என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tejaswi Yadav"
- ஷூ கவரை அமைச்சர் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
- இப்போது நீங்கள் பீகாரின் சுகாதார அமைப்பை கற்பனை செய்து பாருங்கள்.
பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் அமைச்சருக்கு சர்ஜிக்கல் தொப்பியை கொடுப்பதற்கு பதிலாக ஷூ கவரை கொடுத்துள்ளனர். அமைச்சரும் அதனை கவனிக்காமல் ஷூ கவரை தலையில் அணிந்துள்ளார்.
ஷூ கவரை அமைச்சர் அணிந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கீழ்கண்ட படத்தில் இருப்பவர் பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே. சர்ஜிக்கல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை சுகாதார ஊழியர்கள் அவருக்கு கொடுத்துள்ளனர். அமைச்சரும் எதுவும் தெரியாமல் ஷூ கவரை அணிந்துள்ளார். இப்போது நீங்கள் பீகாரின் சுகாதார அமைப்பை கற்பனை செய்து பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
तस्वीर में दिख रहे शख़्स बिहार के मा॰ स्वास्थ्य मंत्री श्री मंगल पांडे जी है।स्वास्थ्य विभाग के कर्मियों ने अस्पताल में इन्हें सर्जिकल हेड कवर की बजाय सिर पर शू-कवर पहना दिया। मंत्री जी को भी अंतर मालूम नहीं।अब आप बिहार की स्वास्थ्य व्यवस्था की बस कल्पना करिए। ये बिहार के अब… pic.twitter.com/kFq2t5lIiY
— Tejashwi Yadav (@yadavtejashwi) October 21, 2024
- ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது.
- இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.
பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.
ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆற்றின் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் இடிந்து பாலத்தின்பகுதி தரைமட்டமாகியுள்ளது. இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.
முன்னதாக நேற்று முந்தினம் வியாழக்கிழமைதான் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
- படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார்.
மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.
தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என திமுக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.
இந்நிலையில், பிரதமரின் தியான நிகழ்ச்சி குறித்து பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "படப்பிடிப்புக்காகவே மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். தியானம் செய்ய அல்ல. கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, "பிரதமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
"சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என தெரிவிக்கப்பட்டது.
மும்பை:
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், தனது தந்தை லாலு பிரசாத் யாதவுடன் இன்று மும்பை வந்துள்ளார்.
இந்நிலையில், நாங்கள் தந்த அழுத்தம் காரணமாகவே சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளனர் என பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா கூட்டணியின் 2வது கூட்டம் நடைபெற்றதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மத்திய அரசு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. 3வது கூட்டத்தில் எல்லாம் முடிவானதும் எங்கள் கூட்டணியின் பலம் முழுவதும் தெரிய வரும் என தெரிவித்தார்.
- வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களும் கிடைத்தன.
- வழக்கில் இன்று ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார்.
அப்போது ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிலத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சமாக நிலத்தை வாங்கி தனது குடும்பத்தினரின் பெயரில் லாலு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களும் கிடைத்தன.
இந்த வழக்கில் இருந்து லாலு, ராப்ரிதேவி டெல்லி கோர்ட்டில் ஆஜராகி சம்மன் பெற்றார். மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.
பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் இந்த ஊழல் தொடர்பாக கடந்த மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு பிறகே அவர் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இருந்தது.
இந்நிலையில் ரெயில்வே பணி நியமனத்தில் நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் இன்று ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இதைதொடர்ந்து அவர் மத்திய டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை 10.45 மணிக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தேஜஸ்வி யாதவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்