search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • வாகனம் மோதி பெண் பலியானார்
    • போலீசார் இதுகுறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகள் கொளஞ்சி(வயது 45). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த நிலையில் இவரை, அவரது உறவினர்கள் பராமரித்து வந்தனர். நேற்று காலை அவர் தனது உறவினர் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடினர்.

    அப்போது அவர் திருமாந்துறை-அகரம்சீகூர் சாலையில் வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொளஞ்சி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிளில்் சென்ற ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து பலியானார்
    • இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் முருகேசன் (வயது50). இவர் சாத்தம்பாடி ஊராட்சியில் பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சாத்தம்பாடி ஊராட்சியில் பணி முடித்துவிட்டு வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் தனது மனைவி வீடான சிலால் கிராமத்திற்கு செல்வதற்காக தா.பழூர்- ஜெயங்கொண்டம் சாலை யில் சென்று கொண்டி ருந்தார். அப்போது கோடங்குடி அருகே வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதில் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குஅவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




    ஆண்டிமடம் அருகே கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த கூவத்தூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (60). இவர் ஆண்டிமடம் - ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் கூவத்தூர் பகுதியில் சாலையைக் கடக்க முற்பட்டபோது நெய்வேலியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வேகமாக சென்ற சசிகுமார் என்பவர் ஓட்டி வந்த கார் கணேசன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார் இரண்டும் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டுநர் சசிகுமாரை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்




    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலியானார்
    • இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (35).இளநீர் வியாபாரியான இவர் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் இளநீர் வாங்கி விற்பனை செய்து வந்தார். இன்று ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மரங்களில் இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

    எதிர்பாராத விதமாக தவறி விழுந்த இளநீர் வியாபாரி தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.உடனடியாக இது குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனசேகரன் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்
    • திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு பழையூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கி ருந்து ஊருக்கு புறப்பட்டார். வடபொன்பரப்பி அடுத்த புதூர் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு வளைவு பகுதி யில் வந்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீ சார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி னர். பின்னர் விபத்தில் பலியான ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக லாரி மீது வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நசிமா இறந்தார்.
    • டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நித்யா பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கர்நாடகா மாநிலம், பெங்களுரூ பன்னகட்டா ரோடு பில்லகனல்லி பகுதியை சேர்ந்தவர் நயாஷ்பாஷா (வயது33), இவரது மனைவி நசிமா (27).

    இவர்கள் இருவரும் வாகனத்தில் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலையில் சப்படி அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி எவ்வித சிக்னல் இல்லாமல் திடீரென சாலையில் நிறுத்தி யுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக லாரி மீது வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நசிமா இறந்தார்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இதேபோல் ஒசூர் சூசுவாடி பகுதியை சேர்ந்த வர் குமரேசன். இவரது மனைவி நித்யா (35), இவர் ஸ்கூட்டரில் பெங்களுரூ - ஒசூர் சாலையில் தமிழ்நாடு எல்லை அருகே சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நித்யா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிப்காட் போலீசார் டிப்பர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாகனம் மோதி வாலிபர் பலியானார்
    • எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள மகாராஜா ஹோட்டல் எதிரே இன்று அதி காலை 3-மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தகவலறிந்து உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
    • திடீரென ரோஜா அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு வார்டின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

    திருவொற்றியூர்:

    திருவள்ளூர் மாவட்டம், கொங்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் வருண். இவரது மனைவி ரோஜா(வயது22). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 ½ வயதில் ஆண்குழந்தை உள்ளது.

    இந்நிலையில் ரோஜா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த 22-ந்தேதி பிரசவத்திற்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    திடீரென அவருக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. இதில் உடல் நிலை மோசம் அடைந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே நேற்று அவர் திடீரென இறந்தார். இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் டாக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையில் ரோஜாவின் வயிற்றில் இருந்த சிறிய கட்டி வெட்டப்பட்டதால் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் அவர்கள் திடீரென ரோஜா அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு வார்டின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ராயபுரம் போலீசார் விரைந்து வந்து ரோஜாவின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
    • கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவது, கொடுப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.

    பெரியபாளையம்:-

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.

    இப்பள்ளியில், சுமார் 916 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 9வது வகுப்பு இ3 பிரிவில் படிக்கும் மதுரைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்(வயது14) என்ற மாணவனும், ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச் செல்வன்(வயது14) என்ற மாணவனும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவது, கொடுப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், தமிழ்ச்செல்வன் மயங்கி கீழே விழுந்தான்.

    இதனைக் கண்ட அருகில் இருந்த மாணவர்கள் கூக்குரல் இட்டனர். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் அந்த மாணவனை மீட்டு ஆரணி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாக கூறினர்.

    இச்சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    சம்பவ இடத்துக்கு ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காஞ்சிபுரம் நோக்கி மீன் ஏற்றி சென்ற சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஐஸ்கட்டிகளை இறக்கி கொண்டு இருந்த வேன் மீது வேகமாக மோதியது.
    • பலியான அஜய் குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ரகு. கரும்பு ஜூஸ் கடை வைத்து உள்ளார். இவரது மகன் அஜய்குமார் (வயது15). இவர் தண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை அஜய்குமார் பழஞ்சூரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சரக்கு வேனில் கொண்டு வரப்பட்ட ஐஸ்கட்டிகளை கடைக்கு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் வேனின் அருகே நின்று கொண்டு இருந்தார்.

    அந்த நேரத்தில் மதுரவாயலில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி மீன் ஏற்றி சென்ற சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஐஸ்கட்டிகளை இறக்கி கொண்டு இருந்த வேன் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஐஸ்கட்டி வாங்க வந்த மாணவன் அஜய்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அருகே நின்று கொண்டு இருந்த ஐஸ்கட்டி ஏற்றி வந்த வேனின் டிரைவர் சுரேஷ் மற்றும் மீன்வேன் வேன் டிரைவர் சத்யா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான அஜய் குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    மாணவன் அஜய்குமார் அடுத்த வாரம் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் ஐஸ்கட்டி வாங்க வந்தபோது அவர் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

    ×