என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 98393
நீங்கள் தேடியது "slug 98393"
நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நாய்களின் இயற்கை உபாதையை கழிக்க செய்தால் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
பெங்களூரு
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வின்படி 80 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. கட்டாயம் உரிமம் பெற்றப் பின்னரே வளர்ப்பு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
தற்போது வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் அவற்றுக்கு உடல் நலக்குறைவு அல்லது வயது முதிர்ச்சி ஆனால் அவற்றை வீதிகளில் விட்டு விடுகின்றனர். இதனால், சாலைகளில் வளர்ப்பு நாய்கள் இறந்து கிடப்பதை காண முடிகிறது.
நடைபயிற்சி என்ற பெயரில் சாலை ஓரங்களில் நடைபாதைகளில் நாய்களை அழைத்துச் செல்வோர் அவைகளை இயற்கை உபாதை கழிக்க வைக்கின்றனர். இதனால், நடைபாதைகளில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற அவலநிலைகளை தடுக்க மாநராட்சி அதிரடியான திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் அளிக்க மீண்டும் முடிவு செய்துள்ளது. அதாவது, வருகிற 15-ந் தேதிக்குள் வளர்ப்பு நாய்கள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் மைக்ரோ சிப் பொருத்தவேண்டியது அவசியம்.
அலுவலகம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஒரே ஒரு நாயை மட்டும் வளர்க்க அனுமதி வழங்கப்படும். வெளிநாட்டு நாய்களுக்கு இந்த மைக்ரோ சிப் பொருத்த அனுமதி கட்டாயம். இந்திய நாய்களை வளர்க்க உரிமம் தேவையில்லை. ஆனால், மைக்ரோசிப் பொருத்தவேண்டும். வளர்ப்பு நாய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரிகள் வரும்போது அதற்கு இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சாலை அருகே நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நாய்களின் இயற்கை உபாதையை கழிக்க செய்தால் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிக்கலாம்...உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.15 கோடியைக் கடந்தது
வங்காளதேசத்தில் ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #Bangladesh
டாக்கா:
வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.
இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படுகிறது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது. இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை.
இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bangladesh

நாய்க்கு தவறான சிகிச்சை அளித்த விலங்கு நல மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை:
தி.நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த பாசம் வைத்து பராமரித்து வந்தார்.
அந்த நாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நாயை சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பின் நாய் திடீரென இறந்து விட்டது.
இதுகுறித்து லட்சுமி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், “தவறான சிகிச்சை அளித்த விலங்கு நல மருத்துவர் விஜயபாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார். #tamilnews

செங்கோட்டை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி வீட்டு நாயை வெட்டிக்கொன்ற வாலிபர் மற்றும் 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பிளஸ்-2 மாணவியை காதலித்து உள்ளார். இதற்கு மாணவி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த பிரச்சினையால், மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவரை திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனி வேலைக்கு அனுப்பினர். இது தொடர்பாக மாணவியின் சித்தப்பா ராமர் (35) என்பவர் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் காதல் விவகாரத்தை கூறி சத்தம் போட வலியுறுத்தி உள்ளார்.
இது கார்த்திக்குக்கும் அவரது நண்பர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று கார்த்திக், அவரது நண்பர்கள் கோதண்ட ராமன் (23), செந்தில் முருகன் (19) ஆகிய 3 பேரும் ராமர் வீட்டுக்கு சென்று அவதூறாக பேசி அவரை தேடினார்கள். அப்போது வீட்டில் ராமர் இல்லை. அவர் வளர்த்த நாய் இவர்களை பார்த்து குரைத்தது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அரிவாளால் நாயை சரமாரி வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ராமர் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், கோதண்ட ராமன், செந்தில் முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #Dogs #Malaria
லண்டன்:
மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.
இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டு நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது.
எனவே மலேரியா நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று புற்று நோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர். #Dogs #Malaria
மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.
இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் காலுறையை (சாக்ஸ்) நாய்களிடம் கொடுத்து மோப்ப பிடிக்க செய்து அதன் மூலம் மலேரியா நோயை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதில் 70 சதவீதம் பேருக்கு மலேரியா நோய் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன. அதற்காக அந்த நாய்களுக்கு சிறப்பு மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
எனவே மலேரியா நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று புற்று நோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர். #Dogs #Malaria
ஒடிசா மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகம் ஒன்று, அங்கு இருந்த 4 நாய்க்குட்டிகளை அவற்றின் தாயின் கண் முன்னே கொத்தி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Odisha #CobraKillspuppies
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற அந்த நல்ல பாம்பு நாய் ஒன்றின் இருப்பிடத்துக்குள் நுழைந்தது.
நாய்களின் இருப்பிடத்தில் நுழைந்த அந்த பாம்போ, நாய்க்குட்டிகள் ஒவ்வொன்றாக கொத்தியது. இந்த சமயத்தில் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேரவே, பாம்பு அப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
இருப்பினும் பாம்பு கொத்தியதில் 4 நாய்க்குட்டிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர்தப்பிய நிலையில், தனது இறந்த குட்டிகளை தாய் நாய் துன்பத்துடன் பார்த்தது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. #Odisha #CobraKillspuppies

ஏற்கனவே வனத்துறையினருக்கு தகவல் அளித்து இருந்த மக்கள், வனத்துறையினர் வருகைக்காக காத்து இருந்தனர். இதையடுத்து, தனது 5 குட்டிகளுடன் அங்கு இருந்த தாய் நாய் பாம்பை கண்டு குரைக்க துவங்கியது.
நாய்களின் இருப்பிடத்தில் நுழைந்த அந்த பாம்போ, நாய்க்குட்டிகள் ஒவ்வொன்றாக கொத்தியது. இந்த சமயத்தில் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேரவே, பாம்பு அப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
இருப்பினும் பாம்பு கொத்தியதில் 4 நாய்க்குட்டிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர்தப்பிய நிலையில், தனது இறந்த குட்டிகளை தாய் நாய் துன்பத்துடன் பார்த்தது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. #Odisha #CobraKillspuppies
அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த வாலிபர் ஒருவர் விடுதலையாக நாய் ஒன்று காரணமாக இருந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.
வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். #tamilnews

அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு உதவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் புகுந்த ஜோசுவா ஹார்னர். வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
ஜோசுவா ஹார்னர்
ஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.
வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். #tamilnews
தாராபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் ஒரே நாளில் 25 பேரை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் பெரிய கடை வீதி பூக்கடை கார்னர் பகுதியில் நேற்று மதியம் 3 வெறி நாய்கள் சுற்றி திரிந்தது. இந்த நாய்கள் அந்த வழியாக சென்றவர்களை கடித்து குதறியது.
இதில் சுந்தரம் அய்யர் காலனி ஜெயந்தி, நல்லிமடம் ராமாத்தாள், பொள்ளாச்சி ரங்கநாதன், சின்ன மைதானம் அப்துல் சலாம், முகுந்தன், உப்பு துறை பாளையம் ரகுநாதன், ஜவகர் நகர் சதிஷ், சுந்தரம் அய்யர் தெரு பாபு, நேருநகர் ராஜன், மூர்த்தி, பஜனை மட தெரு சரசு, இறைச்சி மஸ்தான் தெரு பர்கத் அலி, சுப்பம்மாள் உள்ளிட்ட 25 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெறி நாய் கடித்து காயம் அடைந்த ஜெயந்தி குழந்தை பெற்றவர். அவர் குழந்தைக்கு பால் கொடுத்து வருகிறார்.
வெறி நாய் கடித்து உள்ளதால் சுமார் ஒன்றரை மாதத்திற்கு குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர்.
25 பேரை நாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒரு நாயை அடித்து கொன்றனர். மற்ற 2 நாய்கள் ஓடிவிட்டது.
தாராபுரம் மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடைகளுக்கு நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அங்கு இறைச்சி கடைகள் நடத்தாமல் பல்வேறு இடங்களில் இறைச்சி கடைகள் நடத்தி வருவதால் வெறி நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இது வரை ஒரு சிலரை தான் வெறி நாய்கள் கடித்தது. தற்போது ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெறி நாய் நடமாட்டத்தை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. #DogSaved #KeralaFamily #Landslide
இடுக்கி:
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் கீர்த்திகோடு என்னும் மலைக்கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் மோகனன். இவர், ‘ராக்கி’ என்னும் நாயை தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராக்கி திடீரென்று பலமாக குரைத்தது.
வெகு நேரமாகியும் அது குரைப்பதை நிறுத்தவில்லை. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகனனும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களின் வீடு நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனனும், அவருடைய மனைவியும் தங்களுடைய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய ராக்கியை நன்றிப் பெருக்குடன் உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.
மோகனன், தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார். #DogSaved #KeralaFamily #Landslide

பண்ருட்டி அருகே நாய் கடிக்க வந்ததால், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி:
அப்போது ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த நாய் திடீரென வள்ளியை விரட்டி சென்று கடிப்பதுபோல் சென்றது. இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி அங்கிருந்து வேகமாக ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்ற வள்ளி தனது கணவர் ரவியிடம் நடந்ததை கூறினார்.
பின்னர் ரவி தனது மனைவி வள்ளி மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தட்டிக் கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும், ரவி மற்றும் அவரது மனைவி வள்ளியும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அசோக், குப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அசோக்கை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் ரவி, திவான், ராதா, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் திவானை கைது செய்தனர்.
இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉஷேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
சிட்னி:
அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் கலப்பின வகையை சேர்ந்தது. மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்த நாய் அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
ஆஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மராத்தான் போட்டி நடைபெற்றது. அதில் 21 கி.மீ. தூரம் (13 மைல்) ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள்.
அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் கலப்பின வகையை சேர்ந்தது. மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்த நாய் அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
அருப்புக்கோட்டை அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் சிகிச்சை பலனின்றி பலியானது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகேயுள்ள சின்னான்செட்டிப்பட்டி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு ஒரு புள்ளிமான் வந்துள்ளது. அதனை நாய்கள் விரட்டியுள்ளன. சத்தம் கேட்டு எழுந்த கிராமத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே முட்புதருக்குள் புள்ளிமான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் உடலில் நாய்கள் கடித்த காயங்கள் இருந்தன. இது குறித்து பந்தல்குடி போலீசாருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார், கால்நடை டாக்டர் சத்யபாமாவை அழைத்து வந்து மானுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அதனை காப்பாற்ற இயலவில்லை. மான் இறந்துபோனது குறித்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். உயிரிழந்த அந்த ஆண் மானுக்கு 2½ வயது இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார்.

×

X