என் மலர்
நீங்கள் தேடியது "நோய்"
- கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்
- மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.
கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும். இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நோய் பாதிப்பு 205 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு GBS நோய் கண்டறியப்ப்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட GBS பாதிப்புகளின் எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநிலத்தில் GBS நோய் காரணமாக இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். GBS காரணமாக மும்பையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். எனவே மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி கவுதமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
- மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவர் படிக்கும் பள்ளி மாணவர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பருவமழை காலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் மட்டுமின்றி அரியவகை நோய்களும் பரவுவது வாடிக்கையாக உள்ளது. இப்படியெல்லாம் நோய் இருக்கிறதா? என்ற ஆச்சரியப்படும் வகையில் பலவித தொற்று நோய்கள் பரவும் மாநிலமாக கேரளா இருக்கிறது.
இந்தநிலையில் "குய்லின் பார் சிண்ட்ரோம்" என்ற வினோத நோய்க்கு பள்ளி மாணவி ஒருவர் பலியாகி இருக்கிறார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மூவாட்டுப்புழா வாழக்குளம் பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் பெயர் கவுதமி பிரவீன்(வயது15). காஞ்சிரப்பள்ளியில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி கவுதமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டயம் மருத்துவக்கல்லுரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அரியவகை நோயான "குய்லின் பார் சிண்ட்ரோம்" பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை மாதமாக வென்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவர் படிக்கும் பள்ளி மாணவர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
"குய்லின் பார் சிண்ட்ரோம்" நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி தசை பலவீனத்தை ஏற்படுத்தும். கூச்ச உணர்வு, உடல் பலவீனம், உடலை முடக்குதல் உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகளாகும்.
"குய்லின் பார் சிண்ட்ரோம்" நோய் குறித்து மருத்துவ துறையில் கூடுதல் பேராசிரியராக பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் கூறும்போது, "நீண்டகால சிகிச்சை பெறுவதன் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும். ஆனால் சிலருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த நோய் எந்த வயதினரையும் எந்த நேரத்திலும் பாதிக்கக்கூடும். ஆனால் தொற்று நோய் கிடையாது" என்றார்.
- மதுரை பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.
மதுரை
மதுரை அண்ணா பஸ் நிலையப் பகுதியல் மழைநீர் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்டவற்றிற்கு வருவோர் அண்ணா பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பராமரிக்கப்பட்டு வந்த அண்ணா பஸ் நிலையம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது.
பஸ் நிலையத்தின் உள் பகுதியில் மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி பணியாகவும் காட்சியளிக்கிறது. மேலும் பஸ் நிலைய பகுதி முழுவதுமே குடிமகன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பெண் பயணிகளும், பஸ் நிலையத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகிகளும், போக்குவரத்து கழகமும், மாநகர காவல் துறையும் இணைந்து செயல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பயணிகள் அச்சமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டடம் முதல-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- கால்நடைகளில் நோய் மாதிரி பொருட்களை சேகரித்து தடுப்பூசி அல்லது சிகிச்சை நடத்தப்பட்டன.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டடம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இக்கால்நடை நோய் புலனாய்வு பிரிவகத்தின் மூலம் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து நகர்புற, கிராமப்புற பகுதிகளில் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுவரும் அனைத்துவகை கால்நடைகளும் எவ்வித நோய் தொற்று ஏதும் வராமலும், பரவாமலும் இருக்க அவ்வபோது கால்நடைகளில் நோய் மாதிரி பொருட்களை சேகரித்து ஆய்விடப்பட்டு ஆய்வின் முடிவின்படி தடுப்பூசி அல்லது சிகிச்சை முகாம்கள் நடத்தப்படும்.
இக்கட்டடமானது, 3 ஆயிரத்து 761 சதுர அடி பரப்பளவில்; அலுவலக அறை, ஆய்வகம், இருப்பு அறை, உதவி இயக்குநர் அறை, கால்நடை மருத்துவர் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இப்பிரிவகத்தினை மாவட்ட கலெக்டர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர். தொடர்ந்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் கலைசெல்வி செல்வகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் தளபதி உதவி இயக்குநர்கள் ஈஸ்வரன், சபாபதி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவக உதவி இயக்குநர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
- ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சீர்காழி,:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் சேத்திருப்பு எஸ்.எம்.எஸ். நடுநிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் தொடக்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலு முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலு கூறுகையில், ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை மாணவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் ராசாத்தி தீபா, விஜயா, விஜயலட்சுமி, பிரேமா மற்றும் அங்கன்வாடி உதவியாளர் அஞ்சம்மாள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் விழாவினை ஆசிரியர் சந்திரன் கணேசன் ராஜேஷ்குமார் ஏற்பாடு செய்தனர்.
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
- பணிதள பொறுப்பாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், மக்கள் நல பணியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி ஊராட்சியி ல்முதல் அமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் யசோதா சரவணன்தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் சச்சிதா னந்தம் முன்னிலை வைத்தார்.
உம்பளப்பாடி ஊராட்சி க்கு உட்பட்ட இளங்கார்குடி, மேட்டு தெரு, தைக்கால், கருப்பூர், உள்ளிட்ட கிராம மக்களுக்கு மக்களை தேடி மருத்துவத்தின் திட்டத்தை விளக்கி வருகைதந்த பொது மக்க ளுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்ப ட்டு மேல் சிகிச்சை பெறுவோர் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில் மருத்துவ குழுவினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணி தள பொறுப்பாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், மக்கள் நல பணியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை, ஜூன்.30-
மார்த்தாண்டத்தை அடுத்த மருதங்கோடு கல்லறைவிளை பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள் (வயது 73).
இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று காலை பால் வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனால் பதறி போன உறவினர்கள்- உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
இந்நிலையில் அருகாமையிலுள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பாலம மாள் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமாரபாளையத்தில் புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு ஏற்பட்டு, அது அனைத்து கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார் ஆகியோர் நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது சாதாரண வைரஸ் நோய், இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறினர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கால்நடை டாக்டர்கள் அச்சப்படா தீர்கள் என்றாலும், கால்நடைகளின் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் மருத்துவமனைக்கு தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.
ஆகவே ஒவ்வொரு கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தடுப்பூசி போட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதோடு பல கால்நடைகளை நோய் பாதிப்பு, நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும்.
- காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும்.
கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. சர்க்கரை, நார்ச்சத்து, ஸ்டார்ச் ஆகியவற்றை குளுக்கோஸாக பிரித்து உடலுக்கு ஆற்றலாக வழங்குகிறது. அதனால் அன்றாடம் சாப்பிடும் உணவில் 50 முதல் 60 சதவீதம் கார்போஹைட்ரேட் இடம் பெற்றிருக்க வேண்டும். 'சிம்பிள்', 'காம்ப்ளக்ஸ்' என இரண்டு வகை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும். மைதா போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நீரிழிவு, இதய, நோய், மலச்சிக்கல், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.
உணவில் சீரான அளவில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் இடம்பெற்றால், அது கொழுப்பை குறைக்க உதவும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல கார்போஹைட்ரேட்கள் பொதுவாக பக்க கொழுப்பு எனப்படும் உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவும். இந்த கொழுப்புதான் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. பலவிதமான நோய்களையும் உருவாக்கக்கூடியது.
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களை உணவில் 50 முதல் 60 சதவீதம் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் சேர்க்கக்கூடாது. ஏனெனில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும்.
உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாக கரைக்க மன அழுத்தம் இல்லாத மற்றும் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே கொழுப்பையோ, உடல் எடையையோ குறைத்துவிட முடியாது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.
அதே நேரத்தில் உடல் தசையை வலுப்படுத்த விரும்புபவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளையும் சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு பிறகு ஹார்போஹைட்ரேட் நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.
பார்லி, பாப்கார்ன், தயிர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை பிரெட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, பூசணி, புரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நொறுக்கு தீனிகள், குளிர்பானம், ஜஸ்கிரீம், சாக்லெட் போன்ற சிம்பிள் காம்ப்ளக்ஸ் உண்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது.