என் மலர்
நீங்கள் தேடியது "tag 94711"
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
கன்னியாகுமரி:
திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர் முகமது சயாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரம் புறப்பட்டார்.
தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். புலியூர்குறிச்சி என்ற இடத்தில் சென்ற போது, எதிரே ஒரு கார் வந்தது.அந்தக் கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் விக்னேஷ் மற்றும் முகமது சயாஸ் தூக்கி வீசப்ப ட்டனர். பலத்த காயத்துடன் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு 2 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளி த்தும் பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தக்கலை போலீசில் முகமது சயாஸ் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்த தோடு அதனை ஒட்டி வந்த கேரளபுரம் சரல்விளையைச் சேர்ந்த விேனாத் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது.
- இந்த விபத்தில் பெண் காவலர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் புளியமரத்தில் மோதியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
திருச்சியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விருதுநகரைச் சேர்ந்த டிரைவர் முனியசாமி ஓட்டி வந்தார். இதில் 43 பேர் பயணம் செய்தனர்.
மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி அருகே வரும் போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பெண் காவலர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டனர். விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற முதியவர் தவறி விழுந்து சாவு
- தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள காடுவெட்டி முகமாற்றூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க நாடார் (வயது 72). இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல திட்டமிட்டார். வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், கோழிப்போர்விளை சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே திருவனந்தபுரம் மூர்த்தி கோணம் பகுதியைச் சேர்ந்த நந்து என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் தங்கநாடார் லிப்ட் கேட்டு உள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட நந்து, அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
அமராவதி பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, சாலையில் பள்ளம் இருந்தது. இதனை கடைசி நேரத்தில் கவனித்த நந்து, திடீரென பிரேக் போட்டு உள்ளார்.
அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த தங்க நாடார் எதிர்பாராத விதமாக தவறி கீேழ விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சை க்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்க நாடார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகள் மேரி ஐடா புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நள்ளிரவு 12 மணி அளவில் ஆம்னி பஸ் நான்குவழிச்சாலையில் சென்றது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி எதிர்புறமாக நெல்லைக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் கவிழ்ந்தது.
கயத்தாறு:
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது.
பஸ்சை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்த பாண்டி(வயது 32) என்பவர் ஓட்டிச்சென்றார். பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நள்ளிரவு 12 மணி அளவில் ஆம்னி பஸ் நான்குவழிச்சாலையில் சென்றது. அங்குள்ள அரசன்குளம் பகுதியில் சென்றபோது திடீரனெ பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி எதிர்புறமாக நெல்லைக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் கவிழ்ந்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள புத்தன்கடையை சேர்ந்த ஜீசஸ் ராஜன்(வயது 47), நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளையை சேர்ந்த சிவராமன்(28) ஆகிய 2 பேரும் பஸ்சுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர்.
பஸ் டிரைவரான பாண்டியின் கை மற்றும் கால்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் பாண்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் பாண்டி உயிரிழந்தார்.
இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்சின் இடிபாடுகளில் இருந்து குழந்தைகள், பெண்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நெல்லை, கோவில்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சென்னை புதுப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த குமார்(36), குரோம்பேட்டையை சேர்ந்த விநாயக்(30), செங்கல்பட்டை சேர்ந்த யுகந்தி(30), திருவட்டாறு புத்தன்கடையை சேர்ந்த விக்டர்(51), மாணிக்கநகரை சேர்ந்த சூரியபிரகாஷ்(25), மாதாங்கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்(32) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டம் கஜூவா கிராமத்தில் உள்ள ஃபதேபூர்- கோரக்பூர் சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்கான லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் ரவி ஸ்ரீவஸ்தவா (40), வந்தனா ஸ்ரீவஸ்தவா (70), ரத்தன் ஸ்ரீவஸ்தவா (35), மற்றும் கார் டிரைவர் என அடையாளம் காணப்பட்டனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை:
தீபாவளி நாட்களில், பட்டாசு வெடி விபத்து ஏதாவது நடந்தால் அதனை சரி செய்ய தீயணைப்பு படையினர் தயாராக இருப்பார்கள். ஆனால், நேற்று பட்டாசு வெடி விபத்துகள் எதுவும், பெரியளவில் நடக்கவில்லை.
ஆனால், அவினாசி ரோடு பழைய மேம்பாலம் அருகே உள்ள கடலைக்கார சந்து எலக்ட்ரிக்கல் கடையில், நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடைகள், வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள அந்த பகுதியில், தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்களும், குடியிருப்போரும் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடினர். இதுகுறித்து உடனே தெற்கு தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் காந்திபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு வாகனமும் உதவிக்கு வரவழைக்கப்பட்டது.
வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்திலேயே சந்திர வன்னியம் மன்னட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
- வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் லிங்கேஸ்வரப்பெட்ட பகுதியை சேர்ந்தவர் சந்திர வன்னியம் மன்னட்டி (வயது 33).இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் சென்னை பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திர வன்னியம் மன்னட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யுள்ள காமந்திரப்பள்ளி பகுதியை சேர்ந்த நாராயணசாமி (31) என்ற வாலிபர் தொரப்பள்ளி-கொத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- குமார் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் தனது மனைவி சரஸ்வதி (30) மற்றும் அவரது குழந்தைகள் யாழினி (11), யமுனா (13), தனுஷ்கா (3) தட்சணா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கரையான்பட்டி பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 5 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் யாழினிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு யாழினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மணப்பாறை கரையான்பட்டி பகுதியைச் சேர்ந்த செகப்பாயி (60) என்ற பெண்மணியும் காயமடைந்தார். இது தொடர்பாக காரை ஓட்டிச் சென்ற மண்ணச்சநல்லூர் பழைய நல்லூர் பிடாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையத்தை அடுத்த மந்திரியார்ஓடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மகன் பிரகாஷ் (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று பிரகாசின் பெற்றோர் வெளியூர் புறப்பட்டு சென்றனர். மகனை பக்கத்து வீட்டை சேர்ந்தவரிடம் ஒப்படைத்து சென்றிருந்தனர். இதற்கிடையே அவர் தனது விவசாய நிலையத்தை உழுவதற்காக சென்றார். அவருடன் பிரகாசும் டிராக்டரில் சென்றிருந்தார்.
உழவுப்பணி நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் அமர்ந்திருந்த பிரகாஷ் தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மணி அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வெங்காய மண்டியில் வேலை பார்த்து வருகிறார்.
- அவருக்கு முன்னால் சென்ற லாரியை மணி முந்தி செல்ல முயன்றார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வசித்து வருபவர் மணி (வயது 36). இவருக்கு திருமணமாகி சித்ரா (25) என்ற மனைவி உள்ளார். மணி அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வெங்காய மண்டியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உடையாப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு முன்னால் சென்ற லாரியை மணி முந்தி செல்ல முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் உரசியதில், அவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து போன மணியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினி டெம்போ மோதியது
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு விபத்துகள் நடந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் நடந்த விபத்துகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் அந்த வழியாக வந்த மினி டெம்போவை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மினி டெம்போவின் டிரைவர் டோரை திறந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் மினி டெம்போ மீது மோதியதுடன் முன்னால் சென்ற மற்றொரு மொபட் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஓடையில் விழுந்தனர். அவர்களுக்கு உடல், தலை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியானவர்கள் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர்.
விசாரணையில் பலியானதில் ஒருவர் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியை சேர்ந்த சகாயபெர்வின் (வயது 21) என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய மினி டெம்போவையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பஸ்ஸை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதல்
- இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் நேசமணி இவ ரது மகன் ஜெரின் (வயது31).கட்டிட தொழிலாளி.
இவர் தனது நண்பர் பூஞ்சான்விளையைச் சேர்ந்த ஜெபிஷன் (24) என்பவருடன் நாகர்கோ விலுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினர்.
தோட்டியோடு அடுத்த வில்லுக்குறியில் வந்த போது முன்னால் சென்ற பஸ்ஸை ஜெபிஷன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிரே பார்சல் ஏற்றி வந்த லாரியும் பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஜெரினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த ஜெபிஷன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெரின் உறவினர் சிசில்தங்கம் (55) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கினர்.
- தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
தாதியா:
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியது. சீதாபூர் மற்றும் உபரியா கிராமங்களுக்கு இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் மைனர் குழந்தைகள் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய லாரி ஓட்டுநர், சிருலா பகுதியில் உள்ள சுங்கச் சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் ஆதார் அட்டை அடிப்படையில்,குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.