search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student abduction"

    • போக்சோவில் கைது
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் ரெட்டி தோப்பை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 23). மீன் வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கரூரில் பதுங்கி இருந்த பாட்ஷாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • ரோந்து பணியின் போது போலீசார் மீட்டனர்
    • பெற்றோரிடம் ஒப்படைப்பு

    ஆரணி:

    கலசபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 25-ந் தேதி கடத்தப்பட்டார். இந்த நிலையில் 26-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் அப்பந்தாங்கல் கூட் ரோடு அருகே உள்ள சோதனைச்சாவடியில் ஆரணி டவுன் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந் திரன், ஆரணி தாலுகா போலீஸ்காரர் பாபு ஆகியோர்ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு நடந்து சென்ற பள்ளி மாணவியையும், மற்றவரையும் அழைக்கும் போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாணவியை போலீசார் மீட்டு விசாரித்தனர்.

    அப்போது மாணவி, தன்னை கத்திமுனையில் காரில் கடத்தி வரப்பட்டதாகவும் இரவு முழுவதும் ஒரு இடத்தில் இருந்ததாகவும் அதிகாலையில் வேறு பஸ் ஏறி செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறினார். இதையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்டு ஒப்படைத்த ரவிச்சந்திரன், பாபு ஆகியோரை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    • வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்

    கடலூர்:

    கடலூர் வண்டி ப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் மாணவி நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு மாணவி எங்கு சென்றார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி யை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறதுஇது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • பொங்கல் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு சென்றவர் மாயமானார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக் உடைய 19 வயது மகள் சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14-ந் தேதி விடுமுறையில் ஆம்பூருக்கு வந்தார்.

    பின்னர் விடுமுறை முடிந்து 23-ந் தேதி கல்லூரிக்கு சென்றார். மகள் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மெக்கானிக் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண ஆசையில் யாராவது கடத்தி சென்றுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் மீது புகார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மாண வியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவியை, வாலிபர் கடத்தி சென்று விட்டதாக வும், மகளை கண்டுபிடித்து தருமாறும் மாணவியின் தாயார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத் தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி கடத்தப்பட்டார்.
    • புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர்கோல்டன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். அவரது மகள் சுவேதா (வயது 24). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகத்தில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி பல்கலைகழகத்துக்கு செல்வதாக சுவேதா கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அசோக்குமார் தனது மகளை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சுவேதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் தேடுதல் வேட்டை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது பெற்றோர் சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவி கடந்த 30-ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் மாணவியை தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தனது மகளை திருமண ஆசை காட்டி வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருப்பதாக புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • விழுப்புரத்தில் பரபரப்பு வீடு புகுந்து மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம்கேட்டு மிரட்டல் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    • விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் சூர்யகுமார் (வயது 19). இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று வீட்டில் இருந்தபோது திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் விழுப்புரம் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் சூர்யகுமாரை நைசா பேசி அழைத்து சென்றனர்.

    அப்போது 5 பேர் கும்பல் சூர்யகுமார் தாயாரிடம் செல்ேபானில் தொடர்பு கொண்டு உங்கள் மகனை கடத்தி வந்து உள்ளோம். அவனை விடுவிக்க வேண்டும்என்றால் ரூ. 10 லட்சம் தரவேண்டும். அதனை மீறி போலீசில் தெரிவித்தால் உனது மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு துண்டித்து விட்டனர்.பதறி போன கிருஷ்ணவேணி இது பற்றி விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.அவர்கள் பேசிய செல்ேபான் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த 5 பேரும் விழுப்புரம் அருகே வீரன் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே ேபாலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த 5 பேரும் அங்கிருந்து சூர்யாகுமாருடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/   

    ×