என் மலர்
நீங்கள் தேடியது "மாத்திரை"
- எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரையில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடக்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியர் வடிவேலு சிறப்புரையாற்றினர்.
மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம், இசிஜி, ஸ்கேனிங் மக்களை தேடி மருத்துவம், டிபி டெஸ்ட், எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்ப மருந்து மாத்திரையில் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா நேசமணி, அப்பகுதி பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் திரளானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.
மேலும் இந்த முகாமில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண் . ராமநாதனுக்கு, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பரிசோதனை மேற்கொண்டார்.
- ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.
- முடிவில் மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்–பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை சீனிவாசபுரம் காமராஜர் ரோட்டில் உள்ள லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலரும் லயன்ஸ் சங்க நிர்வாகியுமான தமிழ்வாணன், லயன்ஸ் சங்கம் மலேசியா சுந்தரம் ஜுவல்லரி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண் சிகிச்சை முகாமை முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நல்லெண்ணத்தூதுவர் முகமது ரபி தொடங்கி வைத்தார்.லயன் சங்க நிர்வாகிகள் சிவகுமார், பாலமுருககுப்தா, பார்க்கவன் பச்சமுத்து, தலைமை கண் மருத்துவர் ஞான செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி., பேசியதாவது:-
இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்ததற்கு பெருமைப்படுகிறேன். அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.
இதேபோல் சர்க்கரை நோய்க்கும் ஆரம்பத்திலே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
முகாம் நடைபெறும் சீனிவாசபுரம் லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு 2 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க உள்ளேன். வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க உள்ளது.
விடுமுறை காலத்திற்குள் அந்த பணி நிறைவடையும். புதிய கட்டிடங்களுக்கு தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து வகையான பர்னிச்சர்களையும் காவேரி லயன் சங்கம் உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு லயன் சங்கங்களும் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பரிசோதனை முகாம் மாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பரிசோதனை முடிவில் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன், செயலர் சிவ சண்முகசுந்தரம், செயலர் (சேவை) ராதாகிருஷ்ணன், பொருளாளர் மனோகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
- 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். சித்தா, ஓமியோபதி மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் பொதுமக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மேல்சிகிச்சைக்காக 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
- பொதுமக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம், திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து இலவச இருதய, சர்க்கரை மற்றும் பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி எஸ்.வி.எஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்க தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன் தலைமை தாங்கினார்.
ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் லயன் துரை ராயப்பன் முகாமை தொடங்கி வைத்தார். அரிமா சங்க சாசன தலைவர் லயன் மருத்துவர் முகம்மது ஆரிப், மண்டல தலைவர் லயன் ஸ்ரீநாத், வட்டார தலைவர் லயன் கண்ணன், பொருளாளர் லயன் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நூற்றாண்டு அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் மூத்த ஆலோசகர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 850-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும், 85- க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதில் சங்க உறுப்பினர்கள் லயன் நிஜாம் முகமது, லயன் கார்த்திகேயன், லயன் மாதவன், பொறியாளர் லயன் ரகு, லயன் மகேஷ், லயன் அகல்யா மணி , லயன் பார்த்திபன், லயன் ராஜ்மோகன், லயன் மாரியப்பன், கீழையூர் லயன் மோகன், லயன் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா சங்க செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.
- குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
- அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.
இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.
பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தந்தை வேலைக்கு போக கூறியதால் விபரீதம்
- கடந்த 4 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூரை அடுத்த தேரியான்விளையை சேர்ந்தவர் குமார். இவரது மூத்த மகன் முகேஷ் (வயது 19).
இவர், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் வருடம் படித்து வந்தார்.
இவர், கடந்த 4 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை. இந்நிலையில் இவருடைய தந்தை குமார், மகன் முகேஷை கல்லூரிக் குத்தான் செல்லவில்லை, வேலைக்காவது போ என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வருத்தத்தில் முகேஷ் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டு அவரது வீட்டின் அருகில் உள்ள பாட்டி வீட்டில் சென்று வாந்தி எடுத்தார்.
அப்போது முகேஷ் தான் மாத்திரை தின்ற தகவலை தாயாரிடம் கூறினார்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை குமார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
- மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவ சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வண்ணம் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் வீதம் 12 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.
அதன்படி முதல்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் அண்ணாநகர் 14-வது தெரு, சின்னையாபிள்ளை தெரு, ஏ.ஒய்.ஏ.நாடார் தெரு, பூமால் ராவுத்தன்கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, நாலுகால்மண்டபம் ஆகிய 6 இடங்களிலும், கும்பகோணம் மாநகராட்சியில் திருநாராயணபுரம், மேலமேடு, காசிராமன்தெரு, பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நரியம்பாளையம் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டன.
பள்ளியக்ரகாரம், டவுன்கரம்பை பகுதியில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து தஞ்சையில் அண்ணாநகர் 14-வது தெரு திறக்கப்பட்ட மையத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டலக்குழு தலைவர்கள் ரம்யாசரவணன், மேத்தா, கலையரசன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், சுகாதார பணியாளர் என 4 பேர் பணியில் இருப்பார்கள்.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.
இந்த மையங்களில் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு வெளிநோயாளிகள் சிகிச்சை, தாய்சேய் நலம், தொற்றா நோய் சிகிச்சைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
- மாத்திரை உட்கொள்ளும் நேரத்தை கவரில் குறிப்பிட்டு வினியோகம் செய்யப்பட்டது.
- நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் எப்போது, எப்படிஉட்கொள்வது? என்ற விபரம் தெரிவிக்கப்படாமல் வெறுமனே வழங்கப்படுகிறது.
இதனால் நோயாளிகள் அதனை உட்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே தனியார் மருத்துவ மனைகளில் வழங்கப்படு வதைபோல தனித்தனி கவர்களில் எந்தெந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டு வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை தெளிவான விபரங்களுடன் வழங்குவதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாத்திரைகளை தனி கவரில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தனித்தனி கவர்களில் உட்கொள்ளும் வேளைகுறித்து எழுதி வழங்கப்படுகிறது. இதனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
- போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
புதுடெல்லி:
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.
95 ஓவல் வடிவ காப்ஸ்யூல்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்குள் போதை பொருள் இருப்பது தெரிந்தது. 511 கிராம் எடையுள்ள போதை பொருள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
இதையடுத்து நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அயன் பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி அப்பெண் கடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
- உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.
நாமக்கல்:
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறு முறையான உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிடிபட்டால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதோடு, நிறுவனத்தின் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்.
அதனால், வணிகர்கள், உரிமம் பெறாமல் மருந்து பொருட்களைவிற்பனை செய்ய வேண்டாம். அதேபோல், எலிகளை கொல்லும் எலி கேக், எலி பேஸ்ட் போன்ற அனைத்து எலி மருந்துகளும், கடைகளில் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை மளிகை கடை உள்ளிட்ட எந்த ஒரு கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த கர்மன்ப்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரமேஷுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் நஷ்டத்தை சரிகட்ட தனது மைத்துனர். பூனச்சந்திரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து ரமேஷ், பூர்ண சந்திரனுடன் சேர்ந்து கலப்படம் செய்யப்பட்ட அல்ட்ரா சோல்ம் என்ற ஆபத்தான போதை மாத்திரைகளை உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள பல மருந்து நிறுவனங்களில் இருந்து வரவழைத்தனர்.
இதற்கு அம்பர்பேட்டை சேர்ந்த ராகவ ரெட்டி (வயது 55) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தார்.
மருந்து கடைகளில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகளை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனர்.
மேலும் இவர்களுக்கு மருந்து நிறுவனங்களில் இருந்து சட்ட விரோதமாக மருந்துகளை கடத்தி வருவதற்கு ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமணன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நதீம், டெல்லியை சேர்ந்த அருள் சவுத்ரி ஆகியோர் உதவி செய்து வந்தனர்.
இதன் மூலம் ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.
இவர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆபத்தான போதை மருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் அடிமையாகினர். போதை மருந்து விற்பனை குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து விற்பனை குறித்து துல்லியமான தகவலை பெற்றனர். ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் எங்கு எங்கு போதை மருந்து விற்பனை செய்கிறார்கள் என கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மலாக் பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த ரமேஷ், ராகவா ரெட்டி ஆகியோரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது
- குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ரத்தசோகையில் உடல் சோர்வு ஏற்பட்டு செயல்திறன் குறைவாகும்.
மேற்கண்ட குறைபாடுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.
நாளை (17-ந்தேதி) 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை முழுமையாக நல்ல முறையில் செயல்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித்துறை ஊட்டச்சத்துதுறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாற்று திறனாளிகள்துறை, சமூக பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம், மற்றும் ஊரகவளர்ச்சித்துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியில் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது உள்ள கல்லூரி செல்லா பெண்களுக்கு, ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிடவேண்டும். நமது மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட 5,58,766 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 75,043 பேரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் அன்று உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு வருகிற 24-ந்தேதி மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.