என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை"

    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
    • நீரிழிவு நோய் சிகிச்சை முறைகளில் இன்றைய முன்னேற்றம் குறித்து உரையாற்றினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் மருதுதுரை மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன் கலந்து கொண்டனர்.

    மருத்துவத்துறை பேராசிரியர்கள் பராந்தகன், கண்ணன், உதவி மருத்துவமாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் நடந்த கருத்தரங்க கூட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் கால் பாதுகாப்பு குறித்து பேராசிரியர் மருதுதுரை, பேராசிரியர் பிரபுசங்கர், உரையாற்றினர்.

    திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகி விவேக்சுந்தரம், நீரிழிவு நோய் சிகிச்சை முறைகளில் இன்றைய முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்கள்.

    இக்கருத்தரங்கில் மருத்துவ பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

    • கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விளக்கமளித்தனர்.
    • சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளி விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

    களஞ்சேரி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவத்துறையினர் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், அதற்கான சிகிச்சை குறித்தும் விளக்கமளித்தனர்.

    தொடர்ந்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முகாமில் களஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் செலவில் சிகிச்சை அளித்துள்ளனர்.
    • கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வீதி உலாவின் போது சுவாமி முன்பு செல்வதற்காக யானை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

    பெண்யானை

    இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாா்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பார்வதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு இடது கண்ணில் பாா்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தவிர பார்வதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

    இதனிடையே பாா்வதிக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் உருவானது. எனவே சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழு, மதுரையில் உள்ள கால்நடை டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.

    எனவே தாய்லாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பிரத்யேக மருத்துவ குழுவினா் மதுரை வந்து சிகிச்சை வழங்கி சென்றனர்.யானை பாா்வதிக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவு செலவு ஏற்பட்டது? தாய்லாந்து மருத்துவக் குழுவினருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது? என்பவை தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.

    அதற்கு கோவில் நிா்வாகம் கொடுத்த பதிலில், யானை பாா்வதிக்கு கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மருந்துகள் வாங்கியது, வெளிநாட்டு- உள்நாட்டு மருத்துவா்கள் விமான கட்டணம் உள்பட மொத்தம் ரூ. 9,08,018 செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி.
    • நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், பேங்க் ஆப் பரோடா, மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டையில் வருகிற 29-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கால்நடை மருத்துவ முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

    இதில் திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) டாக்டர் ராமலிங்கம், ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், பேங்க் ஆப் பரோடா மேலாளர் சிவின்டு சட்டர்ஜி , பேங்க் ஆப் பரோடா விவசாய அதிகாரி மோனிகா, பேங்க் ஆப் பரோடா ராஜ்குமார், மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன், செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், உள்ளிக்கோட்டை கால்நடை மருத்துவர் கார்த்திக், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் டாக்டர் டி.தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த கால்நடை மருத்துவ முகாமில் மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? மாடு, ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய் பரவாமல் தடுப்பது எப்படி? கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கப்ப டுகிறது.

    மேலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தடுப்பூசி செலுத்த ப்படுகிறது. இந்த முகாமில் சிறந்த கால்நடைகன்றுகளை பராமரிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்ப டுகின்றன.

    • முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
    • 116 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கமும், ஏவிஆர் தனலட்சுமி ஜுவல்லரி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண் சிகிச்சை முகாம் நடைபெ ற்றது.

    முகாமிற்குசங்கத் தலைவர் எஸ்பாண்டிய ராஜன் தலைமைவகித்தார்.

    மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.பாலசுப்பி ரமணியன், மாவட்டத் தலைவர்கள் எம்.நீலகண்டன், கே.இளங்கோ, சங்கச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் தனலட்சுமி ஜுவல்லரி நிறுவனர் சுதர்சனவள்ளி பாலாஜி குத்து விளக்கு ஏற்றினார்.

    முகாமை கண்பார்வை மாவட்ட தலைவர் வி.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    மண்டலத் தலைவர்சிவகுமார், வட்டாரத் தலைவர் குருநாதன், கண் சிகிச்சை முகாமின் ஒருங்கிணை ப்பாளர் செல்வகுமார், ஏவிஆர் தனலட்சுமி பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்நிக ழ்ச்சியில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், சாசனச் செயலாளர் வ.ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன்பிச்சை, செய்தி தொடர்பாளர் கதிரவன், சபரி முத்துகுமார்உள்ளிட்ட உறுப்பினர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

    முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்ய ப்பட்டது. அதில் 116 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • தலையில் படுகாயமடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாய தொழிலாளி.

    இவருடைய மகன் மாதேஷ் (வயது3).

    இவர்கள் கடந்த 21-ந் தேதி திருப்பனந்தாளில் இருந்து மானம்பாடி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.திருவாய்ப்பா டியில்சென்றபோது அங்கு வந்த மாடு இருவரையும் முட்டியது.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மாதேஷ் மேல் சிகிச் சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை மாதேஷ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை.
    • ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முகாமை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மங்கள தீபம் ஏற்றினார்.

    சௌராஷ்ட்ர கல்வி நிதி உதவி சங்கம் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பராமன், உமாபதி, ஆதிநாராயணன், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் ரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, எடை, உயரம், இ.சி.ஜி‌. கால் பாதம், நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பிரதி ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும் என்று கவுன்சிலர் யு.என். கேசவன் தெரிவித்தார்.

    இதில் 30-வது வார்டு பகுதி சபா குழு உமாபதி, ராமமூர்த்தி ,ஜெகநாதன், ரங்கராஜன், தஞ்சாவூர் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சுந்தர், பொருளர் தமிழவதி, துணைத் தலைவர் துரை பத்மநாபன், சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜு நன்றி கூறினார்.

    • 109 வெளிநோயாளிகளுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • 109 வெளிநோயாளிகளுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

    திருவையாறு ரோட்டரி சங்கமும் கோவை சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 109 வெளி நோயாளர்களுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.

    33 கண் நோயாளர்களுக்கு கண்புரை கண்டுபிடிக்கப்பட்டு, இலவச. கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கராண் மருத்துவ மனைக்கு சிறப்பு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இம்முகாமில் திருவையாறு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவையாற்றினர்.

    • சுபஸ்ரீ என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
    • தங்கராசு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டை கிராமத்தை சேர்ந்த தனுக்கோடி மகள் சுகாமதி(வயது 43).

    இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த வினோத் மனைவி சுபஸ்ரீ(23) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

    இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறின்போது சுகாமதியையும், அதே ஊரை சேர்ந்த அவரது சித்தப்பா தங்கராசு(70) என்பவரையும் சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சிலர் தாக்கி உள்ளனர்.

    இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த தங்கராசுவை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராசு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    துகுறித்து தங்கராசுவின் அண்ணன் மகள் சுகாமதி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார், சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம், நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, தலைமை வகித்து முகமை தொடங்கி வைத்தார். நல்லூர் கால்நடை மருந்தக மருத்துவர் டாக்டர் கவிதா தலைமையில், கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துசாமி, திருநாவுக்கரசு, கால்நடை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இந்த சிறப்பு கால்நடை முகாமில் பெரியம்மை நோய்க்காக தடுப்பூசி போடப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    இதில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் , கன்றுகுட்டிகளுக்கு குடற்புழு நீக்கம், மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, தாது உப்பு கலவை வழங்கப்பட்டன.

    முகாமில் குன்னமலை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி குணசேகரன் கலந்து கொண்டு சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளையும், சிறப்பாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்ட விவசாயி களுக்கு விருதுகளையும் வழங்கினார். முகாமிற்கு பாமகவுண்டம்பாளையம், பொதிகை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயனடைந்தனர். முகாமில் ஊராட்சித் துணைத் தலைவர், வாழ் உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    • பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி தவித்து வந்தார்.
    • மூதாட்டிக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் காட்டூர் பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் தவித்து வந்தார்.

    இது பற்றி காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகர் அளித்த தகவலின் படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் அறிவுரையின் பேரில் மாவட்ட குழந்தைகள் குற்ற பாதுகாப்பு காவல் ஆய்வாளர் கண்ணகி, தலைமை காவலர் சத்யா, ஓ. எஸ். சி. நிர்வாகி சுமிதா, மெர்லின், சமூகப் பணியாளர்கள் கீர்த்தி, ஆகாஷ், வினோத் ஆகியோர்கள் உதவியுடன் மூதாட்டி மீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கு உதவி செய்த பாரதி தொண்டு நிறுவன இயக்குனர் நாகராஜன், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறினார்.

    அப்போது உடன் காப்பக செவிலியர் சுதா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் சங்கர் ஆகியோர் இருந்தனர்.

    • மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது.
    • ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அழகிய நத்தம் காலனியை சேர்ந்த வர் ஆதிலட்சுமி (வயது 70). இவர் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு தொகு ப்பு வீட்டில் மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்து அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தலையில் காயமடைந்த ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆதிலட்சுமிக்கு டாக்டர்கள் உடனடி யாக சிகிச்சை அளித்த னர்.

    ஆதிலட்சுமி வசித்து வந்த தொகுப்பு வீட்டில் ஏற்கனவே ஆங்கா ங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக கட்டிடம் மழை நீரில் ஊறி மீண்டும் சிமெண்ட் காரைகள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தூக்கணா ம்பாக்கம் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    ×