search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac bottle"

    • மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

    கோவை:

    காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், தடையை மீறி மாநகரில் மது விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

    • கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர்.
    • அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

    கோத்தகிரி 

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

    அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
    • வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் 75 சதவீத காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி பாட்டில்களை பொது இடங்களில் வீசிவிட்டு செல்வதை தவிா்க்க காலி மதுபான பாட்டில்களை சேகரிக்கும் மையம் 15 இடங்களில் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் கடந்த மே 15-ந் தேதி முதல் விற்பனை செய்யப்படும் மதுபான புட்டிகளின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    காலி பாட்டில்களை எந்தவொரு மதுபான கடையிலும் கொடுத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஜூலை 31-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களில் 75 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாஸ்மாக் மதுபாட்டிலில் நத்தை கிடந்ததால் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூர்:

    அரியலூரில் இருந்து கள்ளங்குறிச்சி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று மதியம் கடை திறந்த சிறிது நேரத்தில் அரியலூரை சேர்ந்த தொழிலாளியான அய்யப்பன் (வயது 40) என்பவர் மது பாட்டில் ஒன்று வாங்கினார். இதனையடுத்து அவர் வாங்கிய பாட்டிலில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? என்று பாட்டிலை பார்த்தார். .

    அப்போது அந்த மதுபாட்டில் உள்ளே நத்தை ஒன்று செத்து கிடந்ததை கண்ட அய்யப்பன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் நத்தை செத்து கிடந்த மது பாட்டிலை காண்பித்து அய்யப்பன் முறையிட்டார். அப்போது ஊழியர்கள் உற்பத்தி செய்கிற இடத்திலேயே நத்தை விழுந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து, அங்கு மதுபாட்டில்கள் வாங்க வந்த மற்றவர்களும் இதுகுறித்து கேட்டனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அய்யப்பன் அந்த மதுபாட்டிலுடன், அதனை வாங்கியதற்கான ரசீதை ஊழியர்களிடம் வாங்கி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். மதுபாட்டிலில் நத்தை செத்து கிடந்தது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    ×