search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.
    • பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயாநகர மாவட்டம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 47). கூலி தொழிலாளி. அவரது மனைவி லட்சுமணம்மா. கணவன், மனைவி இருவரும் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    நேற்று காலை வேலைக்கு சென்றனர். மதியம் கணவன், மனைவி இருவரும் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசியது.

    பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.

    அப்போது அப்பா ராவ் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்ட அவரது மனைவி கதறி துடித்தார்.

    மற்றொரு சம்பவம்...

    அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் போடுராஜூ குன்னாலு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்புநாயுடு (51). இவர் கிராமத்துக்கு அருகில் உள்ள மலை உச்சிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.

    காற்றில் வாழை, மா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன.

    • ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியானர்
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள கருக்கை கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் கடலூர் மாவட்டம் டி.வி.புத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனக சபை மகன் ஜெகதீசன் (வயது 45) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த பாவாடை மகன் பழமலை (40) என்பவரும் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் மயிலாடுதுறை சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது கார் கருக்கை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையில் முன்பு சென்ற ஜெகதீசன், பழமலை இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இந்த விபத்தில் ஜெகதீசன், பழமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


    • மருதுார் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம்
    • பிரேதத்தை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை

    கரூர், 

    மருதூர் டவுன் பஞ்., வீரம்பூரில் அதிகாலையில் ரயிலில் அடிபட்டு, அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார், எவ்வாறு ரயிலில் அடிபட்டார் என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானர்
    • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 80). அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு (50). ராமசாமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தங்கராசு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராமசாமி மீது மோதியது.

    இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தங்கராசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், ராமசாமி திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமசாமி, தங்கராசு ஆகியோர் நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூறைக்காற்றால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன.
    • 34 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள பல பகுதிகள் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக 8 முறை கடுமையான சூறைக்காற்றை சந்தித்தன. இதனால் பெய்த கனமழையால் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 34 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது.

    மேலும் இந்த சூறைக்காற்றால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. இதில் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கிருந்த 3 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். எனவே மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதற்கிடையே ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட், லிங்கன், மெக்லைன் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அவசர நிலை அறிவித்து அந்த மாகாண கவர்னர் கெவிட் ஸ்டிட் உத்தரவிட்டார்.

    • அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.
    • , சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் லோடு ஏற்றி கொண்டு லாரி வந்தது. அப்போது அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.இதில் கீழே விழுந்த நபர் மீது லாரியின் பின் சக்கரத்தில் மாட்டி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.  அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கார் மோதி பெண் தொழிலாளி பலியானார்
    • இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி ரூபி (வயது 38). இவர் திருச்சியை அடுத்த மணிகண்டன் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கல்லூரியில் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல திருச்சி-மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ரூபி மீது மோதியது.இதில் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரூபி இறந்தார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் ரோட்டில் சண்முகா ஓட்டல் அருகில் முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார், அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாகனம் மோதி புள்ளி மான் பலியானது
    • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர்.

    பெரம்பலூர:

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே நெடுவாசல் பிரிவு சாலையை தாண்டி நேற்று அதிகாலையில் புள்ளி மான் ஒன்று பலத்த காயங்களுடன் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர். சாலையை கடக்கும் போது வாகனம் மோதி மான் இறந்துள்ளது. மேலும் அதன் உடல் மீது சில வாகனங்கள் ஏறி சென்றதால் உடல் சிதைந்து விட்டது. உயிரிழந்தது பெண் மான் என்றும், 3 வயது இருக்கும் என்றும், வனத்துறையினர் தெரிவித்தனர்.


    • உடையார்பாளையம் அருகே ஏரியில் விழுந்து ஒருவர் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு காலனிதெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 42). இவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் தங்கமுத்து பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சின்ன வட்ட குளம் ஏரியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி உள்ளிட்ட போலீசார் தீயணைப்பு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போதுதான் பிணமாக கிடந்தவர் மாயமான தங்கமுத்து என்பது தெரியவந்தது. மேலும் இவர் மது போதையில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து வீசி விட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி பலியானார்
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், லிங்கமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பிரகாஷ், அதே பகுதியில் கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில், நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, பிரகாஷ் குடிபோதையில் இருந்ததால், நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்து உள்ளார். உடலை கைப்பற்றி அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் நாற்கர சாலையில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு கிராமத்தை சேர்ந்தவர் கெபின். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 5 பேருடன் காரில் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று மாலை ஊர் திரும்பினர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் நாற்கர சாலையில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரில் இருந்த கெவினின் மனைவி விண்ணரசி (வயது43), ரபேல்தாஸ் மனைவி பேபி ஷாலினி (26), ஜோசப் ஆண்டனி மனைவி மேரி ரோஸ்லின் (42), காரை ஓட்டி வந்த எட்வின் என்பவரின் மனைவி மேரி சாந்தி (44) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்ததும் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் எட்வின் மனைவி மேரி சாந்தி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×