search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.
    • பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.

    பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர்.

    பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நித்யஸ்ரீ சிவனின் திறமை மற்றும் கடின உழைப்பு எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
    • கார் பந்தயம், பேனா சிலை, நாணய வெளியீடு என பணத்தை வீணடிக்கின்ற தி.மு.க. அரசு.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    முந்தையை திமுக ஆட்சிக் காலத்தில் 2009-ம் ஆண்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டபோது, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்ததோடு, தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

    தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் இது தொடர்பாக அரசு மருத்துவர்களால் 2020-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசு மருத்துவர்களின் கோரிக்கையினை 6 வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பினை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, அரசு மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல், புதிதாக அரசாணை எண் 293-ஐ வெளியிட்டு, அதன்படி மருத்துவர்களுக்கு கூடுதல் படிகள் வழங்கப்படும் என்றும், அரசாணை என் 354-ஐ நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கினை தாக்கல் செய்துள்ளது. இதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், இந்த மனுவிற்கு 28-10-2024-க்குள் பதில் மனு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெய்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தி.மு.க. அரசோ, வாக்குறுதியையும் நிறைவேற்றமாட்டோம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினையும் மதிக்கமாட்டோம், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரையையும் செயல்படுத்தமாட்டோம் என்ற மன ரீதியில் இறுமாப்புடன் செயல்பட்டு வருவதும், கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அரசு மருத்துவர்களை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற வைப்பகும் ஜனநாயகத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது.

    கார் பந்தயம், 133 அடி பேனா சிலை, நாணய வெளியீடு என பணத்தை வீணடிக்கின்ற தி.மு.க. அரசுக்கு 19,000 அரசு மருத்துவர்களுக்கான ஊதிய மற்றும் பதவி உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்துவதில் என்ன தயக்கம் என்று அரசு மருத்துவர்கள் கேட்கிறார்கள்.

    எனவே அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்துதல் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவற்றில் எது அரசு மருத்துவர்களுக்கு சாதகமாக உள்ளதோ அதளை செயல்படுத்த தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புலம்பெயர் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த் கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ மாகாணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார்.

    சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புலம்பெயர் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடனம், சிலம்பம் என பாரம்பரிய முறைப்படி முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சிகாகோவில் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் 'இனிவரும் உலகம்' புத்தகத்தில் உள்ள கருத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை" என்று பதிவிட்டுள்ளார்.


    • வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.
    • காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி உள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜூக்கு அன்பின் வாழ்த்துகள்.

    பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

    பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

    தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக்கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தமிழர்களை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

    அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!

    தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்! என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள்,
    • தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது.

    சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    பார்முலா 4 கார் பந்தயத்தை அமோக வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள்!

    செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, தமிழ்நாடு சர்வதேச சர்ப் ஓபன் 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா ஆகியவற்றை வெற்றியாய் நடத்தி முடித்து, தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மூலோபாய முதலீடுகளுடன், நாங்கள் நிகழ்வுகளை மட்டும் நடத்தவில்லை - இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக இருக்கிறோம். அதனால்தான் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

    வரம்புகளை உயர்த்தி, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உயர்த்துவோம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


    • பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
    • பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார்.

    அங்குள்ள சான்பிரான்ஸ் சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ், ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 30-ந்தேதி பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

    ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்கால திறன் ஆகியவற்றில் ஏ.ஐ. கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

    அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

    சான்பிரான்சிஸ்கோ நகரில் 5 நாட்கள் தங்கி இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (2-ந்தேதி) சிகாகோ நகரம் செல்கிறார். அங்கு அவருக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    • அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன.
    • வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.

    அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * உழைப்பு, திறமை மற்றும் தன்னம்பிக்கையால் தமிழ் வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர்.

    * தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் என உரிமையோடு கேட்கிறேன்.

    * தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அமெரிக்கா நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்த வேண்டும்.

    * அமெரிக்காவில் தங்கிப் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.

    * இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

    * அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன.

    * வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.

    * அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.

    * இந்தியா- அமெரிக்கா உறவு இருநாட்டு உறவல்ல, இது இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக உள்ளது என்றார்.

    • ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது.
    • கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை பரிசாக அளித்து வருகிறார்.

    சென்னை:

    அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த "தடம்" பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் விவரம் வருமாறு:-

    * திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை

    * விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை).

    * நீலகிரியில் இருந்து தோடா எம்பிராய்டரி சால்.

    * பவானியில் இருந்து பவானி ஜமுக்காளம்.

    * புலி காட்டில் இருந்து பனை ஓலை ஸ்டாண்ட்.

    தமிழ்நாட்டின் கை வினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சி 'தடம்'.

    தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்கானவும் உருவாக்கப்பட்டது 'தடம்' திட்டம்.

    பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல், கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

    பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம்.

    அதேபோல் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது.

    'தடம்' திட்டத்தின்கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை பரிசாக அளித்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
    • முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இன்றுடன் 2005 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.

    ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் இல்லை.

    முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் எப்படி ஆதரிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்? எதிர்தரப்பினரின் கருத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு எதிர்மறையாக வினையாற்ற இந்து சமய அறநிலையத்துறை தயாராக இல்லை.

    முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

    இதுவரை ரூ.6,750 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது.

    கோவில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் மத்திய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோவிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோவிலில் டெபாசிட் செய்வதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் கூறினார். மேலும் ரூ.15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோவில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    ×