search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.
    • 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    சென்னிமலை:

    தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல கோடிகள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.

    ஆனால் பணம் போனால் போகிறது என்று ரோடு நிறைய குப்பைகள் நிறைய பட்டாசுகளை வெடிப்பவர்களும் ஒரு ரகம். தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பதே அரிது.

    மனிதர்களுக்கு உதவிடும் தன்மையே இருந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் நினைக்கும் இந்த வேளையில் 5 அறிவு உயிரினங்களை கூட தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.

    அப்படி நல் உள்ளம் படைத்தவர்கள் சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரை வழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருங்கங்காட்டு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    இப்படிதான் கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியை இந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான். இந்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது.

    அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும். அமைதியை தேடி வரும் இங்கு வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இன்றும் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். ஆனால் வெள்ளோடு சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் புத்தாடை அணிந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடினர்.

    சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைச க்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தனர். இப்பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என வனத்துறை சார்பாக கிராம மக்களுக்கு வேண்டு கோளும் விடப்பட்டுருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு அறிவித்தது.
    • அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு.

    தமிழகத்தில் நேற்று பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காற்று மாசு உள்ளிட்ட காரணங்களுக்காக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவாகியுள்ளது.

    அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • அரசு அனுமதித்த நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.
    • காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று காற்று மாசு 170ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாணவேடிக்கை நடந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக்குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301ஆகவும், அரும்பாக்கத்தில் 260ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227ஆகவும் பதிவாகியுள்ளது.

    பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.

    காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர தடை செய்யப்பட்ட, ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி சென்னையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நேற்றிரவு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    • நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது.
    • துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளி பண்டிகை தினத்தன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவார்கள்.

    பின்னர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை சாப்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகாலையில் இருந்தே பட்டாசு, புத்தாடைகள் ,இனிப்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

    தஞ்சையில் தீபாவளி இறுதி கட்ட விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    தஞ்சை காந்திஜி சாலை, கீழவாசல், புதிய பஸ் நிலையம் , பழைய பஸ் நிலையம் என அனைத்து இடங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கடை வீதிகள் திக்குமுக்காடின.

    கிராமப்பகுதிகளில் இருந்து மக்கள் தஞ்சை மாநகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தங்களுக்கு பிடித்த கடைகளுக்கு சென்று கலர், கலரான வண்ணமயமான துணிமணிகளை வாங்கி கொண்டு மக்கள் உற்சாகமாக சென்றனர்.

    அதேபோல் பட்டாசு கடைகள், சுவீட் கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.

    சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    தஞ்சை அண்ணாசாலை, காந்திஜிசாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளிலும் துணிமணிகள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால் காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்பவர்கள் நத்தையை போல் மெதுவாக தான் செல்ல முடிந்தது.

    கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பணம், நகையை திருடிச் சென்று விடக்கூடாது என்பதற்காக மக்களிடையே ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மப்டியில் நின்றும் கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ், ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம்.
    • பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி வந்தாச்சு. இன்று இரவு முதல் நாளை இரவு வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அதே நேரம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது முக்கியம்.

    மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அதில் இருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

    தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். அதே நேரம் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம்.

    இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அழகு நிலையங்களுக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்-அப் போடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. அது தவறு. எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரியும். அரிப்பை ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று கருதக் கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு சரியாகி விடும். மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும். பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இன்று இரவு முதல் தொடங்குகிறது. தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 102 போலீஸ் நிலையங்களிலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதால் இடையூறாக இருப்பதாக யாராவது புகார் செய்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
    • பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், நகர வர்த்தகர் கழகம், பேராவூரணி லயன்ஸ் சங்கம், பேராவூரணி ரோட்டரி சங்கம், பேராவூரணி காவல்துறை, பேரூராட்சி துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கடை வீதி வழியாக வந்து அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது.

    நிகழ்ச்சிக்கு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் தெட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். நகர வர்த்தக கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். சரவணன், பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாதன், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டா காவேரி சங்கர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் பேசியதாவது,

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    செருப்பு அணிந்து கொண்டு தான் வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் தீக்காயம் மீது பேனா மை, பேஸ்ட் தடவக்கூடாது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றார். 

    • ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்
    • விருதுநகர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி மற்றும் போலீசார் விருது நகர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில், ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். பயணிகள் எடுத்து வந்த பைகளில் பட்டாசுகள் உள்ளதா? என தீவிர சோதனை செய்து பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது பயணிகள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் பட்டாசுகள் கொண்டு சென்ற மதுரையை சேர்ந்த மோகன்குமார், பிரவீன், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வடிவேலு, ஆகியோர் கைது செய்யப் பட்டனர். தொடர்ந்து சிவகாசி, விருதுநகர் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டனர். ரெயில்களி லும் பயணிகள் யாரும் பட்டாசு எடுத்து வந்துள்ளனரா? என சோதனை செய்தனர்.

    பொதுமக்கள் யாரும் ரெயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. விதிகளை மீறி பட்டாசுகளை கொண்டு செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் எச்சரித்துள்ளார்.

    • தீபாவளியை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது.
    • ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே எஸ்.பி தெரிவித்தார்.

    சென்னை:

    தீபாவளியை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது, மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ரெயில்வே எஸ்.பி சுகுணா சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு காவல்துறை மூலமாக பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை ரெயில் நிலையங்களுக்கு கொண்டு செல்வதையோ, ரெயில் பெட்டிகளில் கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் ஆர்.பி.எப் மூலமாக அபராதம் விதிக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ரெயில்களில் பயணம் செய்யும்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து வகையான ரெயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் கிரைம் போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களில் 25-க்கும் மேற்பட்ட செல்போன்கள் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • விலங்குகள் வெடி சத்தத்தை கேட்டு மிகவும் பயப்படும்.
    • செல்லப் பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வெடிசத்தம் உள்ளூர பயத்தையும் ஏற்படுத்தும். மனிதர்களே இப்படி என்றால் செல்லப் பிராணிகளின் நிலைமை எப்படி இருக்கும்?

    சென்னையில் நாய் வளர்ப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். வெடி சத்தம் என்றாலே நாய்கள், பறவைகளுக்கு அலர்ஜி தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் நாய் ஓடிவிட்டது என்று தங்கள் விலை உயர்ந்த நாய்களை தொலைத்துவிட்டு பலர் புளூகிராசில் புகார் செய்கிறார்கள்.

    கடந்த ஆண்டில் மட்டும் 6 போன்கால் வந்ததாக இந்த நிறுவன நிர்வாகி சின்னி கிருஷ்ணா கூறினார்.

    விலங்குகள் வெடி சத்தத்தை கேட்டு மிகவும் பயப்படும். எனவே கவனம் தேவை என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள். பக்கத்து தெருவில் வெடி சத்தம் கேட்டாலே நாய்கள் பயந்து ஓடும். தீபாவளி நேரத்தில் எல்லா பகுதிகளிலும் பட்டாசு வெடிப்பார்கள்.

    இந்த நேரத்தில் நாய்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரங்களில் உரிமையாளர்கள் நாயின் அருகில் இருந்தால் அதன் பயம் குறையும். எங்கேயும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டி போடக் கூடாது. வீட்டுக்குள் பாதுகாப்பாக அவிழ்த்து விட வேண்டும்.

    வீட்டுக்கு வெளியே அல்லது பால்கனிகளில் கட்டி வைக்க கூடாது. கழுத்தில் அடையாள அட்டையை கட்டி வைக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக தொலைந்து போக நேரிட்டால் அடையாளம் காண வசதியாக இருக்கும்.

    மரங்களின் அடியில் வைத்து அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெடித்தால் பறவைகள் பீதியில் அங்கும் இங்கும் பறக்கும்.

    வீட்டு உரிமையாளர்கள் இல்லாமல் நாயை தனி அறைக்குள் கட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சில ஆண்டுகளாக பட்டாசு பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பட்டு இருக்கும் விழிப்புணர்வுதான் என்றார் சின்னிகிருஷ்ணா.

    • தீபாவளி பண்டிகை தினத்தில் காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தீபாவளித் திருநாளில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின் றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோ திகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார் கள்.

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட பொது நல வழக் கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன் படுத்தி பட்டாசுகளை உற் பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

    அந்த தீர்ப்பின் அடிப்ப டையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ண யம் செய்து அனுமதி வழங்கி யது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட் டாசுகளை வெடிக்க வேண் டும் எனத் தெரிவிக்கப்படு கிறது.மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித் தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வா கம், உள்ளாட்சி அமைப்புக ளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்ப தற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழி பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங் களில் பட்டாசுகள் வெடிப்ப தைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

    ×