search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • பிச்சன்(53) விவசாயி. இவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஒட்டி சென்று,மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச்சென்றார், அப்போது அதில் ஒரு மாடு திடீரென பிச்சனை முட்டி தள்ளியது.
    • இதில்,பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகன் பிச்சன்(53) விவசாயி. இவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஒட்டி சென்றார். பின்னர் மீண்டும் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்,

    அப்போது அதில் ஒரு மாடு திடீரென பிச்சனை முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    • இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்து
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

    கரூர்,

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் திவாகர் (வயது 19). கூலி தொழிலாளியான இவர், கடவூரில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு, தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமலைராயபுரம் காலனி அருகே சென்றபோது, கடவூரிலிருந்து இருந்து நாச்சிமுத்து வந்த இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திவாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திவாகரின் தாய் தேவி, கொடுத்த புகாரின்படி பாலவிடுதி போலீசார், நாச்சிமுத்து மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சரக்கு வாகனம் மோதி விபத்து
    • மகளை சந்தித்து விட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட பரிதாபம்

    கரூர்,

     கிருஷ்ணராயபுரம் அடுத்த சாலைப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). கூலி தொழிலாளியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனது மகள் திவ்யா வீட்டுக்கு வந்துள்ளார்.பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் அருகே வந்த போது கரூர் நோக்கி சென்ற சரக்கு வாகனம். இவர் மீது மோதியது.இதில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிருஷ்ண மூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகள் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கணபதி (வயது 45) இவர் தனது சொந்த வேலை காரணமாக செல்லும்போது, நாராயணன் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டதால் கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணபதி இறந்து போனார்

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது 45) . இவர் தனது சொந்த வேலை காரணமாக கச்சிராயபாளையம் சென்று மீண்டும் தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல தொட்டியம் சுண்ணாம்பு ஓடை அருகே செல்லும் பொழுது கணபதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் நாராயணன் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டதால் கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கணபதிக்கு பலத்த அடிபட்டு மூக்கு மற்றும் காதில் ரத்தம் வந்துள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் கணபதியை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணபதி இறந்து போனார். இது குறித்து கணபதியின் மகன் ஸ்ரீராம் (23) கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்வேலி அமைத்த விவசாயி முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சென்னை ஐகோர்ட்டு அவசர அவசரமாக விசாரணை செய்து வருகிறது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு பகுதியில் கடந்த மாதம் மக்னா யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த யானை விரட்டி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் வனத்துறையினர் அந்த மக்னா யானையை பிடித்து முதுமலை காட்டிற்கு கொண்டு சென்றனர்.

    பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி பகுதிகளில் குட்டிகளுடன் 5 யானைகள் சுற்றித்தி ரிந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் இரவில் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்.

    இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வயர்கள் அமைத்து உள்ளார்.

    இந்த மின் வயர்கள் நேரடியாக மின்சார கம்பத்தில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார்.

    நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள் தண்ணீர், உணவு தேடி முருகேசன் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது விளைநிலத்தில் இருந்த மின்சார கம்பியில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு ஆண் யானை என 3 காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது.

    இதனை இன்று காலை அந்த வழியாக விவசாய விளைநிலத்திற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக பாலக்கோடு வனத்து றையினர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த 3 யானைகளை உடற்கூராய்வு செய்ய மருத்துவக்குழுவினர் வந்தனர். அப்போது அந்த 3 யானைகளுடன் வந்த 2 குட்டியானைகள் தாயை விட்டு பிரிய முடியாமல் அங்கேயே சோர்ந்து போய் திகைத்து நின்றது. இதனால் வனத்துறையினர் அந்த குட்டி யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 3 காட்டுயானைகள் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் உயிர்தப்பிய 2 குட்டியானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
    • கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த லோகநாதனுக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலியானார்கள்.
    • திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவுக்கரசி(வயது33). சம்பவத்தன்று தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவி ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் சென்றனர்.

    திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தங்க பாண்டி தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றார். கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை நான்கு வழிச்சாலையில் நிறுத்தியதாக தெரிகிறது.

    அப்போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு வந்து கொண்டிருந்த மினிவேன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ முழுவதுமாக சேத மடைந்தது. ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனே அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி, மகமாயி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தங்கபாண்டி, கனிமொழி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
    • ளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    குளித்தலை அருகே, மருதுார் பஸ் ஸ்டாப் பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த கார், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங் கிருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. மருதுார் வி.ஏ.ஒ., அலிமா, கொடுத்த புகாரின் படி, குளித்தலை போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிமெண்ட் நிறுவன கிரேன் பழுது பார்க்கும் பணியின் போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    கடலுார் மாவட்டம், அத்தனுார் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 34). கிரேன் ஆப்ரேட்டர். இவர் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, ஜல்லிப்பட்டியில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனத்தில் உள்ள கிரேனில் ஏற்பட்ட பழுதை, சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் உதிரி பாகங்கள், தியாகராஜன் தலையின் மீது விழுந்தது. அதில், படு காயமடைந்த தியாகராஜன், திருச்சி அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தியாகராஜனின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள தவசிலிங்காபுரத்தை சேர்ந்தவர் வைரமுத்து (வயது24). இவர் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கிலிவீரன். இவரது மகன் ஸ்ரீராம் (15). இவர் முத்துகுமாரபுரத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குமாரலிங்கபுரத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் திருவிழா நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக வைரமுத்து மோட்டார் சைக்கிளில் ஸ்ரீராமை அழைத்து சென்றார். அங்கு திருவிழா முடிந்து 2 பேரும் நேற்று இரவு 10 மணிக்கு ஊருக்கு புறப்பட்டனர். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து, ஸ்ரீராம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து சங்கிலிவீரன் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அன்புநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாரியம்மாள்(36). நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் சென்றபோது ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மாரியம்மாள் தவறி நடுரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் நாகலட்சுமி(38) படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காருக்குள் இருந்த ஆனந்த் மற்றும் அவரது மற்றொரு நண்பர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
    • உயிரிழந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தேனி:

    கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் ஆனந்த் (வயது23). இவர் தனது காரில் இன்று காலை பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    கார் மதுராபுரி அருகே வந்து கொண்டிருந்தபோது தர்மபுரியில் இருந்து கம்பம் நோக்கி வந்த சரக்கு லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த ஆனந்த் மற்றும் அவரது மற்றொரு நண்பர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

    இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தேனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிய மற்றொருவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் எதிர்பாராதவிதமாக சந்தோஷ் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே ஒப்பந்தவாடி அடுத்துள்ள புனந்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று வாணியம்பாடி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக சந்தோஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×