search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்பவனி"

    • அன்னையின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் எழிலார்ந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்.

    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்னையின் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடியை பக்தர்கள் எடுத்துச் செல்ல, அலங்கரிக்கப்பட்ட அன்னை யின் சிறிய சுரூபத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது.

    கொடி ஊர்வலம் கொடி மரத்தை வந்தடைந்ததும் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி அடிகளார் திருக்கொ டியை புனிதம் செய்து அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்க மாக கொடியேற்றி வைத்தார்.

    கொடி ஏற்றப்பட்ட போது பக்தர்கள் மரியே வாழ்க என குரல் எழுப்பினர்.

    அதிர்வேட்டுகள் முழங்கின அதன் பின்னர் அன்னையின் பிறப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் அமல வில்லியம் , அன்புராஜ், ஆன்மீக தந்தையர் அருளா னந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு பங்குத்த ந்தையர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து அன்னையின் பிறப்பு பெருவிழாவை ஒட்டி தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி பல்வேறு அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்படும்.

    இன்று மாலை மரியா -இறை நம்பிக்கையின் நங்கூரம் என்ற தலைப்பில் அரிமளம் பங்கு தந்தை தஞ்சை டோமி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    நாளை மாலை மரியா -சீடத்துவத்தின் அடையாளம் என்ற தலைப்பில் திருச்சி புனித வளனார் கல்லூரி அதிபர் பவுல்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து அன்று இரவு 8.30மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு, தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைப்பார் . மறுநாள் செப்டம்பர் 9ம்தேதிசனிக்கிழமை காலை 6.மணிக்கு திருவிழா திருப்பலி கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் நிறைவேற்றுவது டன் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.அன்னையின் பிறப்பு பெருவிழாவை ஒட்டி பூண்டி மாதா பேராலயத்தில் நாடெங்கிலும் இருந்து ஏராளமான மக்கள் குவிந்திரு ந்தனர். அன்னையின் பிறப்பு பெருவிழா முன்னிட்டு கோவில்,கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு இருந்தது. கொடியேற்று நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டு ப்பள்ளி போலீசார் செய்திருந்தனர். பூண்டி மாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திவ்ய நற்கருணை ஊர்வலம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்யநற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாதாவிற்கு கிரீடம் அணியப்பட்டு தேர் பவனி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாதா குளத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் திருப்பலி மேடையில் இருந்து திவ்ய நற்கருணை பவனியாக எடுத்து வரப்பட்டு பின்னர் அங்கு உள்ள வாகனத்தின் மூலம் சிலுவை பாதை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் வைத்து மறையுறை, பக்தர்களுக்கு திவ்யநற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

    ×