search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • விஷ பூச்சி கடித்து ஆடு மேய்த்தவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் அக்ரகார தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 29). இவருக்கு கடந்த வாரத்தில் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வசிக்கும் சகோதரி பாண்டீஸ்வரி வீட்டிற்கு சென்றார்.

    அவர் சுப்பையாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று சுப்பையா ஊருக்கு சென்று விட்டார். 2 நாட்கள் கழித்து மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் சுப்பையா சகோதரி வீட்டிற்கு வந்தார். அவரை மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அரசு மருத்து வமனைக்கு செல்லுமாறு கூறி உள்ளனர்.

    உடனடியாக பாண்டீ ஸ்வரி தம்பி சுப்பையாவை ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் தலைமை டாக்டர் இல்லாததால் மறுநாள் வரும்படி கூறி உள்ளனர்.

    மறுநாள் சென்றபோது அவரை பரிசோதித்த தலைமை டாக்டர் உடலில் விஷம் பரவி இருப்பதாக கூறி பூச்சி எதுவும் கடித்ததா? என சுப்பையா விடம் விசாரித்தார். அப்போது தான் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது பூச்சி கடித்ததாக சுப்பையா கூறினார். அவருக்கு சிகிச்சை அளித்த தலைமை டாக்டர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டீஸ் வரி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பாண்டு மகன் சக்கரவர்த்தி (வயது28). இவர் மொரப்பூரில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சக்கரவர்த்தி வரும் வழியில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் துக்கப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). விவசாயியான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக புதுகொக்காரப்பட்டியைச் சேர்ந்த பிரபு (31) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த ரமேசை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 3 பேர் பலியான சம்பவம் அவரவர் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சியில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலியானார்
    • இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள்ரெனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    திருச்சி,

    திருச்சி வடக்கு துவாக்குடி மலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரோஸ்நிர்மலா (வயது 53). இவர் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் தனது தாயாரின் நினைவு நாளுக்காக பூமாலை வாங்க சம்பவத்தன்ற ரோஸ்நிர்மலா திருச்சியில் உள்ள காந்திமார்க்கெட்டுக்கு மதியம் தனியார் பஸ்சில் வந்தார்.

    வெங்காயமண்டி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்குவதற்காக முன்புற படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பஸ்சை டிரைவர் வேகமாக சப்-ஜெயில் ரோட்டில் இருந்து மரக்கடை சாலைக்கு திருப்ப முயன்றதாக தெரிகிறது. இதில், பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த ரோஸ்நிர்மலா பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதற்குள் பஸ் திரும்பியதால், பஸ்சின் பின் சக்கரம் ரோஸ்நிர்மலாவின் கால்களில் ஏறி இறங்கியது.

    இதில் அவருடைய இரு கால்களும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள்ரெனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரோஸ் நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக ரோஸ்நிர்மலா உயிரிழந்தார்.

    • சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
    • 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மஜ்ரா கொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சர்கார் கொல்லப்பட்டி பூதநாச்சி அம்மன் கோவில் அருகில் விவசாய தோட்டத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

    கந்தசாமி மகன் சதீஷ்குமார் (வயது 41), மஜ்ரா கொல்லப்பட்டியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்தார். இதை கந்தசாமி கவனித்து வந்ததால் பட்டாசு ஆலையை தற்போது கந்தசாமியின் மகன்களான வெங்கடேசன், சதீஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.

    பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆர்டர் அதிகமாக இருந்ததால் பட்டாசுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதில் 3 பேர் மதியத்துக்கு பிறகு சாப்பிட சென்றுவிட்டனர். இதனால் ஆலையில் 9 பேர் மட்டுமே வேலை பார்த்தனர்.

    அப்போது ஆலையில் பட்டாசுக்கு மருந்து கலவையை சதீஷ்குமார் தயார் செய்தபோது பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் பட்டாசு ஆலை தரை மட்டமானதுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அங்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    பட்டாசு ஆலை வெடித்ததில் 9 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி படி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் சதீஷ்குமார் 41, நடேசன் 40, எம்.கொல்லப்பட்டி அருகே உள்ள சடையாண்டி ஊரைச் சேர்ந்த பானுமதி (55) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.

    3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியைச் சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), எஸ்.கொல்லப் பட்டியை சேர்ந்த மணிமேகலை (36), பிரபாகரன்(30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அனைவரும் 40 முதல் 60 சதவீதம் உடல் கருகிய நிலையில் உள்ளதால், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரும், காயம் அடைந்த 6 பேரின் உறவினர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்தில் இறந்த சதீஷ்குமாரின் கை 500 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிடந்தது. அதேபோல பானுமதி என்ற பெண்ணின் தலையும் துண்டானது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    இதற்கு இடையே சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரிடமும் வாக்குமூலம் பெற்றார்.

    அப்போது, விபத்தில் படுகாயம் அடைந்த பிருந்தா (28) கூறுகையில், எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தோம். நான் பட்டாசுகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. என்ன ஆனது? எப்படி ஆனது என்று தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. என் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு கண் கலங்கினார்.

    பட்டாசு தயாரிப்பதற்கு 10 சதவீதம் கார்பனும், 75 சதவீதம் பொட்டாசியம் நைட்ரைட்டும், 15 சதவீதம் சல்பரும் பயன்படுத்தப்படுகிறது. இதனை சரியான அளவில் கலக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் அதிக அளவில் கலந்தால், இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கலவை செய்யும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனை சதீஷ்குமார் கலந்த போது தான் வெடி விபத்து நடந்துள்ளதால் அவர் கைதுண்டானதும், அவர் அருகில் நின்ற பெண்ணுக்கும் தலை துண்டாகிய கொடூர சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

    • திருப்பூர் அவினாசி பாளையம் பல்லடம் சாலையில் செல்லும்போது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
    • மரத்தில் கார் மோதி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருச்சி நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு புறப்பட்டார்.

    திருப்பூர் அவினாசி பாளையம் பல்லடம் சாலையில் செல்லும்போது திடீரென நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகள் கிருத்திகா (வயது11) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி கிருத்திகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உடனடியாக அவினாசி ப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது45). தர்காவில் அஜிரத்தாக உள்ளார். இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    கூவத்தூர் அடுத்த பெருந்துறவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே பெருங்குடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராகுல்(23) மற்றும் அவரது நணபர் ஒருவர் என 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இப்ராகிம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின.

    மோட்டார் சைக்கிளில் வந்த இப்ராகிம் மற்றும் என்ஜினீயர் ராகுல் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராகுலுடன் வந்த அவரது நண்பர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய வாலிபருக்கும் அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
    • ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.

    இவரது மகன் முருகேசன்(வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி காளிஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முருகேசனை அவரது மனைவி காளீஸ்வரி பிரிந்து சென்றார். இதனால் முருகேசன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்ற பிறகு முருகேசன் ராசு கவுண்டன் தோட்டத்தில் தனது உறவினரான சிவராசு என்பவருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    மனைவி பிரிந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையான அவர் குடித்து கொண்டு தோட்டத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று முருகேசன் மது குடித்து விட்டு, தோட்டத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள கிணற்று மேட்டில் அமர்ந்து இருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

    இதில் தண்ணீரில் மூழ்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பாறை அருகே இருவேறு சம்பவங்களில் இடி, மின்சாரம் தாக்கி இருவர் பலியாகி உள்ளனர்
    • னர் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சியம்மாள் (வயது 65). இவர் இன்று அதிகாலை இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அந்த பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் மழையால் மின் கம்பி ஒன்று அறுந்த நிலையில் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது.தரையில் இருந்து சுமார் 4 அடி கூட உயரம் இல்லாத நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை கவனிக்காமல் அதனை மீனாட்சியம்மாள் கடக்க முயற்சித்து உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக அவரது உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அலறல் சப்தம் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.மேலும் இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியில் உடனடியாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.இதே போல் வையம்பட்டியை அடுத்த பெரிய வெள்ளபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (65). விவசாயியான இவர் நேற்று மாலை அருகில் உள்ள தோட்டத்தில் மாட்டை பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது இடி மின்னல் ஏற்பட்ட நிலையில் திடீரென இடி தாக்கவே அதே இடத்தில் வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், வரதைய்ய பாலம் மண்டலம், குவ்வகுளி பகுதியில் கல்யாண் குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

    பட்டாசு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் அருகில் உள்ள குடோனில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.

    இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமி அதிர்ந்தது. வெடி விபத்தில் வீடுகள் குலுங்கின.

    அப்போது பட்டாசு சேமிப்பு கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த சாது நாகேந்திரா (வயது 31), எல்லக்கட்டாவை சேர்ந்த சங்கரய்யா (30), ஏழுமலை (45) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மற்றொரு தொழிலாளி வீரராகவ் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கல்யாண் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தொழிலாளர்களின் உடல் பாகங்கள் அங்குள்ள மரக்கிளைகளில் தொங்கியது. இது வெடி விபத்தின் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தியது.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு திருப்பதி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லை. பட்டாசு சேமித்து வைக்க மட்டுமே அனுமதி உள்ளது. பட்டாசு சேமிப்பு தொடங்கியதற்கான உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது தெரியவந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமலேயே பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

    அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதில்லை எனவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.

    பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    பொள்ளாச்சி,

    சேலம் மாவட்டம் ஒமலூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது47). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அண்மையில் நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியின் மனைவி இறந்து விட்டார்.

    இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்பிரமணி தனது மகன்களுடன், கோவை கிணத்துக்கடவு அருகே வடக்குபாளையம் கோபாலபுரத்திற்கு வந்தார்.

    அங்கு தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார். அவருடன் அவரது நண்பரான ராமு (46) என்பவரும் சென்றார். இவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    மோட்டார் சைக்கிளை ராமு ஓட்ட, சுப்பிரமணி பின்னால் அமர்ந்து இருந்தார். கோவில்பாளையம் சென்று இ-சேவை மையத்தில் பணத்தை அனுப்பி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது பொள்ளாச்சி-கோவை சாலையில் எஸ்.மேட்டுப்பாளையம் அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    இதில், ராமு, சுப்பிரமணி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி சாலையில் வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ராமு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    ெதாடர்ந்து பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை, வெறிநாய் கடித்ததில் பலி
    • நாய்களை கட்டுப்படுத்திட கோரிக்கை

    கரூர்,

    கரூர் மாவட்டம், வரவணை ஊராட்சி பாப்பணம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கதிர்வேல். இவர் தனது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கதிர்வேல் தனது தோட்டத்தில் அமைந்துள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த வெறிநாய்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடிக்க முற்பட்டுள்ளன. அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். இதனால் வெறிநாய்கள் தப்பி ஓடி விட்டன. இதில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் ஒரு ஆடு பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளது. இதேபோல் வரவணை ஊராட்சி பகுதியில் தொடர்ந்து வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்தி கால்நடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ×