search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    போனஸை வலியுறுத்தி தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #MadrasHC #108Ambulance
    சென்னை:

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் போனஸ் தொகை கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.

    இந்த போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரித்து, ஐகோர்ட்டும் ஒவ்வொரு ஆண்டும் போராட்டத்துக்கு தடை விதித்து வருகிறது.

    அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஐகோர்ட்டு இந்த ஆண்டும் தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 950 உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை, 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றன.

    இந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு 30 சதவீத போனஸ் வேண்டும் என்றும் தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 30 சதவீத போனஸ் தொகை கேட்டு வருகிற 5-ந்தேதியும் அதற்கு மறுநாளான தீபாவளி நாளிலும் (6-ந்தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.


    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு அத்தியாவசியமானது. தீபாவளி அன்று வெடிவிபத்து ஏற்படும்போது, பாதிக்கப்படுபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை அத்தியாவசியமானது. எனவே, இவர்களது வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHC #108Ambulance
    பட்டாசு வெடிப்பது 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள் தான். பட்டாசு கட்டுப்பாடுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #Diwali
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

    பண்டிகைகள் சிதைக்கப்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பட்டாசு வெடிப்பது 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள். இவர்களை என்ன செய்ய போகிறார்கள்?



    சட்டத்தை புகுத்த போகிறார்களா? ஒவ்வொரு வீட்டுக்கும் போலீஸ், தெருவுக்கு ஒரு டீம் போட போகிறார்களா? இது மக்கள் விழா சந்தோச விழா.

    அடுத்து கிறிஸ்துமஸ் விழா வரப்போகிறது. அப்போதும் பட்டாசு வெடிக்கக்கூடாது. ஆடு, மாடு வெட்டக்கூடாது என்பார்களா?

    மக்கள் கூடி கொண்டாடும் சந்தோச விழாக்கள். சந்தோசமாக நடக்கட்டுமே. பாதிப்புகள் இருந்தால் அதை தீர்க்க என்ன வழி என்று யோசிப்பது தான் புத்திசாலித்தனம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan  #Diwali
    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் ரோகிணி சிந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.
    ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் திறக்கப்படுவது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். கோவில் நடை அடைக்கும்போது, அம்மன் கருவறையில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். மேலும் பூவும் வைக்கப்படும். அந்த பூ அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கும் வரை வாடாமல் இருக்கும். மேலும், கோவிலில் ஏற்றப்படும் விளக்கும் அடுத்த ஆண்டு நடை திறக்கும்வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நடை திறக்கும்போது தான் அந்த விளக்கும் அணையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    அத்தகைய சிறப்புமிக்க ஹாசனாம்பா கோவில் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று முதல் 9-ந்தேதி மதியம் 2 மணி வரை 9 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். தீபாவளி பண்டிகையையொட்டி இன்று மதியம் 12 மணி அளவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, பாரம்பரிய முறைப்படி கோவில் நடையை திறப்பார். பின்னர் மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும்.

    இன்று கோவில் நடை திறந்ததும், கருவறை உள்பட கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதனால் முதல் நாளான இன்று, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. நாளை (வெள்ளிக் கிழமை) முதல் பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவில் மற்றும் ஹாசன் டவுன் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹாசன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஹாசனாம்பா கோவிலுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். இதையடுத்து கலெக்டர் ரோகிணி சிந்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஹாசனாம்பா கோவில் நடை நாளை (அதாவது, இன்று) திறக்கப்பட உள்ளது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அந்த ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். கோவில் நடை திறக்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுவதால், பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால். ஹாசனாம்பா கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாசனாம்பா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    ஹானாம்பா கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி, ஹாசனில் ஹெலிரைடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக கூடுதலாக சுற்றுலா பயணிகள் ஹாசனாம்பா கோவிலுக்கு வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னையில், பயணிகளை கவரும் விதமாக தீபாவளி வாழ்த்து படங்களுடன் 15 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளை கவர உலக தரத்தில் சேவை அளித்து வருவதுடன், ரெயில் நிலையங்களில் பல்வேறு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக பயணிகளை கவருவதற்காக மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இதுதவிர ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள் வாடகைக்கு விடும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

    இதுதவிர பண்டிகை நாட்களில் கூடுதலான நேரங்களில் ரெயில் சேவைகளையும் அளித்து வருகிறது.

    இந்தநிலையில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளை கவரும் வகையில், கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் இருந்து தீபாவளி வாழ்த்து படங்களுடன் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது.

    சென்னையில் 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 15 ரெயில்களில் தீபாவளி பண்டிகையை குறிக்கும் வகையிலான குத்து விளக்குகள், வரிசையாக அடுக்கப்பட்ட விளக்குகளின் படங்கள் மற்றும் ‘இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ போன்ற படங்கள் ரெயில்களில் ஒட்டப்பட்டு உள்ளன. கோலங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இருந்தன.

    இந்த ரெயில், பயணிகள் பார்வையிடுவதற்காக கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த 15 ரெயில்களும் விமானநிலையம்- ஏ.ஜி-டி.எம்.எஸ்., பரங்கிமலை- சென்னை சென்டிரல் மார்க்கங்களில் இயக்கப்படுகிறது. 
    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். மது பாட்டில் - கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    கோரிமேடு அடுத்த பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று காலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில 48 அட்டை பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டிரைவரையும், அருகில் இருந்த வரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42)என்பதும், உடன் இருந்தவர் அவரது மகன் ரமேஷ் (18) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுபாட்டில் கடத்திய காரையும் பறிமுதல் செய்தனர். காரின் மதிப்பு ரூ. 10 லட்சம்.

    அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றது தெரிய வந்தது.

    தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. #TNRationshops #aheadofDeepavali
    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூர்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு வசதியாக தீபாவளி பண்டிகைக்கு முன்தினமான 5-ம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை தினமாக முதலமைச்சர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    இதைதொடர்ந்து, ரேஷன் கடைகளும் விடுமுறை தினத்தன்று இயங்காது என்று பரவலாக கூறப்பட்டது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. #TNRationshops #aheadofDeepavali
    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #vigilanceofficialsraid #TeynampetDMSpremises
    சென்னை: 

    சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். எனப்படும் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் தலைமை அலுவலக கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் மற்றும் அந்த துறை சார்ந்த இதர அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த அலுவலகங்களில் தீபாவளியை முன்னிட்டு அதிகாரிகள் மாமூல் வசூலில் ஈடுபட்டு வருவதாக  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, இன்று மாலை தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் அலுவலகம் அமைந்துள்ள இரண்டாவது மாடி பகுதிக்கு சுமார் 10 லஞ்ச ஒழிப்புத்துறை வந்தனர். அந்த மாடிக்கு செல்லும் கதவை இழுத்து மூடிய அதிகாரிகள் அங்குள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #vigilanceofficialsraid #TeynampetDMSpremises
    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது. #Diwali #PondicherryGovernment
    புதுச்சேரி:

    புதுவையில் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை வழங்கப்படும்.

    மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு செட் துணி ஆகியவையும் வழங்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு செட் துணி, மற்றும் சர்க்கரை வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு தீபாவளி சர்க்கரை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதிக்கவில்லை. இதனால் அப்போது தீபாவளி சர்க்கரை, மற்றும் இலவசங்கள் வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டு இவற்றை எப்படியாவது வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வந்தன.

    நேற்று இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் அமைச்சரவை அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது இலவசங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தினார்கள்.

    இதையடுத்து அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது.

    இதுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரேசன் கார்டு களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியையும் ரொக்க பணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

    இது சம்பந்தமாக அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கைலி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்படும்.



    இந்த ஆண்டு ரொக்க பணமாக வழங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர். காலம் கடந்துவிட்டதால் டெண்டர் வைத்து பொருட்களை வழங்க முடியாது என்பதால் இதற்கு அரசும் சம்மதித்துள்ளது.

    இதனடிப்படையில் ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக பிற சமூகத்தினரின் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

    தாழ்த்தப்பட்டோருக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு செட் துணி வழங்கப்படும். இந்த ஆண்டு ஒரு செட் துணிக்கு ரூ.822, சர்க்கரைக்கு ரூ.80 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகை ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    மேலும் இலவச அரிசிக்கு பதிலாகவும் பணமாக கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இதன்படி சிகப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்கு ரூ.600 கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் ரேசன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 என கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஒப்புதலோடு இந்த தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தலைமை செயலாளரும், நிதித்துறை செயலாளரும் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

    ஓரிருநாளில் இத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பாப்ஸ்கோ சார்பில் வழக்கமாக தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கப்படும். இந்த ஆண்டு புதுவையில் 3 திருமண நிலையங்களில் அமுதசுரபி சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்படும். காரைக்காலில் வானவில் சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும். இங்கு தரமான பொருட்களை மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Diwali #PondicherryGovernment

    தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரமும், இரவு ஒருமணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. #Diwali #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுவதாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் தயாரிக்க, விற்க, வெடிக்க அனுமதிக்கக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவு பெற்றது. கடந்த 23-ந்தேதி இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.

    தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    சுப்ரீம்கோர்ட்டு இரவு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தமிழக மக்கள் தங்களுக்கு இருக்கும் பட்டாசு வெடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். மேலும் இரவில் 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கும் நிலை ஏற்பட்டால் ஒரே நேரத்தில் அதிகளவில் புகை மாசு ஏற்பட வழி ஏற்பட்டு விடும்.

    எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அதிகாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தமிழக அரசு கூறி இருந்தது.

    தமிழக அரசின் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணை நடத்தப்பட்டது.

    நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கும்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். நீதிபதிகளின் தீர்ப்பு விவரம் வருமாறு:-

    தீபாவளி பண்டிகை தென் மாநிலங்களில் ஒரு நேரத்திலும், வட மாநிலங்களில் மற்றொரு நேரத்திலும் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

    நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்பதில் கோர்ட்டு தெளிவாக உள்ளது.

    தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அந்த 2 மணி நேரத்தை தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப அம்மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ அனைவரது கருத்துக்களையும் கேட்டு அறிந்தபிறகு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து சட்ட நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று அல்லது நாளை பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.



    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று பட்டாசு வெடிப்பதற்கான புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று காலையில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கான நேரம் வரையறுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம். இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

    ஆனால் காலை 1 மணி நேரம்,இரவு 1 மணி நேரம் என்பது நாங்கள் சொல்லும் அறிவுரைதான். எனவே தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அம்மாநில அரசு ஆலோசித்து இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

    நேரத்தை எப்படி மாற்றிக்கொண்டாலும் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. இந்த நேர ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதியாக உள்ளது.

    தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக கலெக்டர்கள் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரை அனைத்து அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

    விதிகளை யாரும் மீறக் கூடாது. அப்படி மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு பட்டாசு பிரியர்களிடம் மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தன்று 2 மணி நேரத்திற்குதான் பட்டாசு வெடிக்க முடியுமா? என்று பெரும்பாலானவர்கள் ஆதங்கத்துடன் உள்ளனர்.

    இந்த நிலையில் இரவில் 1 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தற்போதைய புதிய உத்தரவில் கட்டுப்பாடு வந்துள்ளது. கடந்த 23-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தபோது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று கூறி இருந்தது.

    ஆனால் இன்று வெளியிட்டப்பட்ட புதிய உத்தரவில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பொதுவாக தீபாவளி தினத்தன்று இரவில் 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை ஜாலியாக பட்டாசு வெடிப்பார்கள். ஆனால் சுப்ரீம்கோர்ட்டின் புதிய உத்தரவால் தீபாவளி அன்று இரவு ஒரே ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த அவகாசம் வெற்றி பெறுமா? என்பதற்கு தீபாவளி இரவுதான் விடை சொல்லும். #Diwali  #SupremeCourt
    தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோதே, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டது. அதனால்தான் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தீர்ப்பு வந்தது.

    அந்த வழக்கே டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தில் அதை அமல்படுத்த அவசியமில்லை என்ற கருத்தையும் வலியுறுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இதன்மூலம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

    இரவு 8 மணி முதல் 10 மணி வரை என்ற கட்டுப்பாட்டில் திருத்தம் கோரி செய்த மனுவிலும் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை, அவர்களின் சவுகரியத்தை புரிந்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை கூடுதல் நேரம் வேண்டும் என்று அர்த்தமற்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

    குழந்தைகளும் இளைஞர்களும் பெண்களும் ஆர்வமுடன் வெடிக்கும் பட்டாசை, அந்த அதிகாலை நேரத்தில் எந்தளவுக்கு பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் வெடிக்க முடியும்..? இந்த புரிதல் கூட இல்லாத மாநில அரசின் மனநிலை வேதனை அளிக்கிறது.

    இனிமேலாவது தமிழக மக்களின் உணர்வுகளையும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு, பாதுகாப்பான, கட்டுப்பாடற்ற கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran
    தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 4,542 சிறப்பு பேருந்துகள் உள்பட 11,367 பேருந்துகளும் பிற மாவட்டங்களில் இருந்து 9200 பேருந்துகளும் என மொத்தம் 20,567பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 7 முதல் 10-ந் தேதிவரை சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக செல்லக் கூடிய பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

    சுமார் 1000 பேருந்துகளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. இதே போல தாம்பரம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லியில் ஒரு கவுண்டரும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஒரு கவுண்டரும் என மொத்தம் 30 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது.

    சென்னையில் இருந்து செல்வதற்கு மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து திரும்பவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கினாலும் 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் திட்டம் உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 62,219 பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 39,490 பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இன்று முதல் இந்த எண்ணிக்கை உயரும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை அதிகரிப்போம். 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளுக்கு மட்டும்தான் முன்பதிவு செய்யப்படும். அதற்கு குறைவான தூரங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு பயணிகளுக்கு டோக்கன் வழங்கி நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெளியூர் செல்லக் கூடிய பயணிகள் 6 பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த 6 பேருந்து நிலையங்களுக்கும் கோயம்பேட்டில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.



    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மட்டுமே புறப்பட்டு செல்லும். தாம்பரம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. தாம்பரம், ரெயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.

    பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், செய்யாறு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.

    மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Diwali #SpecialBuses

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தீபாவளி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் நடைபெறும் இந்த ஆணையத்தில் தினமும் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.

    சமீபத்தில் டி.டிவி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் அந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக வக்கீல்கள் தீவிரமாக இருப்பதால் இன்றும், நாளையும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வழக்குகளில் ஆஜராக இயலாது என்று கூறி ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட ஆணையம் இன்றும், நாளையும் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

    ஏற்கனவே விசாரணை ஆணையத்துக்கு 4, 5,6, 7 ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ஆணைய விசாரணை தீபாவளிக்கு பிறகு தான் நடைபெறும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். #JayaDeathProbe
    ×