search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ்"

    • நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.
    • பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

    மூன்றாம் நாளான நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் கடந்த காங்கிரஸ் மாநில மகளிர் மாநாட்டை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-

    நமது கட்சியில் இன்று ஒரு பெண் முதல்-மந்திரி கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரிகளாகும் நற்பண்புகள் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் தனது கட்டமைப்புக்குள் பெண்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.

    பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ் அடிப்படையில் நம்புகிறது.ஆண்களை விட பெண்கள் பல வழிகளில் உயர்ந்த வர்கள். ஆண்களை விட அவர்களுககு பொறுமை அதிகம். அதிக உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவர்கள். அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக பெண்கள் இருக்க வேண்டும்.

    பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற போதிலும், அதை அமல்படுத்தாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அதன் முழு வரவலாற்றிலும் பெண்களை அதன் அணிகளில் அனுமதிக்கவில்லை. இதற்கு முன் இதை நான் இருமுறை கூறியபோது, தங்களிடம் பெண்கள் அமைப்புகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது. ஆனால் அவர்களிடம் பெண்கள் அமைப்புகள் இருக்கிறதா இல்லையா? என்பது கேள்வி அல்ல.

    ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கு முழுமையாக இல்லை என்பதே பதில். இந்திய அரசியலை ஆழமாக பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசுக்கு இடையேயான உண்மையான சண்டை, அரசியலில் பெண்களின் பங்கை பற்றியது என்பதை நீங்கள் காணலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.
    • வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி கடந்த 16-ந்தேதி காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இன்று மற்றும் 29-ந்தேதிகளில் 33 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்துவதற்கு அனுமதித்தது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

    கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் பேரணிக்கு அனுமதி வழங்காததை ஐகோர்ட்டின் உத்தரவை மீறும் செயல் என்றும், உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவை பொறுத்தவரைக்கும், இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது
    • இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல

    நாக்பூரில் ஒரு பள்ளியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த மதம் இந்து. இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை.

    எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர், ஹமாஸ்- இஸ்ரேல் போர் குறித்து நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். இதுபோன்ற பிரச்சினை காரணமாக இந்தியாவில் ஒருபோதும் சண்டை நடைபெற்றதில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால் இந்த பிரச்சினையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்.

    இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டார்.

    • சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம்
    • அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:-

    சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.

    எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உம்மன் சாண்டியை இங்கு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
    • வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீட்டின் சாவிகளை ராகுல்காந்தி வழங்கி ஆறுதல் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர், நேற்று தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடுக்கு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் கல்பெட்டா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சகோதர, சகோதரிகளே என்று தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    4 மாதங்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளேன்... உங்கள் எம்.பி.யாக வயநாடுக்கு வந்துள்ளேன். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உம்மன் சாண்டியை இங்கு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர் கேரளாவின் தலைவராக இருந்தவர். அவரது இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றது அவர் மீது கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் காட்டியது. கேரளா வுக்காக அவர் செய்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

    என்னை தகுதி நீக்கம் செய்ய பாரதிய ஜனதா 100 முறை முயன்றாலும், மோடி மற்றும் அவரது கூட்டாளிகளின் திட்டம் பலிக்காது. இந்தியாவின் நோக்கமே மக்களிடம் அமைதியை நிலைநாட்டுவது தான். வன்முறையும் வெறுப்பும் இருந்தால் அது இந்தியா அல்ல.

    பாராளுமன்றத்தில் அவர் (மோடி) 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். சிரித்தார்...கேலி செய்தார்.... அவரது அமைச்சரவை சிரித்தது.. ஆனால் அதில் மணிப்பூர் பற்றி பேசியது 2 நிமிடங்கள் தான். மணிப்பூரில் பாரதிய ஜனதாவும் அதன் தலைமையிலான அரசும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்றுவிட்டன.

    ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்துவிட்டீர்கள். ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் செய்ய அனுமதித்தீர்கள். அங்கு அப்படி நடந்த பிறகு நாட்டின் பிரதமராக நீங்கள் சிரிக்கிறீர்களா?

    இந்தியா என்ற கருத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக இருக்க முடியாது. பாரத மாதா கொலையை பற்றி 2 நிமிடம் பேசினீர்கள். இந்தியா என்ற எண்ணத்தை எப்படி நிராகரிக்க முடியும்?.

    மணிப்பூருக்கு நான் சென்ற போது, எங்கும் ரத்தம்..., எங்கும் கொலை ..., எங்கும் பாலியல் பலாத்காரங்கள் என மக்கள் கூறினர். இது தான் மணிப்பூரின் நிலவரம்.

    கடந்த 4 மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் மணிப்பூர் செல்லவில்லை? ஏன் வன்முறையைத் தடுக்க முயற்சிக்கவில்லை? ஏனென்றால் நீங்கள் ஒரு தேசியவாதி இல்லை. இந்தியா என்ற எண்ணத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக முடியாது.

    வயநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன். இப்போது நான் என் குடும்பத்திற்கு வந்திருக்கிறேன். யாரோ ஒருவர் நம் குடும்ப உறுப்பினர்களை பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒருவர் இரண்டு சகோதரர்களை ஒருவரையொருவர் பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒரு தந்தையை தனது மகளிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், யாராவது ஒரு குடும்பத்தை பிரிக்க முயன்றால், குடும்பம் வலுவடைகிறது; ஒருவன் தந்தையையும், மகனையும் பிரிக்க முயன்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவு வலுவடைகிறது... தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான அன்பு வலுவடைகிறது." பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு குடும்பம் என்றால் என்ன என்று புரியவில்லை. நாட்டை அழிப்பதே அவர்களது நோக்கம்.

    இந்தியா ஒரு குடும்பம்.. பிரித்தெடுக்க நினைக்கிறார்கள்; மணிப்பூர் ஒரு குடும்பமாக இருந்தது. அதை அழிக்க முயன்றார்கள்.. மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பா.ஜ.க.வின் கொள்கை களால் அழிக்கப்பட்டுள்ளன. அதனால், அவர்கள் அழிக்கிறார்கள். குடும்பங் கள், அவை மக்களிடையேயான உறவை அழிக்கின்றன, நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம், குடும்பங்களை பலப்படுத்துகிறோம், மக்களிடையேயான உறவை பலப்படுத்துகிறோம்.

    உங்களையும் என்னையும் எவ்வளவு அதிகமாக பிரிக்க முயல்கிறார்களோ, அவ்வளவு நெருக்கமாகி விடுவோம் என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், வயநாட்டுடனான அவரது உறவு முறிந்துவிடும். இல்லை! நீங்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், அவருடைய உறவு. வயநாடு மேலும் வலுவடையும், வயநாட்டு மக்கள் மீதான அவரது அன்பு மேலும் வலுவடையும், மேலும் வயநாட்டு மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மேலும் வலுவடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீட்டின் சாவிகளை ராகுல்காந்தி வழங்கினார்.

    • பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.
    • விழாவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சூலூர்:

    அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவையில் நடந்த விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.

    உலகில் எல்லா பக்கங்களிலும் இந்து கோவில்கள் உள்ளன. இது நமது கருத்துகளை மதத்தின் சாரத்தை அங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

    தமிழகத்தின் ராஜ ராஜா சோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது. யாரையும் வெற்றி கொள்ள வேண்டியதில்லை. மாறாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நாம் அனைவரும் இந்திய குடிமக்கள்.
    • இந்தியாவை மதவாத நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

    திருவனந்தபுரம் :

    பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாம் அனைவரும் இந்திய குடிமக்கள். மதத்தின் அடிப்படையில் நமக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது. ஆனால், நம் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அனைத்து கொள்கைகளையும் தூக்கி எறிந்து, ஒருவரின் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது என்பதை நிறுவுவதற்காகத்தான் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அதை (குடியுரிமை திருத்த சட்டம்) இங்கு அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா உடனடியாக அறிவித்தது. நாங்கள் இன்னும் அதில் உறுதியாக நிற்கிறோம். மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது.

    இந்தியா மதச்சார்பற்ற குடியரசு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்பது நாம் பொதுவாக ஏற்றுக்கொண்டது. ஆனால் பாராளுமன்ற திறப்பு விழா என்ற பெயரில் நடத்தப்படும் செயல்பாடுகளை மக்கள் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

    இது முற்றிலும் மத அடிப்படையிலான விழா. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்தியாவை மதவாத நாடாக மாற்ற நினைக்கிறார்கள். அதுதான் திறப்பு விழா அன்று பாராளுமன்றத்தின் உள்ளே நடந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
    • இப்போது அரசின் நிதி நிலை குறித்து மந்திரிகள் பேசுகிறார்கள்.

    பெங்களூரு:

    பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    துணை முதல்-மந்திரி பதவி அரசியல் சாசன பதவி அல்ல. கட்சிகள் தான் இந்த பதவியை வழங்குகின்றன. அரசு ஆலோசனை கூட்டங்களில் முதல்-மந்திரி பேசுவதற்கு முன்னரே துணை முதல்-மந்திரி பேசுகிறார். புதிய அரசு வரும்போது, முதல்-மந்திரி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசுவது வழக்கம். ஆனால் புதிய ஆட்சியில் முதல்-மந்திரி அமைதியாக உள்ளார். துணை முதல்-மந்திரி ஆவேசமாக பேசுகிறார்.

    அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். மிரட்டுவது என்பது அவரது வழக்கம். காங்கிரஸ் 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. இது கர்நாடக மக்களுக்கு செய்த மிகப்பெரிய அவமானம். காங்கிரஸ் அரசு அமைந்து 24 மணி நேரத்தில் உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனர்.

    ஆனால் 240 மணி நேரம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இலாகா உத்தரவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். வழியில் செல்பவர்களுக்கு எல்லாம் உத்தரவாத வாக்குறுதிகளை கொடுக்க முடியுமா? என்று மந்திரிகள் சொல்கிறார்கள். இது மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் இல்லையா?.

    அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் இப்போது அரசின் நிதி நிலை குறித்து மந்திரிகள் பேசுகிறார்கள். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சித்தராமையாவுக்கு இதுகுறித்து முன்பே ஞானம் இருக்கவில்லையா?. இதை பார்த்து மக்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக காங்கிரஸ் கூறியது. இப்போது அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த விஷயத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மந்திரி பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிப்பதாக சொல்கிறார். இதை யாராலும் செய்ய முடியாது. தைரியம் இருந்தால் அந்த அமைப்புக்கு தடை விதியுங்கள் பார்க்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொள்வது வரவேற்புக்குரியது. ஊழல் வழக்குகளில் ஜாமீனில் இருப்பவர்கள் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசுகிறார்கள்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை அனுமதிக்க கூடாது என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

    இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இனி ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
    • கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் நேற்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது. இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சீருடை அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.

    பொன்னைய ராஜபுரத்தில் தொடங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார்பேட்டை, தெலுங்குவீதி, ராஜவீதி வழியாக தேர்நிலைத் திடல் சென்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணியையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த ஆர்.எஸ். பேரணிக்கு கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது. அதன்படியே தமிழகத்தில் பேரணியும் நடந்தது.

    இந்த நிலையில் கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டு நிபந்தனைகளை மீறியதாக கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார் ஆகிய 3 பேர் மீது வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×