search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Symposium"

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக தேசிய அளவிலான ‘சிம்போசியம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேராசிரியை இந்திராணி இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன் பாட்டையும், விழிப்புணர்வு பற்றியும் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் (சுயநிதி பிரிவு) துறை சார்பாக தேசிய அளவிலான 'சிம்போசியம்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கணினி அறிவியல் பொறுப்பு துறைத்தலைவர் ராஜபூபதி அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியை இந்திராணி கலந்து கொண்டு இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன் பாட்டையும், விழிப்புணர்வு பற்றியும் கலந்துரை யாடினார். நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை தலைவர் வேலாயுதம் நடுவராக கலந்து கொண்டு, கல்லூரிகளுக்கிடை யேயான மாணவர் திறன் சார் போட்டிகளை நடத்தினார். தொடக்க விழாவில் இயற்பியல்துறை தலைவர் பாலு, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா, வேதியியல் துறை தலைவர் கவிதா, தமிழ்துறை பேராசிரியர் சிங்காரவேலு, ஆங்கிலத்துறை பேராசிரியர் ஆண்டனி பிரைட் ராஜா, வணிகவியல்துறை பேராசி ரியர்கள் பார்வதிதேவி, சுமதி, சிரில்அருண், திருச்செல்வம், ரூபன் இயேசு அடைக்கலம், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் இணைந்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பேராசிரியை சகாய ஜெயசுதா நன்றி கூறினார்.

    • கல்லூரியின் புவியியல் துறை சார்பில் நீர் தாங்கிகள், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மைக்கான சமூக பங்கேற்பு என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரியின் புவியியல், இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளைச் சேர்ந்த 100 மாணவ- மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சி யார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் கல்லூரியின் புவியியல் துறை சார்பில் நீர் தாங்கிகள், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மைக்கான சமூகப் பங்கேற்பு என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் முனைவர் சிந்தியா செல்வி தலைமை ஏற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    கருத்தரங்கில்மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞா னிகள் ரவிச்சந்திரன், மினிசந்திரன், சிவராம கிருஷ்ணன், பரமசிவம் ஆகியோர் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்தும் தமிழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவட்டம் வாரியாக நிலத்தடி நீர் தன்மை குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். இதில் கல்லூரியின் புவியியல், இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளைச் சேர்ந்த 100 மாணவ- மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக புவியியல் துறைத் தலைவர் முனைவர் பானுகுமார் வரவேற்றார். கருத்தரங்கு நிகழ்வுகளை உதவி பேராசிரியர் செந்தில் வேலன் தொகுத்து வழங்கினார்.

    கல்லூரி கண்காணி ப்பாளர் பாலசு ப்பிரமணியன், விலங்கியல் துறை பேராசிரியர் சரபோஜி, மேலும் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முனைவர் ஸ்ரீகலா நன்றி கூறினார்.

    ×