search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மலைத்தேனி கொட்டியதில் கோயில் பூசாரி உயிரிழந்தார்
    • 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பூலாங்குறிச்சியிலிருந்து செவ்வூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள அரசினர் கலைகல்லூரி மாணவர்கள், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் ஆகியோரை மலைத்ததேனீக்கள் கூட்டமாக வந்து விரட்டி விரட்டி கொட்டியுள்ளது. இதில் செவ்வூர் சோனையன் கோயில் பூசாரி சிவா (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மலைத்தேனீக்கள் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு தம்பதியினர் கீழே விழுந்துள்ளனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களையும் மழை தேனீக்கள் முகம் மற்றும் உடல்களில் கொட்டியதில் வீக்கமடைந்து மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் கார்களில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த சிலரை மீட்டு பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுகாயமடைந்த சிலர் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மலைத் தேனீக்கள் கொட்டி உயிரிழந்த சோனையன் கோயில் கோயில் பூசாரி சிவாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 13 பேர் பொன்னமராவதி மற்றும் பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பூலாங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டாங்கொளத்தூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது திடீரென கார் மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று அதிகாலை கார் வந்து கொண்டு இருந்தது. காரை வெங்கம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் தினேஷ்(24) ஓட்டினார். காரில் தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள், 2 மாணவர்கள் பயணம் செய்தனர்.

    காட்டாங்கொளத்தூர் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது திடீரென கார் மோதியது. இதில் டிரைவர் தினேஷ் பரிதாபமாக இறந்தார். மாணவ-மாணவிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ளியஞ்சோலை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வாலிபர் பலி
    • 2 மாவட்ட எல்லை பிரச்சினையால் பரிதவிப்பு

    உப்பிலியபுரம்,

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத் துள்ள பாபுராஜபுரம் இஸ்லாமியர் தெருவைச் சேர்ந்தவர் சர்புதீன். இவ–ருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் மகன் மாலிக் (வயது 19) பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந் தார்.தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் 7 பேருடன் நேற்று புளியஞ்சோலைக்கு சென்றார். பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித் துவிட்டு, நாட்டாமடு பகுதியில் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது யாரும் கவனிக்காத நேரத் தில் மாலிக் தண்ணீரில் மூழ் கினார்.அவரது நண்பர்கள் மாலிக்கை தேடியபோது, தண்ணீரில் மூழ்கியதை அறிந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆபத் தான நிலையிலிருந்த மாலிக்கை, மோட்டார் சைக் கிளில் உட்கார வைத்து, அருகிலுள்ள பி.மேட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உப்பிலியபுரம் அரசு சுகாதார, நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது மூச்சுத்திணறல் காரணமாக மாலிக் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.புளியஞ்சோலை நாட்டமடு வனப்பகுதி நாமக்கல் மாவட்டம் வாளவந்திநாடு காவல்நிலைய எல்லைக் குட்பட்டதால், வழக்கு சம்மந் தமாக மாலிக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட் டுள்ளது. சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். முன்னதாக நண்பர்கள் வேறு வழியின்றி பலியான மாணவர் மாலிக் உடலுடன் அங்கு சென்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.நாட்டாமடுவில் தொட–ரும் இதுபோன்ற மரணங்களில், எல்லை பிரச்சினை சம்மந்தமாக உடல்கள் அலைக்கழிக்கப்படுவதும், உயிரைப் பறிகொடுத்தோர், தேவையற்ற மன உளைச்சலுக்குள்ளாவதும் வாடிக் கையாகி வருகிறது. புளியஞ்சோலை, நாட்டாமடு பகுதியை உப்பிலியபுரம் காவல் நிலைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதும், மாற்று அமைப் பாக நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் இப்பகுதியில் புறக்காவல் நிலை–யம் அமைப்பதுமே, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டாமடு பகுதியில் தொடரும் துர்மரணங் களை தடுக்க, சுற்றுலா துறையினரும், வனத்துறையினரும் இணைந்து முன்னறிவிப்பு பலகைகள், மருத்துவ முதலுதவிகளை மேம்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

    • முன்னே சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து
    • படுகாயம் அடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை

    அகரம்சீகூர்,

    மதுரை மாவட்டம் ஆளவந்தான் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஷாம்கண்ணன்(வயது 22), மதுரை கே.கே. நகரை சேர்ந்த சஷ்வந்த்( 25 ), மதுரை விநாயகர் நகரை சேர்ந்த ஆகாஷ்(24 ), மதுரையை சேர்ந்த அஜய் (22 ) ஆகியோர் மாருதி ஸ்விட் காரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு அடுத்துள்ள தம்பை பகுதியில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த மணிகண்டன்(33) என்பவர் ஓட்டி சென்ற ஜல்லி கல் லோடு ஏற்றிய டிப்பர் லாரி இவர்கள் சென்ற காருக்கு முன்னாள் சென்றுள்ளது. இந்த லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்து நடந்த இடத்திலேயே ஷாம் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் படுகாயம் அடைந்த அஜய் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி உறையூரில் பரிதாபம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    திருச்சி

    திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் சன்வந்த் (ஒன்றரை வயது). இந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. 3 அடி ஆழம் கொண்ட அந்த தண்ணீர் தொட்டியில் நிரம்ப தண்ணீர் இருந்துள்ளது. இதில் மூழ்கிய சன்வந்தை பெற்றோர் உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து அவரது தாய் திவ்யபாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்.




    • மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது, பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது
    • 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், திறந்தவெளி கிணற்றில் விழுந்து கடந்த மூன்றாண்டில் மட்டும் 336 பேர் இறந்துள்ளனர்.மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடி க்கை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் நேரடி கண்காணிப்பில், அந்தந்த மாவட்டங்களில், பேரிடர் சார்ந்து மக்கள் எதிர்கொ ள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராம,நகர்ப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் நீரில் சிக்கி பலியாகின்றனர்.நெடுஞ்சாலை ஓரங்களில் திறந்து நிலையிலும், வேலி அமைக்கப்படாத கிணற்றிலும் தவறி விழுந்து பலரும் உயிரிழக்கின்றனர்.

    உயரும் பலி எண்ணிக்கை : கடந்த 2020ல் 104 பேர், திறந்தவெளி கிணறு, குளங்களில் விழுந்து இறந்துள்ளனர். 2021ல் 109 பேர்; 2022ல் 123 பேர் என மூன்றாண்டில் மட்டும் 336 பேர் பலியாகியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்க ளுக்கு கடந்த 2020ல் குளம் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க கேட்டு 687 அழைப்புகள் வந்துள்ளன. 2021ல் இது 1,308,2022ல் இது 2032 அழைப்புகளாக அதிகரித்துள்ளது.இதில் 80 சதவீதம் அழைப்புகள் திறந்தவெளி கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பாக தான்.மனிதர்கள் மட்டுமின்றி பூனை, நாய், மான் உள்ளிட்ட பிராணிகளும் அவ்வபோது திறந்தவெளி கிணற்றில் விழுகின்றன.கடந்த 2020ல் 356, 2021ல், 846, கடந்த 2022ல், 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    • ஜனனி (வயது 21) இவர் மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தபோது,எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது
    • இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் ஜனனி (வயது 21) இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் திம்மாபுரம் கிரா மத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார். சின்னசேலம் மின்சார அலுவலகம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர் 

     அப்போது தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் பேரக்குழந்தைகளான பார்கவி (வயது 12)வெற்றி மாறன் (வயது 7)ஆகியோ ருடன் இருசக்கர வாக னத்தில் வந்தார். எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது. இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 5பேரும் சேர்க்கப்பட்டனர். ன்னர் ஜனனியை மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை ஜனனி பரிதாப மாக இறந்து போனார். இது குறித்து ஜனனி தந்தை சின்ன துரை கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய் (வயது46), அவரது தந்தை ஆனந்தப்பா 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நகைகடை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் ஓசூர் அருகே உள்ள சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்ப்பா (வயது57) இவர் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரி வந்த வாகனம் இவர் மீது மோதி வெங்கடேசப்பா படுகாயம் அடைந்தார் உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    போகும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நெடுஞ்சாலையை கடந்த போது விபத்து
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர்,

    குளித்தலை அருகே திம்மாச்சிபுரம், குடித்தெருவை சேர்ந்தவர் பாக்கியம், (வயது 71). இவர், காவிரி ஆற்றுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பைக், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாக்கியத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பாக்கியம் மகன் பெரியசாமி புகாரின் படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

    • பைக்கில் தனியாக சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி விழுந்தவர் பலி
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    குளித்தலை அருகே, அய்யம்பாளையம் பஞ்., குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மும்முடிவேந்தன் (வயது 34), கூலி தொழிலாளி, இவர், ஃபேஷன் ப்ரோ' பைக்கில் குருணிகுளத்துப்பட்டி தேவர்மலை நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகே, சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம டைந்த மும்முடிவேந்தனை, அருகில் இருந் தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மும்முடிவேந்தன் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் கண்ணம்மாள், புகாரின்படி, சிந்தா மணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.




    • செந்தில்குமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்திய கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, ராமசாமி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). கட்டிட தொழிலாளி. இவர் எஸ்ஓசியில் உள்ள கட்டுமான கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல கட்டிடத்தின் 2-வது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பிகளை எடுத்துச் சென்றபோது, கட்டிடத்தின் அருகே சென்ற உயர்அழுத்த மின்கம்பியின் மீது இரும்பு கம்பி உரசியது. இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் மனைவி காமாட்சி (25) போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இறங்கி நடந்து சென்று உள்ளனர்.
    • ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத சூழலில், வேறு வழியின்றி கோவிலுக்கு ஆற்றில் இறங்கி சென்று உள்ளனர்.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிலாவாத் கிராமத்தில் வசித்து வரும் குஷ்வாஹா சமூகத்தினர் சிலர் ஆண்கள், பெண்கள் என கைலா தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர்.

    அவர்கள் மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இறங்கி நடந்து சென்று உள்ளனர். அவர்கள் ஆதரவாக ஒருவருக்கு ஒருவர் கையை பிடித்தபடி தண்ணீரில் நடந்து உள்ளனர். இந்த ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ளன என கூறப்படுகிறது.

    அப்போது திடீரென ஒரு முதலை அவர்களை தாக்கி உள்ளது. இதனால் பயந்து போன அவர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். ஆற்றில் நீரோட்டமும் அதிகளவில் இருந்து உள்ளது. இதில், 8 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மற்ற 9 பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டனர்.

    ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத சூழலில், வேறு வழியின்றி கோவிலுக்கு ஆற்றில் இறங்கி சென்று உள்ளனர். போலீசார் இதுவரை தேவகிநந்தன் (வயது 50), என்ற ஆண், கல்லோ பாய் என்ற பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் என 3 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர். மீதமுள்ள 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    ×