search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Worker"

    • ரஜினியுடன் சமூக சேவகர் மணிமாறன் சந்திப்பு
    • ஆம்புலன்ஸ் சாவி, ஆர்.சி.புக், ஆம்புலன்சை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் கடந்த 21 ஆண்டுகளில் 2ஆயிரத்து 46 உடல்களை நல்லடக்கம் செய்து சமூக சேவையில் முத்திரை பதித்துள்ளார்.

    சமூக சேவகர் மணிமாறன் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம் பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாண்டுரங்கன் -ராஜேஸ்வரி தம்பதியின் 3-வது மகனாக பிறந்துள்ளார்.

    இவருக்கு லோகநாதன் என்ற அண்ணனும், கலைவாணி என்ற அக்காவும் உள்ளனர்.

    மணிமாறன் 9-ம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் படிப்பில் நாட்டம் இல்லாததால் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரிடம் சமூக சேவையில் ஈடுபட்டு வருவது பற்றி கேட்டபோது பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மணிமாறன் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதை பாராட்டி அவருக்கு பயன்படும் வகையில் ரூ.8லட்சம் மதிப்பிலான ஆம்புலன்சை வழங்கினார்.

    இதுகுறித்து மணிமாறன் கூறியதாவது:-

    நான் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி அன்று முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன்.

    காசியில் எனக்கு கிடைத்த குரு மற்றும் அங்கு ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை, அகோரி பாபா எனக்கு சொன்ன உபதேசங்கள் ஆகியவை குறித்து தெரிவித்தேன்.

    மேலும் எனக்கு குருநாதர் "சிவகர்ம யோகி "என்ற பெயரை சூட்டி 16 ஆண்டுகள் தவ வாழ்க்கை வாழ சொன்னது குறித்து தெரிவித்தேன். தற்போது அவர் சொன்ன 16 ஆண்டுகள் முடிந்து விட்டது.தற்போது 1 ஆண்டு மட்டும் என் விருப்ப படி முடிவெடுத்து கொள்ளலாம்.

    திருமணத்தில் ஆர்வம் இருந்தால் திருமணமும் செய்து கொள்ளலாம்.ஆனால் நீ ஆயுள் முழுவதும் நல்லடக்கம் செய்யும் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதும் குருநாதர் கட்டளை என்பதை கூறினேன்.

    உடனே இது கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு. இது கடவுள் தந்த பரிசு.

    நீங்கள் என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் என்று ரஜினி காந்த் தெரிவித்தார்.

    அதன் பிறகு கடந்த ஜூன் 22-ந்தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் 2-வது முறையாக ரஜினிகாந்தை சந்தித்தேன்.

    அப்போது ஆம்புலன்ஸ் சாவி, ஆர்.சி.புக், ஆம்புலன்சை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

    நான் அவரது ஆசிர்வாதம் வேண்டும் என்று கேட்டேன்.அதற்கு உங்களுக்கு எனது முழு ஆசீர்வாதம் என்றும் உண்டு.

    "இந்த ஆம்புலன்சை நான் தந்தேன் என்பதை மறந்து விடுங்கள்.இது அண்ணாமலையார் தந்தது என்று நினைத்து கொள்ளுங்கள்" என கூறி ஆசி வழங்கினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் கீழே கிடந்தது.
    • செல்போனை யாரோ தவற விட்டு சென்று விட்டார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு ஆத்துப்பாலத்தை அடுத்த குறிச்சி பிரிவு அருகே சுந்தராபுரம் காமராஜர் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் பாசறை ரமேஷ் என்பவர் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் கீழே கிடந்தது. உடனே அதனை எடுத்துப் பார்த்தார். இதனையடுத்து செல்போனை யாரோ தவற விட்டு சென்று விட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அவர் நேரடியாக போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணனிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் செல்போனை தவறவிட்ட நபரை குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் குனியமுத்துரை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட நபரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் முன்னிலையில் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. செல்போனை பெற்றுக் கொண்ட அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து கீழே கிடந்த செல்போனை எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த சமூக ஆர்வலர் பாசறை ரமேசை போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரை கண்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    • முப்பெரும் விழா உடுமலை வெங்கடேஸ்வரா ஹாலில் நடைபெற்றது.
    • நாசாவின் சான்றுகளும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் இணைந்து 2022 -23ஆம் கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருது வழங்கும் விழா, சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நாசாவின் சான்றிதழ் வழங்கும் விழா, சர்வதேச விண்வெளி வார விழா வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவானது உடுமலை வெங்கடேஸ்வரா ஹாலில் நடைபெற்றது.

    கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் வரவேற்று பேசினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகி எஸ். எம். டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ் , அபக்ஸ் சங்கத்தின் நிர்வாகி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் சத்யம் பாபு,உடுமலை அமிர்தனேயன், விஜயகுமார், தமிழ் ஆசிரியர் சின்னராசு, தமிழக தமிழாசிரியர் கழக மதிப்பியல் தலைவர் வஞ்சிமுத்து, விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களான சரவணகுமார்,நர்மதா ஐயப்பன், கலாமணி ஆகியோருக்கும் உடுமலை கல்வி மாவட்டத்தை பசுமையாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பல்வேறு வழிகளில் உதவிய தற்போதைய திருப்பூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி ஆகியோருக்கு பசுமை நாயகன் விருதும், பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் ஜெயக்குமாரி,லிட்டில் ஏஞ்சல்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகி ராஜேஸ்வரி ஆகியோருக்கு சமூக சேவகி விருதும், உடுமலை ராயல்ஸ் அரிமா சங்க தலைவர் யோகானந்த் ஆகியோருக்கு சேவை செம்மல் விருதும், இரண்டாம் கிளை நூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலகர் கணேசனுக்கு நல் நூலகர் விருதும், எண்ணம் போல் அறக்கட்டளையின் நிர்வாகி இமானுவேல் நெல்சனுக்கு சமூக சேவகர் விருதும் வழங்கப்பட்டது.

    சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணன் கலந்துகொண்டு, இது போன்ற விருதுகள் நம்மை மேன்மேலும் உற்சாகப்படுத்தி புதுமையான பணிகளை சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாகும், விருது பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் பணியினை மேன்மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் சமூக சேவகர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி தங்கள் பணியை மென்மேலும் சிறப்பாக செய்ய உற்சாகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் நாசா உடன் இணைந்து கலிலியோ அறிவியல் கழகம் வழிகாட்டுதலின் பேரில் மிகச் சிறப்பாக ஆய்வு செய்த கோவை எஸ்என்எம்வி., கலைமற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் ,ஜிவிஜி கல்லூரி மாணவிகளுக்கும் நாசாவின் சான்றுகளும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச விண்வெளி வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக நிர்வாகிகள் சதீஷ்குமார், சசிகுமார் உட்பட அனைவரும் செய்திருந்தனர்.

    • ராஜபாளையத்தில் சமூக சேவகருக்கு விருது வழங்கப்பட்டது.
    • விழாவில் சமூகசேவகர் துரைராஜூக்கு விருது வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பிரபல மருத்துவர் சாந்திலால் மறைந்து 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது. டாக்டர் ஜவகர்லால் தலைமை தாங்கினார்.

    எழுத்தாளர் கவிபாலா வரவேற்றார். டாக்டர் சாந்திலால் எழுதிய ''வானவில் கனவுகளோடு நாமும்'' என்ற நூலை அவரது மகள் சுப்ரியா சாந்திலால் மற்றும் மருமகன் தினேஷ் பாபு வெளியிட முதல் பிரதியை டாக்டர் கணேசன் பெற்றுக்கொண்டார். டாக்டர்கள் அறம், ராதா, கவிஞர் ஆனந்தி ஆகியோரும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் சமூகசேவகர் துரைராஜூக்கு விருது வழங்கப்பட்டது. மருத்துவர் ராஜாராம், கவிஞர் நித்தியா, மனிதி அமைப்பாளர் செல்வி, கவிஞர் ரமணி, எழுத்தாளர் விஜய ராணி ஆகியோர் பேசினர்.

    பகிர்வு அறக்கட்டளை சரவணன் நன்றி கூறினார். பொருளாளர் பொன் லட்சுமி ஒருங்கிணைத்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய மருத்துவர் சங்கம், சுந்தரி சாந்திலால் நூலகம் மற்றும் பகிர்வு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் செய்திருந்தன.

    • சிவகாசி கல்லூரி மாணவருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
    • “அறம் விருதுகள் 2022” என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    சிவகாசி

    "அறம் செய்ய விரும்பு" அறக்கட்டளை ஆக்ஸ்பா யுனிவர்சிட்டி மற்றும் நீதியின் குரல் இணைந்து "அறம் விருதுகள் 2022" என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் சிவகாசி பி.எஸ்.ஆர். ெபாறியியல் கல்லூரி 3-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் மாரிமுத்து, சிறந்த சமூக சேவகருக்கான விருதை பெற்றார்.

    விருது பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×