search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணம்"

    தூத்துக்குடியில் ரெயிலில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு 4-ம் கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை சிதறி பிணமாக கிடந்ததார். இதையடுத்து அந்த உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள டக்கம்மாள்புரம் முள்ளூரை சேர்ந்த லாரி டிரைவரான முருகபெருமாள் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரா? ரெயிலில் இருந்து தவறிவிழுந்து பலியானாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர் அருகே மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக தொங்கினார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் மரங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு மரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் ஒருவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் இதுகுறித்து வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மரத்தில் தொங்கியவரின் உடலை மீட்டனர். அவர் யார்? எந்த ஊர் என்ற விவபரம் தெரியவில்லை. 

    அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரை யாராவது அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தொங்கவிட்டார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர் அருகே 10-ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்று ஏரியில் பிணத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சோளிங்கர்:

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் சந்தை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி லதா. இவர்களது மகன் கார்த்தி (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கார்த்தி நேற்று காலை டியூசன் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் மாணவன் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மாணவன் கார்த்திக்கை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சோளிங்கர் ஏரியில் மாணவன் கார்த்தி இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பார்வையிட்டனர். மாணவன் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன.

    மாணவனை யாரோ அடித்துக் கொன்று ஏரியில் உடலை வீசியது தெரிய வந்தது. இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    ×