search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    நாகர்கோவிலில் தனது மகள் விபசார கும்பலிடம் சிக்கியதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாயார் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் எனது மகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடத்தினோம். ஆனால் எனது மகள் திடீரென திருமணம் வேண்டாம் என கூறி விட்டு எங்கள் வீட்டில் இருந்து வெளியேறி விட்டாள். தற்போது அவள் விபசார கும்பலின் பிடியில் சிக்கி உள்ளார். அவரை மீட்டு என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மேலும் அவரது மகள் சில வாலிபர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் மனுவுடன் சேர்த்து கொடுத்திருந்தார். அந்த மனுவில் கல்லூரி மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், அந்த கும்பலிடம் தான் தனது மகள் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

    இதனால் இந்த புகார் குறித்து விரைந்து விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு, அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி அதிரடி விசாரணையில் இறங்கினார்.

    மாணவி தங்கியிருக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த மாணவி, தாயார் அளித்த புகாரை மறுத்ததோடு, தாயார் பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.

    எனது தாயாருக்கும், எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு உள்ளது. அவர்கள் சந்தோ‌ஷமாக இருக்க என்னை பகடை காயாக்க முயல்கிறார்கள். எனது தாயாரும், ஆட்டோ டிரைவரும் உல்லாசமாக இருப்பதை நானே பல தடவை நேரில் பார்த்துள்ளேன்.

    எனவே தான் திருமணம் வேண்டாம் என்று கூறினேன். அவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கவே எனது உறவினர் வீட்டிற்கு வந்தேன். ஆனால் என் தாயாரும், அவரது கள்ளக்காதலன் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வழிக்கு கொண்டு வர அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்.

    எனது தாயார் கூறும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது வேண்டுமென்றே கூறப்பட்ட பொய் புகார். நான் என் தாயாருடன் செல்லமாட்டேன்.

    நான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தேன். அவருடன் சேர்ந்து சில புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அந்த புகைப்படங்கள் என் செல்போனில் இருந்தது. அந்த படங்களைதான் என் தாயார் ஆபாச படங்கள் என்று கூறி கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவி அவரது தாயார் பற்றி இதே புகாரை தெரிவித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார், மாணவியை தாயாரிடம் இருந்து பிரித்து உறவுப்பெண்ணுடன் அனுப்பி வைத்திருந்தனர். இந்தநிலையில் மாணவி விபசார கும்பலிடம் சிக்கி இருப்பதாக அவரது தாயார் தெரிவித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவியின் தாயார் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண் ஆகியோரிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது மாணவியுடன் வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.#tamilnews
    ஸ்டெர்லைட் போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் யார்? என்று ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என்ற கமி‌ஷனர் ஆபீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டிய ரஜினிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சமூக விரோதிகள் யார்? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேவராஜ் என்பவர் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக ரஜினி கூறி உள்ளார்.

    இதுபற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அப்போது அது போன்று எதுவும் இல்லை என்பது தெரியவந்தால் பொய் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    காலா படத்துக்கு என்ன விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtests #Rajinikanth
    ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அமைதியாக போராடிய எங்களிடம் போலீசார் அராஜகமாக நடந்து கொண்டதாக காயமடைந்தவர்கள் கவர்னரிடம் சரமாரி புகார் அளித்தனர். #Thoothukudifiring #Banwarilalpurohit
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கவர்னரிடம், ‘அமைதியான முறையில் அறவழியில் போராடிய எங்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்டார்கள்.

    துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குமுறினார்கள். அதை பொறுமையாக கேட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலும் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும், இனிமேல் வழக்கு போடப்படாது என உத்தரவாதம் தரவேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். அதற்கு கவர்னர், இதுபற்றி முதல் அமைச்சரிடம் பேசுகிறேன் என்றார்.


    முன்னதாக துப்பாக்கி சூட்டில் பலியான சாயர்புரம் செல்வசேகர் வீட்டில் செல்வசேகரின் தாயார் மாசானம் அம்மாள் மற்றும் சகோதரிகள் சாந்தா, சீதா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செல்வசேகர் குடும்பத்தார் கவர்னரிடம், ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.

    ஏற்கனவே முன்பு இது போல் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட ஆலையை கோர்ட்டு உத்தரவு என கூறி திறந்துவிட்டார்கள். இந்த முறை அதுபோல் இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியை விட்டே அப்புறப்படுத்தவேண்டும்’ என்றனர். #Thoothukudifiring #TNGovernor #Banwarilalpurohit
    ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 59). இவர் கே.கே.நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம், கியாஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் வழக்கம் போல் நிறுவனத்தை பூட்டிவிட்டுச் சென்று விட்டார்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    இன்று காலை கடையை திறக்க வந்த மாணிக்கம் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.#SterliteProtest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 22-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பாக 126 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

    பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுடன் வெளியூர்களை சேர்ந்த பலர் சேர்ந்து போலீசாரை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும் தூத்துக்குடியில் சந்தேகப்படும்படி வெளியூர் நபர்கள் யாரேனும் இருந்தால் இதுபற்றி உடனடியாக அதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

    மேலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சந்தேகப்படும்படி திரிந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட்நகர் பகுதிகளில் வீடு வீடாக போலீசார் சோதனை நடத்தி ஏராளமான இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள்.

    மேலும் பலரை சட்ட விரோதமாக காவலில் வைத்ததாக வக்கீல் சந்திரசேகர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் போலீசாரால் சட்டவிரோதமாக காவலில் வைத்த 95 பேரை மீட்டார்கள். இது போல பல்வேறு பகுதியில் இருந்தும் இன்னும் பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    அவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேரும் உள்ளனராம். மேலும் பல அப்பாவி இளைஞர்களையும் போலீசார் விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளார்கள். அவர்களை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

    எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் கதி என்ன என கண்டறிந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.#SterliteProtest
    இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ததாக ரெடிமேட் நிறுவன உரிமையாளர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியைச் சேர்ந்த பொன்னுத்தாய் (வயது 25), அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    முகவூரில் செயல்பட்டு வரும் பெண்கள் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தில், கடந்த 3 ஆண்டுகளாக டெய்லராக பணியாற்றி வருகிறேன்.

    அந்த நிறுவன உரிமையாளர் மணிமாறன் (28) என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி நெருக்கமாக பழகினேன். இதனால் நான் கர்ப்பமானேன்.

    இது தெரியவந்ததும் எனது பெற்றோர் சென்று மணிமாறணிடம் பேசினர். அப்போது திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். இதனை நாங்கள் நம்பினோம்.

    இந்த நிலையில் மணிமாறன் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து ராஜபாளை யம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்புல்லாணி அருகே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள ஆண்டித்தேவன் வலசையைச் சேர்ந்தவர் நாகசாமி. இவரது மகள் ரேகா (வயது 22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் அருகில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரேகா பிணமாக கிடந்தார். இது குறித்து குதக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி காளிதாஸ் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார்.

    அதில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மதுரை அருகே குழந்தைகளுடன் பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மனைவி மலை ஈஸ்வரி (வயது 38). இவர்களுக்கு மகாலட்சுமி என்ற குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று மலை ஈஸ்வரி தனது மகள் மகாலட்சுமியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார்.

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததால் தங்கப்பெருமாள், சிலைமான் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மலை ஈஸ்வரி மற்றும் அவரது மகள் மகாலட்சுமி ஆகியோரை தேடி வருகிறார்.

    இதேபோல் மதுரை மாவட்டம், கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி (29).

    சம்பவத்தன்று லட்சுமி தனது மகன்கள் முத்தரசு (11), பாலாஜி (10) ஆகிய 2 பேருடன் அருகே உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் லட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் திருமங்கலம் தாலுகா போலீசில் கணேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகிறார்கள்.

    குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயன்றதாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    மதுரை:

    செல்லூர் மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் விஜயகுமார் மது குடித்து வர, கார்த்திகா குழந்தைகளுடன் அறையில் சென்று படுத்து விட்டார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் அவரது தலையில் கல்லைப்போட்டு தாக்கி விட்டு விஜயகுமார் தப்பி ஓடிவிட்டார்.

    பலத்த காயம் அடைந்த கார்த்திகா சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இளம்பெண் கடத்தியதாக வாலிபர் உள்பட 6 பேர் மீது அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஷாலினி (வயது 18).

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஷாலினி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து முருகேசன், அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சாக்ரடீஸ் மகன் சச்சின் என்பவர் கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கு உடந்தையாக அவரது தாயார் சாரதா, உறவினர்கள் பிச்சை, முத்துப்பிள்ளை, பாசப்பிரியன், சசி ஆகியோர் உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ஊட்டியில் வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். ஊட்டி நகரில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.), அசெம்பிளி ரூம்ஸ், திபெத்தியன் மார்க்கெட், ஏ.டி.சி. திடல் அருகே உள்ள காந்தி மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வாகன நிறுத்துமிடங்களில் கார், வேன், பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் இடங்களில் வாகனங்கள் 24 மணி நேரம் நிற்கலாம். கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.50, வேன் மற்றும் மினி பஸ்சுக்கு ரூ.100, பஸ்சுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஊட்டியில் உள்ள ஒருசில வாகனம் நிறுத்தும் இடங்களில் கார் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.60-ம், பஸ்சுக்கு ரூ.180-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ரசீதுகளும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்களின் முன்பகுதியில் புதியதாக வைக்கப்பட்டு உள்ள அறிவுப்பு பலகையை சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டு, கட்டணம் வசூலிப்பவரிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூடுதல் கட்டணமே வசூலிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த பலகைகள் மறைக்கப்பட்டு உள்ளது. சில பார்க்கிங் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்ணயம் செய்யப்பட்டதை விட பஸ்சுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து பார்க்கிங் நிர்வாகிகள் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். 
    சேலம் அருகே மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு கணவர் உடந்தையாக இருப்பதாகவும் பெண் என்ஜினீயர் புகார் அளித்துள்ளார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் பிருந்தாஸ்ரீ (வயது 26). எம்.இ. பட்டதாரியான இவருக்கும், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் துணை மேலாளராக பணிபுரியும் ஒருவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் பிருந்தாஸ்ரீ மாமானார் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், பெற்றோரிடம் இருந்து கூடுதலாக நகை, வீடு வாங்கிவா என்று கூறி தொடர்ந்து அவர் மிரட்டுவதாகவும், அதற்கு கணவர் உடந்தையாக இருப்பதாகவும் பிருந்தாஸ்ரீ ஓமலூர் மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் சேலம் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது, எங்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் சந்தோசமாக வாழ்ந்தோம். எனது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் வேறு நபர்களுக்கு என்னை பாலியலுக்கு உட்படுத்த முயற்சித்து வருகிறார். மேலும் என்னிடம் ரூ.50 லட்சம் பெருமான நகை, பணம், கார் ஆகியவை வரதட்சணையாக பெற்று கொண்டு கொடுமை படுத்திய எனது மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் எனது கணவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யாததால் உயர் நீதிமன்றத்தை அணுகினேன். உயர் நீதிமன்ற உத்தரவு படி வழக்குபதிவு செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,

    எனது கணவர் தொடர்ந்து ரவுடிகளை அனுப்பி கொலை செய்ய முயற்சிக்கிறார். மேலும் என்னிடம் பண பலம், ஆள் பலம் உள்ளது நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் நான் பார்த்து கொள்கிறேன், உள்ளே சென்றாலும் ஜாமீனில் வெளியே வந்து உன்னையும் உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டுகிறார்.

    எனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும், இதுவரை அவரை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை. எனது கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருடன் என்னை வாழ வைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். ஓமலூர் பகுதியில் இளம்பெண் வங்கி மேலாளரான கணவர் மீது பல அடுக்கடுக்கான புகார் தெரிவித்து டி.எஸ்.பி அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×