search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Take charge"

    • குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    • புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக பணியாற்றி வந்த குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் தலைமை மின் பொறியாளர் குப்புராணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார்.
    • இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குமாரபாளையம் நகராட்சி தலைவர் சஷ்டி விஜயகண்ணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் ஆனதையடுத்து புகார் கூறப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

    புதிய எஸ்.பி. நியமனம்

    தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் இன்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறையின் அறிக்கை யின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 9498101775 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய டி.எஸ்.பி.யாக குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த அசோக் புளியங்குடி உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். இவரது மனைவி தனுஷியா தென்காசியில் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணி புரிகிறார்.

    புதிதாக பொறுப்பேற்று கொண்ட டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ×