என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Stone Attack"
- வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது
- 4 பேரை பிடித்து விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
சரத்குமார் நேற்று இரவு செட்டியப்பனூர் பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடைக்கு சென்றார். அப்போது மதுக்கடையில் இருந்த சிலருடன் சரத்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் சரத்குமார் ஓடி சென்றுள்ளார்.
10 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை துரத்தி சென்று நியூ டவுன் மேம்பாலம் அருகே கற்களால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் 4 பேரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பொது இடத்தில் 10 பேர் கொண்ட கும்பல் இளைஞரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கொலை முயற்சி, 2 சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பரப்பியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அசம்பாவித நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நெல்லை மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்குநேரி, சீவலப்பேரி, தாழையூத்து, பனவடலி சத்திரம், கடையநல்லூர், நெல்லை சந்திப்பு, சி.என்.கிராமம், சுத்தமல்லி பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றியும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை அருகே நேற்று நள்ளிரவு 3 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் 2 பெண் பயணிகள் காயம் அடைந்தனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்து கொண்டி \ருந்தது. நள்ளிரவு 11 மணிக்கு அந்த பஸ் நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பகுதியில் வந்தது. அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென அந்த பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.
இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த பாளை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த சொர்ணக்கிளி என்பவரின் மனைவி பாலம்மாள் (வயது65) என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதே போல் திசையன்விளையில் இருந்து நெல்லை நோக்கி நேற்றிரவு வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். நாங்குநேரி அருகே தட்டான் குளம் பகுதியில் பஸ் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்ததில், அதில் பயணம் செய்து வந்த நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி விஜயலட்சுமி (37) என்பவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து பஸ் டிரைவர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்வீச்சில் காயமடைந்த விஜயலட்சுமி, பாலம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற அரசு பஸ் மீது வள்ளியூர் அருகே கோவநேரி பகுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கிய போதும், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த 3 கல்வீச்சு சம்பவங்கள் குறித்தும் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கல்வீசி தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தம் சம்பவம் நாங்குநேரி, வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது. இதன் காரணமாக குமரி கடலோர கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச் சாவடிகளிலும் இரவு-பகலாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
போலீசாரின் கண்காணிப்பையும் மீறி நேற்று இரவு நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கரியமாணிக்கபுரத்தை கடந்து ஆனைப்பாலம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதுபற்றி பஸ் டிரைவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்றுப்பஸ்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல நள்ளிரவு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கரியமாணிக்கபுரம் பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன.
இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வீச்சில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பஸ்கள் மீது கல்வீசப்பட்டதன் எதிரொலியாக கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
மேலும் நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்