என் மலர்
நீங்கள் தேடியது "மது"
- மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு.
- விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது.
மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் கீழப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி சோழபுரம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மனித குலத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு, சுவாச குறைபாடு, கண் சிவத்தல், பார்வை குறைபாடுகளும் இதயத் துடிப்பு அதிகரித்து மரணம் விளைவுகளை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.
முன்னதாக கூட்டமைப்பின் சார்பில் சோழபுரம் காவல் நிலையத்தில் மது போதை இல்லாத சோழபுரம் உருவாக கோரிக்கை மனு அளித்தனர்.பேரணியில் சோழபுரம் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சுமையா, சாதிக், பரக்கத்அலி, ரியாஜ், அர்ஷ் முகமது, தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர்.
- உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.
கன்னியாகுமரி:
குளச்சல் இயற்கை துறைமுக கடற்கரை பகுதிக்கு மாலை வேளை களில் பொதுமக்கள் பொழுது போக்க மற்றும் காற்று வாங்க வந்து செல்வர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் அனுமதியின்றி இங்கு மது விற்பனை செய்யப்ப டுவதாக குளச்சல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.
எனவே அங்கு மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, புனித காணிக்கை அன்னை திருத்தல செயலா ளர் வால்டர், இணை செயலாளர் ரெக்சன், பொரு ளாளர் ஜெயசீலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- விவசாயியான பாண்டியராஜிக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
- மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(வயது 39). விவசாயி. இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
பாண்டியராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவரை, மனைவி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பாண்டியராஜ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது வீட்டின் முன்பு திருட்டுதனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
- தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது சென்றனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
இவரது மனைவி அம்சவள்ளி (வயது 57). இவர் தனது வீட்டின் முன்பு திருட்டு தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்த அம்சவள்ளியை கைது செய்தனர்.
- தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அறிவிக்கப்படாத பாராக மாறிவிட்டது.
- கண்ணாடி பாட்டில் உடைந்து கண்ணாடி துகள்கள் எங்கெங்கும் சிதறி கிடைக்கிறது.
காரிமங்கலம்,
காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் தனியார் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் இரு புறமும் சர்வீஸ் சாலை உள்ளது. இதில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வரும் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அறிவிக்கப்படாத பாராக மாறிவிட்டது.
மாலை நேரம் தொடங்கியது முதல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வரும் குடிமகன்கள் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து அதை மது அருந்தும் கூடமாக மாற்றிவிட்டனர். இவ்வாறு சட்ட விரோதமாக மது அருந்தும் குடிமகன்கள் கூச்சலிட்டும் ஆபாச வார்த்தையில் பேசி வருவதால் சர்வீஸ் சாலை வழியே செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
மேலும் அவ்வழியே செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி கிண்டல் கலாட்டாவும் செய்து வருகின்றனர். போதை தலைக்கு ஏறி மது பாட்டில்களை சர்வீஸ் சாலை பகுதியிலேயே தூக்கி வீசி வருவதால் கண்ணாடி பாட்டில் உடைந்து கண்ணாடி துகள்கள் எங்கெங்கும் சிதறி கிடைக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்துவரும் சர்வீஸ் சாலை குடிமகன்களின் கூடாரமாக மாறி வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மற்றும் டோல்கேட் பராமரிப்பு நிறுவனம், போலீசார் உரியகவனம் செலுத்தி சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
- நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோரின் உத்தரவின்படியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படியும், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையில் ஆன மீட்பு குழுவினர் விஜயா, சக்திபிரியா, சரவணன், பாலா ஆகியோர் அனைவருக்கும் உரிய முன்னறிவிப்பு கொடுத்த பிறகு நேரில் சென்று நீண்ட நாட்களாக புகையிலை, மது பழக்கத்தினால் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிவதுடன் பொதுமக்க ளுக்கும் தொந்தரவும் இடையூறும் செய்து கொண்டிருந்த மூன்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மீட்டெடுத்து நம்பிக்கை மனநலக் காப்பகத்தில் மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.முதலில் என்கன் ஊராட்சிக்கு சென்று மது அருந்தி மனநலம் பாதிக்கப்பட்ட குமரவேல் என்பவரை குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீட்டனர்.
இதேப்போல் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை முன்னிலையில் திருவாரூர் பைபாஸ் ரோட்டில் முகவரி தெரியாத மனநல பாதிக்கப்பட்டவரையும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் குணா மற்றும் நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.இப்பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பெக்டர் மணிமேகலையை சந்தித்து உரிய ஆவணம் பெற்று மூன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களையும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
- ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த கழுவன்திட்டை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை நேரத்தில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
அங்கு மது குடிப்பவர்கள் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம். நேற்று இரவு மது அருந்தி வந்த ஒருவர் மேம்பாலத்தின் மேல் பகுதியில் அமர்ந்துள்ளார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் பள்ளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள்அங்கு ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்தவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பள்ளம் மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், அங்கு மின் விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் அவரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த நபரை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் பள்ளத்தில் விழுந்தவர் அருமனை பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 43) என தெரிய வந்தது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அப்பகுதியில் முள்வேலி அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
- இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறிவைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி பல கிராமங்கள் இருப்பதால் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.
கடந்த 2012 அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதேபோன்று கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கடலாடி ஒன்றியத்தில் இருந்து சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடக்கவில்லை.
சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழு தலைவர் மிசா சைபுதீன், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள் சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதி-1 குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்்ந்த பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பட்டணம் காத்தான் பகுதி 1-ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் இளை ஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறி வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேலும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மாலை நேரங்களில் வீட்டுக்கு வருவதில் அச்சுறுத்தல் உள்ளது. சட்டவிரோமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
- 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக வரப்பாளையம் புது அய்யம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் (50), திங்களூர் நல்லம்பாட்டி எல்.பி.பீ. வாய்க்கால் பகுதியை சேர்ந்த சுந்தரம் (56), சென்னிமலை வெப்பிலி பிரிவு சாலையை சேர்ந்த பழனிசாமி (62), சித்தோடு
ஆர்.என்.புதூர் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (74), அதே பகுதியை சேர்ந்த தனகேஸ்வரன் மனைவி கருப்பத்தாள்(48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்
- 10 மது பாட்டில்கள் எந்தவித அனுமதியும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது
கன்னியாகுமரி :
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் கையில் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர்.
அதில் 10 மது பாட்டில்கள் எந்தவித அனுமதியும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது. அதிக லாப நோக்கத்கோடு விற்பதற்காக அவற்றை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த தோடு, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் வடக்கு குண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 36) என்பது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
- உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.
உடுமலை:
உடுமலைஅருகே உள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 49 ).இவர் ஐஸ்வர்யா நகர் சாலையில் நின்ற போது ஏரி பாளையத்தைச் சேர்ந்த அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.
- மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் நடந்தது.
- தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் உமேஷ் (31). சம்பவத்தன்று இரவு இவர் 'நல்உள்ளங்கள் கூட்டமைப்பு" சார்பில், கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உமேஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உமேசை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஸ், சையது அப்துல் என்ற தில்ரூபா, சம்சுதீன், சோட்டு, ஏழு மண்டை என்ற முகமது, காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.