search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    மும்பையில் தனியார் சர்வீஸ் செண்டரில் ஏற்பட்ட தீயை அணைக்க 10 முதல் 12 தீயணைப்பு வண்டிகள் தீவிரமாக ஈடுபட்டன.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கஞ்சூர்மார்கில் சாம்சங் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மையத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவ, அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. 

    தகவலறிந்து 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.

    அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தீயணைப்புத்  துறையினர் தெரிவித்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்
    புழலில் நள்ளிரவில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்குன்றம்:

    புழல் கேம்ப் பஸ்நிலையம் அருகில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பத் ராம் (49). ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார்.

    நள்ளிரவு அந்த கடையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    செங்குன்றம் பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் வந்தன. அதற்குள்ளாக இரும்புக்கடையில் பற்றிய தீ முழுவதும் பரவியது. கடையின் முன் கதவுகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது தொழில் போட்டியில் யாரும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறார்கள்.

    வெளியூரில் உள்ள கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கிருந்து புழல் திரும்புகிறார்.

    இங்கிலாந்தில் உள்ள டாடா இரும்பு உருக்காலை தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #Explosion #TataSteel #UnitedKingdom
    லண்டன் :

    இங்கிலாந்தின் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள தால்போட் என்ற துறைமுக நகரில் டாடா நிறுவனத்தின், இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று அதிகாலை 3.35 மணிக்கு குண்டு வெடித்தது போல பயங்கர சத்தத்துடன் விபத்து நேரிட்டது.

    இதனால் ஆலையில் பெரிய அளவில் தீ பிடித்தது. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை உறுதி செய்திருக்கும் டாடா நிறுவனம், விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியது. #Explosion #TataSteel #UnitedKingdom
    வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #DhakaFireAccident
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது. 

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மீட்புப் பணியில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 35 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப்  பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் டாக்காவில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 70 பேர் பலியானது நினைவிருக்கலாம். #DhakaFireAccident
    அம்பை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் சிவன்பாண்டி (வயது 39). கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

    இதனால் மாரியப்பன் ஆத்திர மடைந்தார். பின்னர் இது குறித்து சிவன்பாண்டியிடம் இனி மேல் எனது மனைவியுடன் பேசக்கூடாது என கூறியுள்ளார். எனினும் அவர் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் நேற்று சிவன் பாண்டியன் வீட்டிற்கு சென்று அங்குள்ள கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    இது குறித்து சிவன்பாண்டி அம்பை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. #BangladeshFire
    டாக்கா:

    வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் பிடித்த தீ, பின்னர் மளமளவென பரவியது. 
     
    தகவலறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்க நீண்ட நேரம் ஆனது. இந்த தீ விபத்தில் சிக்கி 69 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #BangladeshFire
    டெல்லியில் செயல்பட்டு வரும் ஆர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். #DelhiHotelFire #HotelArpitPalace
    புதுடெல்லி:

    டெல்லியில் பரபரப்பான கரோல்பாக் பகுதியில் ஓட்டல் ஆர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஓட்டலின் 5-வது மாடியில் தீப்பிடித்தது சில நிமிடங்களில் தீ மளமளவென்று மற்ற இடங்களுக்கும் பரவியது.

    இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர்கள் உடனே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். 26-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஓட்டலின் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீப்பிடித்த மேல் தளத்தில் பலர் தங்கி இருந்தனர். அவர்கள் தப்பமுடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 9 பேர் தீயில் சிக்கி கருகி பலியானார்கள்.

    அந்த தளத்தில் இருந்த 10 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது.


    தீயணைப்பு படையினர் 2.30 மணி நேரம் போராடி காலை 7 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினார்கள். தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தை தொடர்ந்து அந்தப்பகுதியில் அருகில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் முன் எச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். #DelhiHotelFire #HotelArpitPalace
    அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக்கொண்டதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். #HouseFire #Dog #ManDies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம் கிராபோர்ட், தனது பாசத்துக்குரிய நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார்.

    உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை. நாயின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக 30 டி.வி.க்கள், செல்போன்கள் தீயில் கருகியது. சேதமடைந்த பொருட்களை பொதுமக்கள் சாலையில் வீசினர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு பகுதியை சேர்ந்தது சோழன்நகர். இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

    நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பகுதியில் திடீரென்று உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் ஓடி கொண்டிருந்த டெலிவி‌ஷன்கள், கிரைண்டர்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் கருகி எரிந்து புகையாகின. இதையறிந்து வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    உயர்மின் அழுத்தம் காரணமாக 30 டி.வி.க்கள், 5 கிரைண்டர்கள், 2 மிக்‌ஷிகள், 10 செல்போன்கள், 15 மின்விசிறிகள் தீயில் கருகி எரிந்து நாசமானது. மேலும் சார்ஜில் போடப்பட்டிருந்த 5 செல்போன் வெடித்து சிதறின.

    சேதமடைந்த டெலிவிஷன், கிரைண்டர், மிக்‌ஷி போன்றவற்றை அப்பகுதி பொதுமக்கள் சாலையில் வீசினர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் பழமையான மின்மாற்றி உள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி மின்அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமாகி வருகிறது. இனியும் இந்த மின்மாற்றியை மாற்றவில்லை என்றால் பெண்ணாடத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
    மும்பையின் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. #MumbaiFire #ESICKamgarHospital
    மும்பை:

    மும்பையின் அந்தேரி பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது.

    5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையின்4-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால், அதிகளவில் கரும்புகை வெளியேறி சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதையும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், உள்நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேற முயன்றார்கள்.

    புகையின் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. தகவல் அறிந்து 12 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 4 மணிநேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.



    தீயணைக்கும் பணி ஒருபுறம் நடக்க, மறுபுறம் ராட்சத கிரேன் மூலம் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில், 141 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். #MumbaiFire #ESICKamgarHospital

    டொமினிகாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு காரணமாக பாய்லர் வெடித்து தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். #DominacanGasBlast
    மெக்சிகோ சிட்டி:

    டொமினிகா தலைநகர் சான்டோ டொமிங்கோவின் வில்லாஸ் அக்ரிகோலஸ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாய்லர் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

    இதன் காரணமாக தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



    இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 45 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #DominacanGasBlast
    மும்பையில் 10 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 391 தீவிபத்துகள் நடந்ததாகவும், இதில் 609 பேர் பலியானதாகவும் சட்டசபையில் மந்திரி தெரிவித்தார். #RanjitPatil #FireAccident
    மும்பை :

    மும்பை புறநகர் பாந்திரா குடிசைப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ஏற்பட்ட தீவிபத்து குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறியதாவது:-

    மும்பையில் 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொத்தம் 49 ஆயிரத்து 391 தீவிபத்துகள் நடந்துள்ளன. இதில் 33 ஆயிரத்து 946 தீவிபத்துகள் மின்கசிவு காரணமாகவும், 1,116 கியாஸ் கசிவு காரணமாகவும், 14 ஆயிரத்து 329 தீவிபத்துகள் மற்ற பல காரணங்களாலும் நடந்துள்ளன.

    இந்த விபத்துகளில் சிக்கி 609 பேர் மற்றும் 5 தீயணைப்பு படையினர் இறந்துள்ளனர்.

    மேலும் ரூ. 110.42 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

    10 ஆண்டுகளில் பதிவான தீ விபத்துகளில் 3 ஆயிரத்து 151 விபத்துகள் குடிசைப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.

    மக்கள் நெருக்கடி மிகுந்த மற்றும் குடிசைப்பகுதியில் நடக்கும் தீ விபத்துகளை தடுக்க 17 சிறிய அளவிலான தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 17 விரைவாக செயல்படும் வாகனங்கள் மற்றும் 3 மினி தீயணைப்பு வாகனங்கள் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வாங்கப்பட்டுள்ளது.

    மேலும் 5 ஆயிரம் தீயணைப்பு வீரர்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி கமலா மில் காம்பவுண்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேரும், சாக்கிநாக்கா பகுதியில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தீ விபத்தில் 12 பேரும் இறந்தது குறிப்பிடத்தக்கது. #RanjitPatil #FireAccident
    ×