என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 219768
நீங்கள் தேடியது "வசதி"
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வ ரன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில குழு உறுப்பினர் பொண்ணுத்தாய் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட முடுவார்பட்டி ஊராட்சியில் வடக்கு பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும், தினசரி பழ மார்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் நியமனம், குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் சுற்றுச்சுவர் வசதி செய்து தர வேண்டும். பழுதடைந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் பிச்சை நன்றி கூறினார்.
நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும். நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும் பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது 2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.
எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.
பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.
இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்களில் கூடுதலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டன.
சேலம்:
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம்
ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது.
அந்த வகையில் சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியாக செல்லும் கீழ்கண்ட 8 ரெயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை இணைத்து நிரந்தரமாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மங்களூர் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22638) நேற்று முதலும், சென்னை சென்ட்ரல் -மங்களூர் சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22637) நாளை மறுதினம் முதலும், சென்னை சென்ட்ரல்-மங்களூர் சென்ட்ரல் ரெயிலில் (12601) இன்று முதலும், மங்களூர் சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரெயிலில் (12602) நாளை முதலும், திருவனந்தபுரம்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22641) இன்று முதலும், ஷாலிமர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22642) வருகிற 5-ந் தேதி முதலும், கன்னியாகுமரி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16317) நாளை முதலும், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோத்ரா - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16318) வருகிற 6- ந் தேதி முதல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X