என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sonu sood"
- சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- ஒரு ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார்.
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடினர்.
இன்று நடிகர் சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சோனுசூட்டின் ரசிகர்களில் ஒருவரான புருஷோத்தம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ஹாக்கிங்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார். அதன்படி அவரது பள்ளியில் படிக்கும் 1200 மாணவர்களை சோனுசூட் உருவத்தில் அமரவைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில் HBD REAL HERO என்று மாணவர்கள் அமர்ந்து சோனு சூட்டிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
- உணவக உரிமையாளர்களின் பெயர்களை பெயர்களைக் காண்பிக்க வேண்டும் உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
- உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக ரசின் இந்த உத்தர இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உயிர் காக்கும் ஊசி மருந்துக்காக 9 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது
- இதில் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரை அனைவரும் அடக்கம்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் போலீஸ் எஸ்.ஐ. ஆக இருந்து வருபவர் நரேஷ் ஷர்மா. இவரது 2 வயதில் ஹிருதயான்ஷ் ஷர்மா என்ற மகன் உள்ளார்.
ஷர்மா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) எனப்படும் அரிய மரபணு கோளாறால் பாதிப்பு அடைந்துள்ளார். இதற்கு ஒற்றை டோஸ் மரபணு சிகிச்சை ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருந்தின் விலை ரூ.17. கோடி. இது உலகின் மிக விலை உயர்ந்த மருந்துகளில் ஒன்றாகும்.
ஷர்மா இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து உடல் செயல்பாடுகளையும் கிட்டத்தட்ட இழந்திருந்தான். ஊசி போடப்படுவதற்கு முன் அவனால் இயல்பான வாழ்க்கையை நடத்தமுடியும் என்பதை உறுதிப்படுத்தினர்.
ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் 3 மாதத்துக்குள் ₹9 கோடி திரட்டப்பட்டு, ஹிருதயன்ஷுக்கு ஊசி போடப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் 3 முறை செலுத்தவேண்டும்.
பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரையிலான பலரது முயற்சியால் நிதி திரட்டப்பட்டது.
பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் ஆகியோர் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தனர். ஜெய்ப்பூரில் பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பழங்களை விற்பவர்கள் உள்பட அனைத்து இனத்தைச் சேர்ந்த தனிநபர்களும் நிதி திரட்டுவதில் பங்களித்தனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் பிரசாரத்திற்காக நிதி திரட்ட உதவியது.
மாநில காவல்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 5 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராஜஸ்தானில் இதுபோன்று நிதி திரட்டப்படுவது முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
- சாந்தனு தேஷ்முக் என்ற வாலிபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
- தனித்துவமான வகையில் காட்சிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான செய்களையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சாந்தனு தேஷ்முக் என்ற வாலிபர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கண்ணாடி துண்டுகளில் சோனுசூட்டின் உருவத்தை வரைந்துள்ளார். அவற்றை சீராக அடுக்கி தனித்துவமான வகையில் காட்சிப்படுத்திய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த சமூக வலைதள பயனர்கள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது.
- இதற்கு பதிலளித்து சோனு சூட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பையில் புறநகர் ரெயில்களில் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் வீடியோவை பார்த்த வடக்கு ரெயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரெயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பயணம் என்றும், இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். படங்களில் வேண்டுமானால் ரெயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றும்படி மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் சூனு சூட் இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்கவும், சும்மா அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரயிலின் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து செல்லும் அந்த லட்சக்கணக்கான ஏழைகள் எப்படி உணருவார்கள். இந்தச் செய்திக்கும், நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து நாடு முழுவதும் பிரபலமடைந்தார் என்பதும் அதிலிருந்து சோனுசூட் எதைச்செய்தாலும் அது செய்தியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்