என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சி.சி.டி.வி."
- போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை
- ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரி வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் நேற்று ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக போலீசாருக்கு புகார் வந்தது. அஞ்சு கிராமம் வாரியூர் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜின், கன்னியாகுமரியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரி வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இன்று காலை வேலைக்கு வந்த ஜார்ஜின், வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. இதுகுறித்து அவர், கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஜார்ஜனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 3 மாதங்களில் மட்டும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் திருடர்களின் உருவம் சிக்கியுள்ளதால் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு பைக் திருடர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.
- கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 60). விவசாயியான இவர் நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.அப்போது சிவன்மலை பகுதியில் சென்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி., கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி தற்போது காங்கேயம் பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஸ்கூட்டியில் செல்லும் விவசாயி மீது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதுவதும், பின்னர் சுமார் 100 அடி தூரத்திற்கு விவசாயியை இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செல்வி தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வர இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
- பின்னால் நின்ற நபர் ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தர கூறி உள்ளார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமம் கண்ணப்பர் தெருவில் வசிப்பவர் செல்வி. இவர் தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வருவதற்காக புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஏ.டி.எம் சென்று வருமாறு தனது அண்ணன் மகன் இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
அங்கு சென்று அவர் பணம் எடுத்தபோது, அவரது பின்னால் நின்ற நபர் அவரது கார்டு ரகசிய எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாதது போல ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி உள்ளார். அப்போது 2 பேரின் கார்டு களும் தவறி கீழே விழுந்ததும், மர்ம நபர் இசக்கிதுரையின் கார்டை மாற்றி எடுத்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அந்த கார்டில் இருந்து 2 முறை தலா ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கி துரை தன்னிடம் இருந்த கார்டை எடுத்து பார்த்தபோது அது ஈரோட்டை சேர்ந்த நபரின் கார்டு என்பது தெரியவந்தது. உடனே வங்கிக்கு சென்று அங்கிருந்தவர்கள் மூலம் கார்டு உரிமையாளருக்கு போன் செய்தபோது, மர்ம நபர் அந்த கார்டின் உரிமையாளரிடம் இருந்து இதேபோல் கார்டை ஏமாற்றி பறித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் குறித்து கடையநல்லூர் போலீசில் இசக்கிதுரை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். கடையநல்லூர் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சங்கரலட்சுமி மேலப்புலியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- அமீர் ஜான், தென்காசி மேல பாறையடியை சேர்ந்த சிறுவனும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
தென்காசி:
நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கரலட்சுமி(வயது 49). இவர் கடந்த 7-ந்தேதி தென்காசி அருகே மேலப்புலியூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் மேலப்புலியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சங்கர லட்சுமியின் கை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தென்காசி மவுண்ட் ரோட்டை சேர்ந்த முகமது அமீர் ஜான் (வயது 19) மற்றும் தென்காசி மேல பாறையடியை சேர்ந்த சிறுவன் ஒருவனும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவ ர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
- தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.
- காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடி பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்