search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97736"

    ஒகேனக்கல்லில் இன்றும் நீர்வரத்து 66 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. #Hogenakkalfalls

    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்பட அணைகள் நிரம்பியது. அதில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    அந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு ஒரு லட்சம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. பின்னர் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து நீர் திறப்பு படிபடியாக குறைந்தது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 50 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து மாலை படிப்படியாக அதிகரித்து 70 ஆயிரம் கனஅடியாக வந்தது. நேற்று காலை சற்று சரிந்து 66 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் நீர்வரத்து 66 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த சில நாட்களாக 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்று கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 20-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 8 மணி நிலவரப்படி 66 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நேற்று 50 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தது. இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சற்று சரிந்து 66 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 19-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல் பகுதிகளில் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 18-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று சற்று சரிந்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல் பகுதிகளில் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 18-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கர்நாடக மாநில அணைகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal

    காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 80,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Metturdam #Cauvery
    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியது. தற்போதும் அங்கு மழை நீடித்து வருகிறது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று பகல் 12 மணிக்கு மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருபுறங்களை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 80,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்தது. தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு விநாடிக்கு 28,057 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 7,013 கன அடி நீரும், வெண்ணாற்றில் 2,022 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் 2,513 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 7,018 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து 17-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Metturdam #Cauvery

    ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு வரும் வடமாநில சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் போலீசார் உதவியுடன் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. மெயின் அருவி, ஐவர் பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இன்று 10-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. இதை கவனிக்காமல் ஆந்திரா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் கார், வேன்-பஸ்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருகிறார்கள்.

    அவர்களை ஒகேனக்கல் வனத்துறை சோதனை சாவடி அருகே வருவாய் மற்றும் வனத்துறையினர் போலீசார் உதவியுடன் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

    அவர்கள் காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்த்து விட்டு செல்பி எடுத்து திரும்பி செல்கிறார்கள்.

    சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு 10 நாட்களுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. #Hogenakkal
    தருமபுரி:

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று காலை 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. 11.30 மணிக்கு பிறகு நீர்வரத்து 1 லட்சத்து 20 அயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 7 மணி முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒகேனக்கல் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்.

    கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இன்னும் ஒரு வாரத்திற்கு 1,20,000 கனஅடி நீர்வரத்து வரும் நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா வருவதை இன்னும் 10 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

    மேலும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு செல்ல அனுமதிக்காமல், வரும் வாகனங்கள் அனைத்தும் வனத்துறை சோதனை சாவடி அருகே தடுத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கலில் வாழ்வாதாரம் பாதிக்கும் தொழிலாளர்களுக்கு, ‘‘பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல்’’ உருவாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும்.


    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்.

    மேலும் காவேரி ஆற்று பகுதியில் 25 இடங்கள் வெள்ள பெருக்கினால் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்று பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறை, வருவாய்த் துறை தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Hogenakkal
    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam
    தருமபுரி:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



    தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வளத்துறையும், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐவர்பாணி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ள நீர் அதிகமாக கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் கூறியதாவது:-

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர் கண்காணித்து வருகிறார்கள். வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.



    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்க வேண்டாம். பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் இன்று 4-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam

    ஒகேனக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று 6-வது நாளாக பரிசல் இயக்கவில்லை.
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பியது. காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்த கன மழையால் கர்நாடகா அணையான கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவு எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    தற்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது. இன்று 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, காவிரி கரையோரம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று 6-வது நாளாக பரிசல் இயக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வார்கள்.

    மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்படும்.

    அதன்படி கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருகிறது.


    நீர்வரத்து குறைந்துள்ளதால் 4 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிசல்களை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தண்ணீரின் அளவை பொறுத்து மாமரத்துகடவு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, கோத்திக்கல் பரிசல் துறை ஆகிய 3 வழிகளில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். பரிசல் பயணத்தின் போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகளை(பாதுகாப்புஉடை) அதிக அளவில் வழங்க வேண்டும் என்றனர். மொத்தம் 420 பரிசல் ஓட்டிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரிசல்கள் காவிரி கரையோரத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. 
    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது. #Metturdam #Cauvery
    சேலம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைத்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியதால் அணையில் இருந்து பாகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்து கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த 4 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 20-ந் தேதி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 21-ந் தேதி தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    பின்னர் நேற்று காலை முதல் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 13 ஆயிரத்து 758 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.8 அடியாக இருந்தது.

    124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2961 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சனிக்கிழமையான இன்று விடுமுறை என்பதால் காலை முதலே ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காவிரி கரையில் நின்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து அளவிட்டு வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 618 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1299 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 50.59 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 50.68 அடியாக உயர்ந்தது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று பிற்பகல் முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Metturdam #Cauvery

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று 4 ஆயிரம் கனஅடியாக இருந்தபோதிலும் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்த விடப்பட்டது. அந்த உபரி நீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 33 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைவாக திறந்து விடப்பட்டது.

    ஒகேனக்கல்லில் நேற்று 9000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4000 கனஅடியாக குறைந்தது. மீண்டும் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்தால் மட்டும் அங்கு அணைகள் நிரம்பி வழிந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தபோதிலும் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஒகேனக்கல்லில் இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்காமல் அவற்றை கவிழ்த்து வைத்து இருந்தனர்.
    ஒகேனக்கல்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்ததால் கபினி அணையில் இருந்து முதலில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 35 ஆயிரம் கன அடி வரை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால் கபினி அணையில் இருந்து வெறும் 500 கன அடி மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

    3 நாட்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. பின்னர் அந்த தண்ணீர் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஒகேனக்கல் வந்தது. அந்த தண்ணீர் நேற்று பிற்பகலில் மேட்டூர் அணையை அடைந்தது.

    பிலிகுண்டுலுவில் தண்ணீர் அளவை மத்திய நீர்பாசன அதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுத்து வருகிறார்கள். நேற்று காலை முதல் இரவு வரை 28 ஆயிரம் கன அடி முதல் 32 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் ஐவர்பாணி அருவி, மெயின் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இன்று நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை போலீசார் யாரும் இல்லாததால் நடைபாதை வழியாக மெயின் அருவிக்கு சென்று சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்தனர். இன்று 2-வது நாளாக பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்காமல் அவற்றை கவிழ்த்து வைத்து இருந்தனர். இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டமும் மிக குறைவாக காணப்பட்டது.

    ×