search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தலாக்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    • 2019 ஆம் ஆண்டு முத்தலாக்குக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை 'தலாக்' என்று கூறி ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து 2019 ஆம் ஆண்டு முத்தலாக்குக்கு தடை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் வாயிலாக விவாகரத்து செய்வோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் முத்தலாக்குக்கு தடை விதிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், மத்திய அரசு கொண்டு வந்த முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவிற்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், திருமணமான முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமை மற்றும் பாலின சமத்துவத்திற்கு முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உதவுகிறது.

    முத்தலாக் நடைமுறை அரசியலமைப்பின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுகிறது.

    முத்தலாக் நடைமுறையானது திருமணம் எனும் சமூக அமைப்பிற்கு ஆபத்தானது. அந்த நடைமுறை முஸ்லீம் பெண்களின் நிலைமையை மிகவும் பரிதாபகரமானதாக ஆக்குகிறது.

    முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

    அதே சமயம் இந்த சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனைகள் இல்லாததால் கணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காவல்துறையினருக்கு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்ட விதிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூக வலைத்தளம் மூலம் பாகிஸ்தான் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்யவதற்கு முன் மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் சுருவை சேர்ந்தவர் ரெஹ்மான் (வயது 35). இவரது மனவைி ஃபரிதா பானோ (வயது 29). ரெஹ்மான் வேலைக்காக குவைத் சென்றிருந்தார்.

    குவைத்தில் வேலைபார்த்துக் கொண்டிக்கும்போது மேவிஷ் என்ற பாகிஸ்தான் பெண்மணியுடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். மனைவிக்கு போன் செய்து அதன் மூலம் மூன்று முறை தலாக் கூறி மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளார். அதன்பின் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    பாகிஸ்தான் பெண் கடந்த மாதம் சுருவில் உள்ள ரெஹ்மான் வீட்டிற்கு வந்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்த அவர் ரெஹ்மான் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

    ரெஹ்மானின் மனைவியின் ஃபரிதா பானோ, கணவர் வீட்டிற்கு சென்றபோது அங்கு மேவிஷ் இருந்ததை பார்த்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஃபரிதா பானோ காவல் நிலையம் சென்று தனது கணவர் போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து எனத் தெரிவித்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார் என புகார் அளித்துள்ளார்.

    புகார் அடிப்படையில் போலீசார் வழக்கப்பதிவு செய்தனர். இந்த நிலையில் குவைத்தில் இருந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ரெஹ்மான் ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்தபோது போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியபின் கைது செய்துள்ளனர். ரெஹ்மான்- ஃபரிதா பானோ ஆகியோருக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கே.ஆர்.கே. காலனியை சேர்ந்தவர் அப்துல் அதீக் (வயது 32). இவருடைய மனைவி ஜாஸ்மின் கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அதீக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜாஸ்மின் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அதீக் வாட்ஸ் அப்பில் முத்தலாக் ஆடியோ பதிவு செய்து ஜாஸ்மினுக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் அதீக்கை கைது செய்தனர்.

    முத்தலாக் கூறி விவாகரத்து பெறுவது சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
    இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் முத்தலாக் கூறி தனது மனைவிக்கு விவாகரத்து வழங்க முடியும். வாட்ஸ்-அப் மூலம முத்தலாக் கூறி விவாகரத்து பெற்ற சம்பவம் கூட நடைபெற்றுள்ளது. இதனால் விவாகரத்து பெறும் பெண்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுவதுண்டு. முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது.

    இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.

    சட்டம் கொண்டு வந்தபின் சிலர் முத்தலாக் கூறி விவாகரத்து வழங்கியதாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் பெண் ஒருவர் தனது கணவரிடம் முத்தலாக் கூறச்சொல்லி அந்த கணவர் கூற மறுத்ததால், மனைவியின் உறவினர்கள் அந்த நபரை தாக்கிய சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரம் கோட்டக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஆசீப். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆசீப் நடவடிக்கை சரியில்லாததாலும், போதை பழக்கம் இருந்ததாலும், அவரது மனைவியுடன் சேர்ந்த வாழ விரும்பவில்லை.

    இதனால் முத்தலாக் கூறி விவாகரத்து தரும்படி கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், ஆசிப் முத்தலாக் கூற மறுப்பு தெரிவித்ததால், அப்துல் ஆசீப்பை, அவரது மாமனாருடன், மனைவியின் உறவினர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆசிப்பை தாக்கியதாக ஆறுபேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  முத்தலாக் கூற மறுத்ததால் கணவனரை  உறவினர்களுடன் சேர்ந்து மனைவி தாக்கிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். #PMModi #AmitShah #tripletalaq
    போபால் :

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைவதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சாட்னா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித் ஷா கூறியதாவது:-

    இஸ்லாமிய சகோதரிகளின் நலனில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை. முத்தலாக் போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் கிடையாது. பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னுரிமையை பற்றி பேசுவதோடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் பாஜக செய்து வருகிறது.  

    மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் , நிர்மலா சீதாராமன் என உயரிய பொறுப்புகளில் பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் மட்டும் 9 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். #PMModi #AmitShah #triple talaq         
    முத்தலாக் பிரச்சனைக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. #BJP #ShivSena
    மும்பை:

    முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது. இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சிவசேனா, முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவிலை கட்டவும் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதற்காக முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதை சிவசேனா வரவேற்கிறது. ஆனால், மத்திய அரசு இந்த ஒரு நடவடிக்கையுடன் நின்று விடக்கூடாது. இதே வேகத்தை அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதிலும் காட்ட வேண்டும். இதற்காகவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 

    என குறிப்பிடப்பட்டுள்ளது. 
    மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். #TripleTalaq #PresidentKovind
    புதுடெல்லி:

    மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. 

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

    கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

    ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

    டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 
    ×