search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Store opening"

    • திருநங்கைகள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஞாயிற்றுக் கிழமை மற்றும் சிறப்பு விழா நாட்களில் தேவலாயம் முன்பு தற்காலிக அங்காடி அமைத்து விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருந்தனர்.
    • முதல் விற்பனையை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பெற்றுக்கொண்டார்.

    திருச்செங்கோடு:

    திருநங்கைகள் கடைகடையாக சென்று காசு வாங்கி பிழைப்பு நடத்தாமல் தங்களின் சுய முயற்சியால் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய திருநங்கைகள் திருப்பணி இயக்கம், திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் சார்பில் உதவி செய்து ஊக்கம் அளித்த தோடு அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஞாயிற்றுக் கிழமை மற்றும் சிறப்பு விழா நாட்களில் தேவலாயம் முன்பு தற்கா லிக அங்காடி அமைத்து விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருந்தனர்.

    அதன்படி சங்ககிரி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பு அமைக்கப் பட்டிருந்த விற்பனை நிலையத்தை ஆலய நிர்வாக கமிட்டி செயலாளர் பீட்டர் செல்வ ராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    முதல் விற்பனையை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தேவாலய பாதிரியார் ஜஸ்டின், திருநங்கைகள் நலஅமைப்பு நிர்வாகி அருணா நாயக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
    • ஏராளமான போலீசார் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியை டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்கள், தீயணைப்பு கவலகள், ஓய்வு பெற்ற காவலர்கள் என சுமார் 1800க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு உரிய பல்பொருள் அங்காடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    ×