என் மலர்
நீங்கள் தேடியது "கத்திக்குத்து"
- மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- காயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலைசதுரன். இவரது மகன் சாலைமுனீஸ் (வயது 25). இவரது நண்பர் சரவணன் (21).
கத்திக்குத்து
இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சங்கரன்கோவில் டவுண் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடைத்தெரு பகுதியில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சோலைவேல் மற்றும் அவரது நண்பர் கதிர்வேல்(26)ஆகியோர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவ்வழியே மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சாலைமுனீஸ், சரவணன் ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
கைது
மேலும் தடுக்க வந்த மாரிமுத்து, வீராசாமி , சுவாமிநாதன் ஆகியோருக்கும் சரமாரி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர். தப்பி ஓடிய சோலைவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மாரியப்பன் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
- போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார்.
அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரியப்பனை குத்திவிட்டு தப்பினார்.
இதில் காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரியப்பன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.
- பெண் உள்பட 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் மாங்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜாவித் (வயது 40). இவரது மகன் ஜனா. நேற்று முன்தினம் இரவு மளிகை பொருட்கள் வாங்க ஜனா அருகில் இருந்த கடைக்கு சென்றார்.
பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும் போது அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (28) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜனா தனது தந்தை ஜாவித்தை அழைத்து வந்ததாக வும், பிரதாப் உறவினரான அருண் (28), சுகன்யா (26) ஆகியோரை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதாப், சுகன்யா, அருண் ஆகியோர் கத்தியால் ஜாவித், ஜனாவை குத்தியதாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.
இது குறித்து ஜாவித் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதாப், அருண் சுகன்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இன்று பள்ளியில் இடைவேளையின்போது மாணவர்கள் சாப்பிட்டு விட்டு கை கழுவி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது மோதலாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த மாணவர் ஒருவர் சக மாணவரை கத்தியால் குத்தினார். இதனால் அந்த மாணவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று காயம்பட்ட மாணவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண தரகர்கள் 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
- தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முதுகொலா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா்.
பிக்கோல் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவன். இவா்கள் இருவரும் திருமண தரகா்களாக உள்ளனா். இருவருக்குமிடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவைக்கு செல்ல பாலகொலா சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக சிவகுமாா் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த தேவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை வயிற்றில் குத்தினாா்.
இதை பாா்த்த கிராம மக்கள் தேவனை பிடித்து கட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த ஊட்டி புறநகர் போலீசார் தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கத்தியால் குத்தப்பட்ட சிவகுமாா் ஆபத்தான நிலையில ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சேலம் திருவாக்வுண்டனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
- கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
சேலம்:
சேலம் திரு வாக்வுண்ட னூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 36). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு சரண்யா ( 27) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ( 32) என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூபதி கூறியதாவது-
கண்ணன் தனது மனைவியை அழைத்துச் சென்றதால் 2 குழந்தைகளும் தினமும் அம்மா எங்கே என்று கேட்டு அழுது அடம் பிடித்தனர்.சிறிய குழந்தைகளான அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கினேன்.அதனால் கண்ணனுக்கு போன் செய்து திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு அழைத்து இருவரும் மது அருந்தினோம். பின்னர் எனது செல்போனில் இருந்த குழந்தைகளின் படத்தை கண்ணனிடம் காண்பித்து குழந்தைகள் அம்மா இல்லாமல் அழுகிறார்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விடும் . எனவே எனது மனைவி சரண்யாவை எனது வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கண்ணனின் காலில் விழுந்து கேட்டேன். ஆனால் கண்ணன் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் எனது மனைவியும் கண்ணனும் நெருக்கமாக உள்ள படத்தை காட்டி, மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான், கண்ணனை தாக்கினேன். இவ்வாறு பூபதி கூறினார். கைது செய்யப்பட்ட பூபதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
- ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான்.
- போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பிரதான சாலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிசம்பர் 31ம் தேதி மாலையில் கல்லூரி மாணவர் ஆயுஷ் (வயது 22) தனது இரண்டு நண்பர்களுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பிரதான சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தது. ஆயுஷ் ஹாரன் அடித்து, முன்னால் நின்றுகொண்டிருந்த சிறுவர்களிடம் வழிவிடும்படி கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் ஆயுஷின் பைக்கை பின்தொடர்ந்து துரத்தினர். ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆயுஷ் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இந்த கத்திக்குத்து தொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- காயமடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை
கோவை இருகூர் டி.எஸ்.கே நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை தன்னுடன் வேலை பார்க்கும் பிரபு(28) என்பவருடன் ஒண்டிப்புதூர் மேம்பாலம் கீழே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு மது வாங்கி அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்டிட தொழிலாளி பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பர் பிரபுவை குத்தினார். இதில் பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதனால் பயந்து போன கட்டிட தொழிலாளி பிரபு அங்கிருந்து ஓடினார். அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த பிரபுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு வாலிபருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சுதா காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்( வயது 34) திருமணமாகவில்லை.
சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவருடன் சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
அப்போ து அவரது அருகே உள்ள மேஜையில் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த டிரைவர் சுந்தரே ஸ்வரன் (42) என்பவர் அவரது நண்பர்களுடன் மது குடி த்துக் கொண்டிருந்தார் .
அவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
இதனை சஞ்சய் குமார் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .
பின்னர் சஞ்சய் குமார் த னது மோ ட்டா ர் சைக்கி ளில் இடை யர்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த சுந்தரேஸ்வரன் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சய் குமாரின் கழுத்து, முதுகு ,தொடை ஆகிய பகுதிகளில் குத்தினார்.
பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சஞ்சய் குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலத்த காயமடைந்த ஆசிரியர் பிஎல்கே கபூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி இந்தர்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை கண்காணிக்கும் பணிக்காக ஆசிரியர் பூதேவ் சென்றுள்ளார். அப்போது, மாணவன் ஒருவன் ஆசிரியரை கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர், பிஎல்கே கபூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராசில் உள்ள ஒரு தேவாலயத்தில் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மர்மநபர் ஒருவர் கத்தியுடன் தேவாலயத்துக்குள் நுழைந்தார். அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கினார்.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பாதிரியார்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மர்மநபரை கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
அதேவேளையில் தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.
படுகாயம் அடைந்த பாதிரியார் அன்டோனியா ரோட்ரிக்ஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, 'பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்த பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை பயங்கரவாத சம்பவமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
- வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
- ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார மன்னயார் தெருவில் உள்ள கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது.
இதே தெருவை சேர்ந்த சுகுமார் மனைவி திருச்செல்வி (வயது 35) என்பவரது வீட்டிற்கு உறவினரான திருச்சியை சேர்ந்த மணவாளன் என்பவர் கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த சிவா (30), பிராங்கிளின் (31) ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த மணவாளன் இங்கிருந்து மது அருந்தாதீர்கள் என அவர்களை தட்டி கேட்டார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மணவாளன் நடந்த விவரங்களை திருச்செல்வியிடம் கூறினார்.
இதையடுத்து திருச்செல்வி, மணவாளன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் நடந்த சம்பவங்கள் குறித்து தட்டி கேட்டனர்.
இதில் சிவா ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.
மேலும் அவரது ஆதரவாளர்கள் செல்வராஜ், திருக்குமரன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த திருச்செல்வி உள்பட 4 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.
பிராங்க்ளினிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.