என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97185"
- பக்தர்கள் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
- விசேஷ பூஜைகள் மஹா தீபாராதனைகள் நடந்தது.
முருகப் பெருமானின் ஆறாவதுபடை சோலைமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்ற அழகர் மலையில் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் சிறப்புடைய ஒன்றாகும். இந்த விழாவானது கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் மஹா தீபாராதனைகள் நடந்தது. அன்று பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து தினமும் அன்னம் காமதேனு, ஆட்டு கிடாய், பூச்சப்பரம், யானை, பல்லாக்கு, குதிரை ஆகிய வாகனங்களிலும், தங்க தேரோட்டமும், வெள்ளி மயில் வாகன புறப்பாடும் நடந்தது.
நேற்று முக்கிய நிகழ்வாக தைப்பூச விழா நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்களின், வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை பரிவாரங்களுடன் கோவில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது.
பின்னர் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் சுவாமிக்கு பால் பழம், பன்னீர், உள்பட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும். கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையை யொட்டி தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் நேற்று முன்தினம் சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரிக்கு பின் ஊர்வலமாக கிள்ளை கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையடுத்து அங்கிருந்து நேற்று காலை சாமி ஊர்வலமாக புறப்பட்டு வந்து அம்மாபேட்டை புலிமேடு தீர்த்தக்குளம், இளமையாக்கினார் கோவில் வியாக்ர தீர்த்தம் குளம், அனந்தீஸ்வரன் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத்தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவிலில் சிவப்ரியை தீர்த்தம், புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற்கடல் தீர்த்தம் ஆகிய தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
இதையடுத்து இரவு நடராஜர் கோவில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்த கிணற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
- திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது.
- தீர்த்தவாரி கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று பெருமாள் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க பல்லக்கில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று விஸ்வரூப தரிசனமும், ஆராதனையும் நடைபெறுகிறது. நேற்று காலை செங்கமலத்தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பெருமாள் மற்றும் தாயார் வீதி உலா மாலையில் நடைபெற்றது.
இன்று (திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கணு தீர்த்தவாரி, பாரிவேட்டை விழா கோவில் அருகே கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- இன்று நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது
- நாளை இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தார். அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுளினார்.
இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார்.
நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைந்தார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெற்றது.
பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். இரவு 11 மணிமுதல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணி வரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (வெள்ளிக்கிழமை) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.
அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
- நாளை நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.
- 13-ந்தேதி வரை இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தடைவார்.
அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடுவார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுவார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைவார்.
நம்பெருமாளர் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைவார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெறும். பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார்.
இரவு 11 மணிமுதல் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை 4 மணிமுதல் காலை6 மணிவரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணி முதல் காலை9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (13-ந்தேதி) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.
அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
- வில்வ இலை, விபூதி உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
- தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை பஞ்சவனநாதர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மையாருக்கு வில்வ இலை,விபூதி,திரவிய பொடி,மஞ்சள்,அரிசி மாவு உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, ஆனந்த நடராஜ மூர்த்தி,சிவகாமி அம்மையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், சியாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
- சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
- சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 9-ம் நாள் நிகழ்ச்சியாக பிரணாம்பிகை-தர்பாரண்யேஸ்வரர் பொன்னூஞ்சல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவுநாளான நேற்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், பிரம்ம தீர்த்த கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், கோபூஜையும் நடத்தப்பட்டு,அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.
பின்னர், சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. பின்னர் நடராஜர் பிரம்ம தீர்த்தத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்வாரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம், தீர்த்தவாரி மற்றும் ஊடல் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
- ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
- தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி விழா நடைபெறும். அதன்படி நேற்று துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் திருமாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் முக மண்டபத்தில் உள்ள பூவராஹ சுவாமியை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. இதில் விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.
- சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
- பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றின் நதிக்கரையில் அமைந்துள்ளது பக்தவச்சல பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் நவநீதகிருஷ்ண சுவாமி கோவில்கள். இதில் பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமாக திகழும் பக்தவச்சல பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி விழா விமரிசையாக நடைபெறும்.
வியதிபாத நாளன்று அதிகாலையில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு பக்தவச்சல பெருமாளை வேண்டினால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நேற்று நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு பக்தவச்சல பெருமாள், நவநீதகிருஷ்ண சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம்.
- வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரா் நான்கு வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம். இந்த கோவில் புராணகாலத்தில் ரிக், யஜூர், சாம, அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களும் தங்கி இறைவனை வழிபட்டதாக வரலாறு.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் தன்னை வழிபட்ட நான்கு வேதங்களுக்கும், சாமி காட்சியளித்து சிறப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெற்று வருகிறது.. அதன்படி ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக காலை நான்கு வேதங்கள் சாமி சன்னதியில் எழுந்தருளியது.
சிறப்பு தீபாராதனைக்கு பிறகு நான்கு வேதங்களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரா் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது. நாகை சாலையில் உள்ள புனித தீர்த்தமான வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஏரி படித்துறையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வேதாமிர்த ஏரியில் புனித நீராடிசாமி தரிசனம் செய்தனர்.
- குளத்தில் ஐயப்ப விக்கிரகத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
- குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் சிவன் கோவில் எதிரில் உடையார் குளம் உள்ளது. இந்த குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஐயப்ப குருசாமி தங்கமணி தலைமை தாங்கினார். ஐயப்ப குருசாமி கள் அப்பாராசு, குணசேகரன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கோவில் குளத்தில் ஐயப்ப விக்கிரகத்திற்கு பன்னீர், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஐயப்ப குருசாமிகள்அனைவரும் கோவில் குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
இதில் ஐயப்ப குருசாமிகள் மணியரசன், இளையராஜா, சதீஷ், மணிகண்டன், விஜி, அம்பிகா, பாரதி, ஜெயகாந்த், மனோகர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும் என புராண வரலாறு கூறுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி தீர்த்த வாரி நடந்தது.
முன்னதான மேளம், தாளம் முழங்கிட அஸ்திரதேவர் ஊர்வலமாக குளங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் திருஞானம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்