என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331896
நீங்கள் தேடியது "வேலை நிறுத்தம்"
மதுரை மாநகராட்சி ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
மதுரை
மதுரை மாநகராட்யில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை (30-ந் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும்.தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.கொரோனா கால ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
இதையொட்டி மதுரை தொழிலாளர் நலத்துறை மண்டல அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்வு எட்டப்படவில்லை.
அதன்பின்னர் 2-ம் கட்டமாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
மேயர் இந்திராணி தலைமையில் 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அம்சராஜ், பூமிநாதன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி பணியா ளர்கள் நலன் தொடர்பான பேச்சுவார்த்தையை ஆணையர் தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு, தொழிற்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.மேலும் இக்கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்ப டவில்லை.
இதுபற்றி பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், தூய்மை பணியாளர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 3-ம் கட்ட மாக நடந்த பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
மாநகராட்சி நிர்வாக த்திடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.அவ்வாறு இல்லையெனில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை (30-ம் தேதி) முதல் வேலை நிறுத்தத்தை தொடருவது உறுதி. இந்த வேலை நிறுத்தத்தில் தூய்மை பணியாளர்கள், பொறியியல் பிரிவு தொழிலாளிகள் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் என்றனர்.
இந்த போராட்டம் நடைபெற்றால் குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர் அடைப்பு சரி செய்தல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்தல் வெகுவாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X