என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sudden"
- மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது.
- கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பூலாம்பட்டி செல்லும் மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், நடந்து சென்ற மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காவிரி கரையோர பகுதிகளில் ரசாயன கழிவுகள் கொட்டுவதால் இதுபோன்ற தீ விபத்து ஏற்படும்போது பொதுமக்களுக்கு மூச்சு திணறல், சுவாசக்கோளாறு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர்.
- ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி (27). இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர். ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து சேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து போனது. இந்த சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
- உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
இந்த வாகன சோதனை யில் பள்ளி குழந்தைகளை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய அனுமதியின்றி 13 பள்ளி குழந்தைகளை அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்ற தனியார் ஆம்னி வேன், பறிமுதல் செய்யப் பட்டு பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் தார்பாய் போடாமல் சென்ற 2 மணல் லாரிகளுக்கு தணிக்கை சீட்டு வழங்கி, தார்ப்பாய் போட்டபின் பயணத்தை தொடர அனுமதிக்கப் பட்டது. அனுமதியின்றி ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட மேக்சி கேப் ஆகியவற்றுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.
இந்த வாகன சோதனை பரமத்திவேலூர் வட்டார பகுதியில் தொடர்ந்து நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
- கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
- ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில், ஒரு குறிப்பிட்ட நபர்களின் அடையாள அட்டையில் மட்டும் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீல் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் உதவி தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து அடையாள அட்டையில் சீல் வைக்கப்படாத பணியாளர்கள், தங்களுக்கும் ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது.
- சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சேலம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை பூட்டி அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் வன்னியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கார்த்திக், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் சேலம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வன்னியர் சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் கோர்ட்டில் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் காலை முதலே சேலம் கோர்ட்டில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கோர்ட்டுக்குள் செல்லும் வாகனங்களும் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டன. இதனால் கோர்ட் வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- மு.க.ஸ்டாலின் சேலம் வருகையை ஓட்டி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
- இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
சேலம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையை ஓட்டி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர், மேட்டூர் அணையை திறந்து வைக்க மேட்டூருக்கு சென்றதால் அவருடன் பாதுகாப்பு பணியில் டி.ஜி.பி சைலேந்தி ரபாபு ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மேட்டூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கருமலை கூடல் போலீஸ் நிலையத்தில் சென்ற அவர், போலீஸ் நிலைய வர வேற்பாளர் பணி குறித்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலைய பதிவேடு களையும் பார்வையிட்டார்.
என்னமாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வர்களை கைது செய்துள்ளீர்கள் என போலீசாரிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்தும் விசா ரித்தார்.போலீஸ் நிலை யத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா என்றும் அவர் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் பொது மக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்க ளின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசா ருக்கு அறிவுரை வழங்கினார்.
முன்னதாக மேச்சேரி போலீஸ் நிலையத்திலும் பதிவேடுகளை பார்வை யிட்டார். 2 போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்ததில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட் டுள்ளது என்பதால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய எழுத்தர்களுக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரையும் அவர் பாராட்டினார். முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவ லர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றி னார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பா ளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்கா ணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்தி ரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாக ராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே லாரி டிரைவர் உடல் நலம் சரியில்லாத காணத்தால் திடிரென மயங்கி விழந்தார். . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என். பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (49). ஆப்பக்கூ டலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையின் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி.
கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன 3 மாதத்திலேயே ஜெயகுமார் மனைவியை விட்டு பிரிந்து வசித்து வருகிறார். மேலும் ஜெயக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கோபி அருகே உள்ள கரட்டடி பாளையம், திருவள்ளுவர் வீதியில் உள்ள ஒரு வேப்பமரத்தடியில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் ஜெயகுமார் சரிவர சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.
- பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.
- இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.
எடப்பாடி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதி யில், நீண்ட நாள் கோரிக்கை யாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரி யிருந்தார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதல்-அமைச்சருக்கு அளித்திருந்தார்.
அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.
இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.
முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகு தியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி- மேட்டூர் பிரதான சாலை யில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அப்பகு திக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது.
- மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சென்றனர்.
நேற்று காலை பிளக்ஸ் பேனரை கிழிக்கப்பட்டி ருந்ததை பார்த்த பா.ம.க. வினர் 50-க்கும் மேற்பட் டோர் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் பிளக்ஸ் பேனரை கிழித்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய ஆணையுடன் நேரில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவித்த விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியும், கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதிகாரிகள், உத்தரவு வரவில்லை என கூறி வருகின்றனர்.
உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். மாடுகளுக்கு கூட குடிதண்ணீர் இல்லா மல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் பாலாஜி (வயது 43). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர்கள் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது, பாலாஜி கடன் தொல்லையால் தவித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் எங்காவது சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார்.
- இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன்( வயது 50). இவர் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பி னும் தீயை அணைக்க முடியவில்லை. தீ வேகமாக பரவ ஆரம்பித்தது.
இது குறித்து சாமிநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட மரம் அறுப்பு மில்லுக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரம் அறுப்பு மில்லில் இருந்து அறுப்பு மிஷின் மற்றும் பல்வேறு மரக்கட்டைகள் தீயில் எறிந்து நாசமாயின.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்