என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கந்துவட்டி"
- கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது.
- ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 20, 2024
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்கொலை:
சூதாட்டக் கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை…
- வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
- கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் 5-வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் திண்ணப்பன் (வயது75). இவர் தனது மனைவி மீனாள் (64), மகன் அருணாச்சலம் (35), மருமகள் லட்சுமி (30), பேரன்கள் சித்தார்த் (12), நித்தின் (7) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
திண்ணப்பன் தனது மகனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக இவரது வீடு பூட்டியே இருந்தது. வீட்டிற்குள் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றுள்ளனர். மேலும் அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வீட்டிற்கு சென்றபோது போலீசாரை தள்ளி விட்டு சிலர் தப்பி ஓடினர்.
இதனால் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று போலீசார் பார்த்தனர்.
வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
போலீசாரிடம் திண்ணப்பன் தெரிவிக்கையில், நான் தொழில் விஷயமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜாகருப்பையா என்பவரிடம் பணம் வட்டிக்கு வாங்கினேன். நானும் அவரும் 12 வருடங்களுக்கு மேல் ஒன்றாக தொழில் செய்து வருகிறோம். இதனால் அவரும் வட்டிக்கு பணம் கொடுத்தார். அதற்காக மாதந்தோறும் வட்டி தொகையை செலுத்தி வந்தேன்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை. இருந்தபோதும் அதன்பிறகு ராஜாகருப்பையா எனக்கு சொந்தமான சொத்துக்களை கட்டாயப்படுத்தி பத்திரப்பதிவு செய்து வட்டி தொகையை எடுத்துக் கொண்டார்.
கடந்த சில மாதங்களாக நான் வாங்கிய பணத்துக்கு மேலும் பணம் தர வேண்டும் என என்னை மிரட்டி வந்தார். அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் ரவி மற்றும் சரவணன் ஆகியோரை அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர்.
நான் அவசாகம் கேட்டும் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்தனர். கடந்த 17ந் தேதி இரவு எனது வீட்டிற்குள் வந்த கும்பல் எங்களிடம் இருந்த அனைத்து செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டனர். வாங்கிய கடனுக்கு பணம் எங்கே என கேட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 2 காரையும் எடுத்து சென்று விட்டனர். பின்னர் எங்களை ஒரே அறையில் அடைத்து பணம் கொடுக்கும் வரை வெளியே விடமாட்டோம் என தெரிவித்து பூட்டி விட்டனர்.
இதனால் எனது பேரன்கள் 2 பேரும் பள்ளிக்குகூட செல்ல முடியவில்லை. எங்களால் இயற்கை கடனை கழிக்க கூட இயலவில்லை. 5 பேர் கொண்ட அடியாள் கும்பல் வீட்டிலேயே முகாமிட்டு சினிமா பாணியில் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
எங்களிடம் இருந்த பத்திரங்கள், ஏ.டி.எம். அட்டை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டனர். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டிய ராஜாகருப்பையா, டிரைவர் ரவி, சரவணன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே 3 நாட்களாக ரியல்எஸ்டேட் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
- ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ துவரைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 50). தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த கணபதி மனைவி ராணி(60) என்பவரிடம் குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதற்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வட்டி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் வட்டி பணத்தில் ரூ.3,500 மட்டும் கொடுத்த ஜெயக்குமார் மீதி பணத்தை பிறகு தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராணி, அவரது கணவர் கணபதி(70), மகள் சுமதி(40), மருமகள் முத்துலெட்சுமி(38) ஆகிய 4 பேரும் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ஜெயக்குமார் அன்று இரவில் விஷம் குடித்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் விசாரணை நடத்தி ராணி, கணபதி உள்பட 4 பேர் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் தலைமறைவாக உள்ள ராணி, கடந்த ஜூலை மாதம் தெற்கு மீனவன்குளம் பகுதியை சேர்ந்த இசக்கி என்பரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர். காங்கிரஸ் பிரமுகரான அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது மருமகள் முத்துலெட்சுமி கள்ளிகுளம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
- பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (48). இவரது மனைவி சரிதா (42).
அ.தி.மு.க.வில் அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளராக பிரகாஷ் இருந்து வந்தார்.
பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் பிரகாஷ்-சரிதா தம்பதி, நேற்று முன்தினம் இரு கடிதம் மற்றும் வீடியோ பதிவை தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு மொபைல் மூலம் அனுப்பினர். பிறகு அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சரிதா தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சில தகவல்கள் தெரிய வந்தன.
பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு ரூ.100-க்கு ரூ.10 என்கிற வீதம் மாதம் தோறும் ரூ.11 ஆயிரத்தை வட்டியாக பிரகாஷ் செலுத்தி வந்துள்ளார்.
இச்சூழலில் கொரோனா காலத்தில் தொழில் முடங்கியதால் வட்டி செலுத்த முடியாமல் இருந்து வந்த பிரகாசுக்கு பல வகையில் நெருக்கடியை கொடுத்து வந்த ராஜா, ஒரு கட்டத்தில் ரவுடிகள் மூலம் மொபைல் போனில் மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இதனால் பயந்து போன பிரகாஷ்-சரிதா தம்பதி நேற்று முன்தினம் பணத்துக்காக உறவினர்கள், நண்பர்களை நாடியுள்ளனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து தம்பதியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் தலைமறைவான ராஜாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- தலைதூக்கும் கந்துவட்டி கும்பலால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
- அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என் றார்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கிராமங்கள் அதி–கம் நிறைந்த பகுதி என்பதா–லும், விவசாயிகள் அதிக–மாக வாழ்ந்துவருவதாலும் அவர்களின் குடும்ப வறு–மையை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் ஏராளமா–னோர் கடன் கொடுத்து வருகிறார்கள்.
பெண்களிடம் அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண்களிடம் பணத்தை கொடுத்து அதை தினந்தோ–றும், வாரம்தோறும், மாதந் தோறும் என அடவடியாக வசூல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி விவசாயி–கள், மீனவர்கள், பனை தொழிலாளர்கள் என அவர்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதக–மாக்கிக் கொண்டு ஒரு கும்பல் வசூலில் ஈடுபட்டுள் ளது.
கடன் கொடுக்கும் போது அரவணைப்பாக பேசும் இந்த கந்துவட்டி கும்பல் காலப்போக்கில் தங்களது மற்றொரு முகத்தை காட்டு–கிறது. தின வட்டி, வார வட்டி, மாத வட்டி என பட்டியலிட்டு பல்வேறு வழிமுறைகளில் ஏழை, எளி–யோரை மேலும் கடனாளி–யாக்கி வீதியில் நிற்க செய்து விடுகிறார்கள்.
வாங்கிய பணத்தை விட பல மடங்கு திருப்பிச் செலுத்தும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ள இந்த கிராம–வாசிகள் பலர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் குடும்பம், குழந் தைகள் உள்ளிட்டோ–ரின் நலன் கருதியும், கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு அடிபணிந்தும் யாரும் போலீசில் புகார் அளிப்ப–தில்லை.
இந்த நிலை தொடராமல் இருக்க கந்துவட்டி கும்பலி–டம் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் மாவட்ட காவல்துறையும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் கந்துவட்டி கும்பலை கண்டறிந்தும், கண்காணித்தும் அவர்களி–டம் உரிய விசாரணை செய்து கடுமையான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.இதுபற்றி அந்த பகுதி–யைச் சேர்ந்த சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ராமநா–தபுரம் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதால் மக்களின் வறுமையை பயன் படுத்தி வட்டி தொழில் செய்யும் கும்பல் கிராமப்புற பெண்களை குறி வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கி–றார்கள். அவ்வாறு வாங்கிய பணத்தை கட்ட முடியாத நபர்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கந்து–வட்டி கும்பல் அபகரித்து விடுகிறது. போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி கந்துவட்டி கும்பலால் மிரட்டப்படுகின்றனர். கந்துவட்டி கும்பலால் நிறைய பொதுமக்கள் பாதிக் கப்படுகின்றனர். இருந்த–போதிலும் போதிய ஆதா–ரங்கள் இல்லததால் நடவ–டிக்கை எடுக்க முடிய–வில்லை என்று கூறுகிறார் கள்.
பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.
- கந்து வட்டி தொடர்பாக புகார் கொடுத்த 2 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
- தனிப்படை போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ஜேசுராஜா மனைவி ஜெர்மனி (வயது 43) மற்றும் காமராஜர்புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கீதா (52) ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில், கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் புகார் கொடுத்த 2 பெண்களிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது ஜெர்மனி கூறுகையில், "எனக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவம் பார்ப்பதற்காக வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த சித்திரைஅழகு என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்கு அவர் அதிகப்படியாக வட்டி வசூலித்து வந்தார். நான் சித்திரை அழகுவிடம் வாங்கிய ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக, காமராஜர்புரம் இந்திரா நகரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி லட்சுமி (65) என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினேன். அதை சித்திரை அழகுவிடம் கொடுத்தேன். இருந்த போதிலும் அவர் "நீ கொடுத்த பணம், வட்டியில் மட்டுமே கழிந்து உள்ளது. நீ மேலும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும்" என்று மிரட்டினார். இதற்கிடையே லட்சுமியும் வில்லாபுரம் மயானக்கரை தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து என் வீட்டுக்கு வந்து, கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது அங்கு வந்த சித்திரைஅழகு, லட்சுமி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் "நீ வாங்கிய பணத்தை வட்டியும், அசலுமாக இப்போதே தரவேண்டும். இல்லையென்றால் உன்னை குடும்பத்தோடு கொன்று விடுவோம்" என்று மிரட்டி விட்டு சென்றனர்" என்றார்.
இதேபோல் புகார் செய்த காமராஜர்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கீதா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடமும் சித்திரை அழகு, லட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- ஆபாசமாக பேசி வட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.
மதுரை
மதுரை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வி (45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கினார்.
இந்த தொகைக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்தார். 2 மாதமாக வட்டியை செலுத்த முடியவில்லை.
ஆத்திரமடைந்த ஆறுமுகமும், உறவினர் பூரணமும் செல்வி வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி வட்டி கேட்டு மிரட்டினர்.
இதுகுறித்து செல்வி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி சட்டத்தில் ஆறுமுகத்தை கைது செய்தனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
காஞ்சிபுரம்:
கந்துவட்டி புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இது போன்று கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்