை போலீசார் விசாரணை

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள தெற்கு உக்கடை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மகள் ரிஸானா தஸ்ரின் (வயது 6), நேற்று விடுமுறை என்பதால் சதாம் உசேன் தனது குடும்பத்துடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது காவிரி ஆற்றின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் குடும்பத்தினருடன் குழந்தை ரிஸானா தஷ்ரின் குளித்து கொண்டிருந்துள்ளது. குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாய் குளித்து கொண்டிருக்கும் வேளையில் திடீர் என்று ரிஸானா தஸ்ரினை காணவில்லை. பதறிப்போன சதாம் உசேன் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் தேடி பார்த்தபோது ரிஸானா தஸ்ரின் தண்ணீர் மூழ்கியது தெரியவந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலியானார்
    • 22 பேர் காயமடைந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே சீமானூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை குளத்தூர் தாசில்தார் சக்திவேல், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதில் 160 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 682 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    .இதில் படுகாயமடைந்த திருச்சி கே.சாத்தனூர் இச்சிக்காமலைப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜெயந்த் (வயது 21) உள்பட 4 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்த் பரிதாபமாக இறந்தார். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சீமானூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.


    • விபத்தில் பெண் வீட்டார் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
    • திருமணத்துக்கு வந்த மணமக்கள் உறவினர்கள் சோகத்துடன் ஊர் திரும்பினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான தனியார் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்த வாலிபருக்கும், நெல்லை மாவட்டம் மேலப்பாலாமடை இந்திரா நகர் காலனியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்துக்காக மேலப்பாலாமடையில் இருந்து பெண் அழைத்து வரப்பட்டார். ஒரு வேனில் உறவினர்கள் பெண்ணுடன் வந்துகொண்டிருந்தனர். கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு அருகே தோண்டிமலை இரைச்சல்பாறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலியாகினர். வேன் டிரைவர் உள்பட 17 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    சிகிச்சையில் இருந்த ஜானகி (வயது55) நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதில் வள்ளியம்மாள், அவரது பேரன் விஸ்வா உடல்கள் அடிமாலி தாலுகா ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது உடல்கள் எஸ்டேட் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

    விபத்தில் பெண் வீட்டார் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்த மணமக்கள் உறவினர்கள் சோகத்துடன் ஊர் திரும்பினர். இதனிடையே விபத்து நடந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வாகனத்தின் பிரேக் சரியாக இருந்தது. ஆபத்தான வளைவு, இறக்கம் கொண்ட சாலையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளது.

    இந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்லும்படி தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இருந்தபோதும் அனுபவம் இல்லாத டிரைவர், அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் விபத்தில் காயம் அடைந்த 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது.

    போரூர்:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மெய்யிரை (வயது39). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நள்ளிரவு 1மணி அளவில் வேனில் மெட்ரோ ரெயில் ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அண்ணா நகர் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ரோகிணி தியேட்டர் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கு பழுதாகி நின்று கொண்டு இருந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் மெய்யிரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் இருந்த மெட்ரோ ரெயில் ஊழியர்களான பாலசந்திரன், ரமணா இருவரும் லேசான காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • விசாரணைக்கு பின்னர் உடலை வடமாநிலத்திற்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    ஜார்கண்ட் மாநிலம் சோடா மாவட்டம் பதம்பூர் பகுதியை சேர்ந்தவர் அனந்த ஹரி ராய் மகன் பரமேஸ்வரராய் (வயது 55). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது ஊரில் இருந்து கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி வாட்டர் போர்டில் சமையல் வேலைக்கு சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தண்ணீர் பள்ளி வாட்டர் போர்டு அருகே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநில அளவிலான மூத்தோர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது.
    • அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான மூத்தோர்களுக்கான கூடைப்பந்து போட்டி ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று கோவை-மதுரை அணிகள் மோதியது. மதுரை அணி வீரர் நேரு (வயது 60) விளையாடி கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதனால் வீரர்கள் சோகம் அடைந்தனர். மேலும் அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.

    • வாலிபர்-முதியவர் பலியாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் ராமானுஜன் (வயது 22). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமானுஜம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வல்சாபுரத்தில் உள்ள தனது சித்தி சித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். இந்த நிலையில் நேற்று காலை துலுக்கன்குறிச்சி அருகில் ரோட்டோரம் நெற்றில் காயத்துடன் ராமானுஜம் இறந்து கிடந்துள்ளார்.

    இதனை கண்ட மாரிச்சாமி என்பவர் ராமானுஜத்தின் தந்தை வரதராஜிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வரதராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ராமானுஜம் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், ராமானுஜம் மோட்டார் சைக்கிளில் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே கீழ இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (52). இவர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீ ெரன பழுதாகி விட்டது. அவர் சாலையோரமாக நின்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த அவரது மகள் திவ்யா முனீஸ்வரி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறுமி படுகாயத்துடன் சிகிச்சைக்கு அனுமதி
    • முசிறி அருகே திண்ணகோணத்தில் துயரம்

    முசிறி,

    முசிறி அருகே திண்ணகோணம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியக்காள் (வயது 60). விவசாயக் கூலி தொழிலாளி. தற்சமயம் அதே ஊரில் வசிக்கும் உறவினர் இளையராஜா என்பவரின் வீட்டில் பெரியக்காள் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள சூரியகாந்தி தோட்டத்தில் பெரியக்காள் 7 பெண்களுடன் விவசாய வேலை செய்துள்ளார். அப்போது திடீர் என்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் விவசாய பணி செய்து கொண்டிருந்த பெண்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முற்பட்டனர்.

    ஆனால் அதற்குள் அப்பகுதியை இடி, மின்னல் தாக்கி உள்ளது. மின்னல் தாக்கியதில் பெரியகாள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த ரோகினி (15) என்ற சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற 5பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இடி மின்னல் தாக்கியதில் பெண் பலியான சம்பவம் குறித்து அப்பகுதியினர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியக்காள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் கூலி தொழிலாளி இடி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான்.
    • எதிர்பாராதவிதமாக கண்ணன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் கண்ணன் என்ற சரவணன் (வயது 10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு அருகே உள்ள மாறனேரி குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான்.

    அங்கு நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளான். இதனை கண்ட அவனது நண்பர்கள் , ஊருக்குள் சென்று பெரியோர்களை அழைத்து வருவதற்குள் கண்ணன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×